சனி, 10 ஆகஸ்ட், 2019

வைகோ .. அமித்ஷாவின் கண்ணசைவில் பேசுவதற்கு அதிக நேரம் பெற்றார் ...?


Adv Manoj Liyonzon : அரசியல் தரகு என்பது யாதெனில்
பிரிவு 370ஐ ரத்து செய்வதற்கு தோதுவாக ஜம்மு காஷ்மீர் அரசு ஜூன் 2018ல் பாஜகவால் கலைக்கப்பட்டதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த பிடிபி கட்சித் தலைவர் மெஹபூபா முஃப்தியையும் பாஜகவையும் குற்றம் சாட்டுவதை விட்டுவிட்டு, ஏற்கமுடியாத சில தவறுகளை செய்தாலும், ஆட்சியிருக்கும்வரை காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை பாதுகாத்த காங்கிரசை, அதன் கடந்தகால தவறுகளுக்காக CULPRIT என்று வைகோ குற்றம் சாட்டுகிறாரே
மதச்சார்பற்ற இந்தியாவில் 1998ல் மதவாத பாஜக ஆட்சியை அமைத்த வாஜ்பாயை மனிதப் புனிதராக நம்மிடையே அறிமுகம் செய்த வைகோ தானே CULPRIT
அப்போது பாஜவுடன் கூட்டணி வைத்து அவர்களுக்காக வாக்கு கேட்டு வந்த வைகோ தானே பெரிய CULPRIT

குஜராத் இஸ்லாமிய இன அழிப்பை புறந்தள்ளிவிட்டு 2014ல் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைய அவர்களுடன் கூட்டணி வைத்து அவர்களுக்காக நம்மிடையே வாக்கு கேட்டு வந்த வைகோ தானே THE GREAT CULPRIT
உண்மை இவ்வாறிருக்க, 05/09/2019 370ஐ ரத்து செய்த பாஜகவை குற்றம் சாட்டுவதை விட்டுவிட்டு, CONGRESS IS THE CULPRIT என்று மடைமாற்றிவிட்டதன் பின்னணியில் இப்படி பேசுவதற்குமுன் முதலாவதாக நரேந்திர மோடியை சந்தித்துவிட்டு, அமித்ஷாவின் கண்ணசைவில் நீண்ட நேரம் ஒதுக்கி வாங்கி, இப்படி பேசி மடைமாற்றிவிட்ட வைகோ தான் CULPRITகளுக்கெல்லாம் CULPRIT என்று மக்கள் சந்தேகிப்பார்களே
வைகோ முரண்பாடுகளின் மூட்டை மட்டுமல்ல
அரசியல் வேடதாரி, கபட நாடகதாரி என்றும் சந்தேகிப்பார்களே
இதைத்தான் அரசியல் தரகு என்பார்கள்
I mean Political Broking

கருத்துகள் இல்லை: