வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

வேலூர் திமுக கதிர் ஆனந்த் வெற்றி ! 8141 வாக்குகள் வித்தியாசம் .!

ஏ.சி.சண்முகம்திமுக - கதிர் ஆனந்த் : 4 85340 வாக்குகள் - 
அதிமுக ஏசி சண்முகம் - 477199 - 
நா தா கா -   26996<26995 dir="ltr" div="" style="text-align: left;" trbidi="on"> கதிர் ஆனந்த் 

விகடன் : தேர்தல் முடிவுகளால் ஏ.சி.சண்முகம் மிகவும் வருத்தப்பட்டார். ஏற்கெனவே, அவருக்கு ரத்த அழுத்தமும் சர்க்கரைக் குறைபாடும் இருக்கிறது. தோல்வியை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில், தி.மு.க வேட்பாளரான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வெற்றிபெற்றுள்ளார். அ.தி.மு.க கூட்டணியில் களமிறங்கிய புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், சுமார் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்திடம் தோற்றுவிட்டார். இந்த வெற்றியைத் தி.மு.க-வினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடிவருகிறார்கள். வேலூர் மக்களவைத் தொகுதிக்கு வெளியே இருக்கும் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில், இன்று ஓட்டு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 7 மணிக்கே வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்துவிட்டார் கதிர் ஆனந்த். ஒவ்வொரு சுற்று முடிவிலும் வாக்கு நிலவரம் அறிவிக்கப்பட்டபோது, நாற்காலியில் பவ்வியமாக அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார். வாக்கு எண்ணும் மையத்துக்குள் கடைசி வரை ஏ.சி.சண்முகம் வரவே இல்லை. 



<26995 dir="ltr" div="" style="text-align: left;" trbidi="on">தொடக்கத்தில் 6 சுற்றுகள் வரை சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார் ஏ.சி.எஸ். எனினும், கதிர் ஆனந்த் நம்பிக்கையோடு அமர்ந்திருந்தார்.
பிற்பகலுக்குப் பிறகு, கதிர் ஆனந்த் ஏறுமுகம் கண்டார். 21 சுற்றுகள் வரை சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் முன்னிலை வகித்தார். மாலை 4 மணிக்குப் பிறகு, கதிர் ஆனந்தின் வெற்றி உறுதிசெய்யப்பட்டது. துரைமுருகன் ஓட்டு எண்ணும் மையத்துக்கு வந்தார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், " எந்த வெற்றியையும் சாதாரணமாக நினைக்க முடியாது. ஸ்டாலின் மீது மக்களுக்கு மீண்டும் நம்பிக்கை ஊட்டுகின்ற வெற்றியாக இதைப் பார்க்கிறேன்" என்றார். அந்த நேரத்தில் அங்குவந்த அ.தி.மு.க நிர்வாகிகளிடம் பேச்சுகொடுத்தோம். < அவர்கள், " ஏ.சி.சண்முகம் காலையிலேயே வாக்கு எண்ணும் மையம் அருகே இருக்கும் தனியார் ஹோட்டலில் வந்து தங்கிவிட்டார். அவருடன் அமைச்சர் கே.சி.வீரமணி இருந்தார். நாங்கள் இங்கிருந்து அவருக்கு முன்னணி நிலவரத்தை சொல்லிக்கொண்டிருந்தோம். கதிர் ஆனந்துக்கு ஏறுமுகம் தெரிந்ததும் ஏ.சி.சண்முகமும் அமைச்சர் வீரமணியும் தங்களின் காரில் ஏறிச் சென்றுவிட்டனர். தேர்தல் முடிவுகளால் ஏ.சி.சண்முகம் மிகவும் வருத்தப்பட்டார். ஏற்கெனவே, அவருக்கு ரத்த அழுத்தமும் சர்க்கரைக் குறைபாடும் இருக்கின்றன. தோல்வியை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால்தான், ஓட்டு எண்ணிக்கை மையத்துக்குள் கடைசி வரை வராமலேயே இருந்தார். யாருக்கும் தெரியாமலேயே கிளம்பிவிட்டார்" என்கின்றனர் வருத்தத்துடன்

கருத்துகள் இல்லை: