சனி, 10 ஆகஸ்ட், 2019

BBC : காஷ்மீர் ஸ்ரீநகரில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம்


ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படதை எதிர்த்து ஸ்ரீநகரில் வெள்ளிக்கிழமை மாலை போராட்டம் வெடித்தது. இந்திய அரசின் முடிவுக்கு எதிராக மக்கள் வீதிகளில் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.
அப்போது அவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தியதில் பலர் காயடைந்தனர்.
இந்தப் போராட்டத்தில் எத்தனை பேர் உயிரிழந்தனர் மற்றும் காயமடைந்தனர் என்ற விவரம் இன்னும் தெரியவரவில்லை. < பொதுவாக, இந்திய அரசும், சில இந்திய ஊடகங்களும் காஷ்மீரில் அமைதி நிலவுவதாகக் கூறிவருகின்றன.
ஆனால், அது முற்றிலும் உண்மையல்ல என்பதை இந்தக் காணொளி உணர்த்துகிறது.
"இந்திய அரசமைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை.இனியும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்" என்று போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்தனர்.
"நாங்கள் காஷ்மீரிகள் அனைவரும் வீதிகளில் திரண்டிருக்கிறோம். எங்களுக்கு இந்திய அரசாங்கத்திடம் இருந்து விடுதலை வேண்டும்" என போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில் சர்வதேச ஊடகங்கள் காஷ்மீரில் போராட்டம் வெடித்ததாக கூறும் செய்திகள் பொய் என்றும் அவை ஜோடிக்கப்பட்டவை என்றும் உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகர் மற்றும் பாராமுல்லா பகுதிகளில் சிறயளவிலேயே போராட்டங்கள் நடைபெற்றதாகவும், 20 பேருக்கு மேல் மக்கள் யாரும் கூடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: