மாலைமலர் : ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு
அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை
ரத்து செய்யும் மசோதா இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
புதுடெல்லி:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின்
சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்யும் மசோதா இன்று
பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.<
ஜம்மு-காஷ்மீரில் நிலவிவரும் பதற்றமான சூழல் தொடர்பாக மத்திய உள்துறை
மந்திரி அமித் ஷாவுடன் பிரதமர் மோடி இன்று காலை முக்கிய ஆலோசனை நடத்தினார்.
பின்னர், இன்று பாராளுமன்ற மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடும் எதிர்ப்புக்கு இடையில் 4 மசோதாக்களை அமித் ஷா அறிமுகப்படுத்தினார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்ய வகை செய்யும் மசோதா உள்ளிட்ட மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூச்சலிட்டனர்.<

உறுப்பினர்களை சமாதானப்படுத்தும் சபாநாயகர் வெங்கையா நாயுடுவின் முயற்சி
பலனளிக்காத நிலையில் அவை சற்று நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.<
இதற்கிடையில்,
சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவை ரத்து செய்யப்பட்டதாக ஜனாதிபதி ராம்நாத்
கோவிந்த் பிறப்பித்த உத்தரவின் நகலும் ஊடகங்களில் அறிவிக்கையாக
வெளியாகியுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக