Velmurugan P
/tamil.oneindia.com :
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து வெளிமாநிலத்தவர் டிக்கெட்
எடுக்க கூட தேவையில்லை என்றும், உடனே வெளியேறுமாறும் உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக வெளிமாநிலத்தவர்
வெளியற்றப்பட்டு வருகிறார்கள். சுற்றுலாப்பயணிகள், அமர்நாத் யாத்திரைக்காக வந்தவர்கள், அங்கு தங்கி
படிக்கும் வெளிமாநில மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் என அனைத்து
வெளிமாநிலத்தவரும் உடனே ஜம்மு காஷ்மீரை விட்டு வெளியேறுமாறு அரசு
உத்தரவிட்டுள்ளது.
இதனால் பல ஆயிரம் பேர் ஜம்மு காஷ்மீர் மாநில ரயில் நிலையத்தில குவிந்து
வருகிறார்கள்.
இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஜம்மு உதம்பூர்,
கத்ரா ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் ரயில்களில் டிக்கெட் பரிசோதனை
மேற்கொள்ள வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டதால் அனைத்து வெளிமாநில பயணிகளும்
சொந்த ஊர் திரும்பிக் கொணடிருப்பதால் டிக்கெட் பரிசோதனையில் எந்த
கெடுபிடியும் காட்ட வேண்டாம் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
டிக்கெட் இல்லாமல் கூட காஷ்மீரிலிருந்து வெளி மாநிலத்தவர் வெளியேற வசதி
செய்யப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக