சென்னை,இரண்டாண்டுகளில் அ.இ.
அ.தி.மு.க. ஆட்சியின்
அவலத்தை ஆனந்தவிகடனைச் சுட்டிக்காட்டி தி.மு.க.
தலைவர் கலைஞர் அவர்கள் இன்று முரசொலியில் எழுதி இருப்பதாவது:
கேள்வி:- ஜெயலலிதாவின்
இரண்டாண்டு கால ஆட்சிப் பற்றி தமிழக ஏடுகள் எல்லாம் பயந்து கொண்டு
பாராட்டினாலும், அரசின் குறைபாடுகளை அவர் களால்கூடச் சொல்லாமல் தவிர்க்க
முடியவில்லையே?
கலைஞர்:- உண்மைதான்;
இந்த வார ஆனந்த விகடன் இதழில் அம்மையாரின் ஆட்சி யைப் பற்றிப் பெரிதும்
பாராட்டியிருந்த போதிலும், அவர்களாலும் சிலவற்றைச் சொல்லாமல் தவிர்க்க
முடியவில்லை.
குறிப்பாக ஆனந்தவிகடன் சுட்டிக்காட்டியிருக்கும் அம்சங்கள் வருமாறு :-
- சாதனை புரிந்த ஈராண்டு; சரித்திரம் பேசும் பல்லாண்டு என்கிறார்கள். ஆனால் ஜெயலலிதா சொல்வதை வழிமொழியும் மனநிலையில் தமிழக மக்கள் இல்லை. விண்ணை எட்டும் விலைவாசி, சிறு மற்றும் பெருந்தொழில்களைக்கூட மோசமாக்கி நாசமாக்கிய மின்வெட்டு. இந்த இரண்டுக்கும் மத்தியில் கொண்டா டும் சூழ்நிலை மக்களுக்கு இல்லை. விலை வாசி, மின் விநியோகம், சட்டம் ஒழுங்கு இந்த மூன்று துறைகளிலும் முத்திரை பதித்த ஆட்சியைத் தான் பொது மக்கள் சிறப்பான ஆட்சி என்று ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், அந்த மூன்றி லுமே ஸ்கோர் செய்யவில்லை ஜெ. அரசு.
- அரசு அலுவலரிடமிருந்து ஒரு கையெழுத்தோ, கார்டோ வாங்கு வதற்குள் அப்பாவிகள் வாழ்க்கையே வெறுத்து விடுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரு மத்திய தர வர்க்கக் குடும்பம் ஒரு மாதத்துக்குத் தேவையான உணவுப் பொருள்களை 2,500 ரூபாய்க்கு வாங்கியது என்றால், இன்று அதன் சந்தை மதிப்பு விலை 6,000 ரூபாய்க்கும் மேல். இந்த வர்த்தகத்தை அரசாங்கம் கண்டுகொள்வதே இல்லை.
- 30 அமைச்சர்களும் யோக்கியசிகாமணிகளாக அமைவது குதிரைக் கொம்புதான். ஆனால் சரிபாதி யாவது சரியானவர் களாக இருக்க வேண்டாமா? ஒரு சுயநல வட்டத்தை உருவாக்கிக் கொண்டு, சொந்தக் கட்சிக்காரர்களைக்கூட மதிக்காமல், பசை காட்டி னால்தான் காரியம் நடக்கும் என்று செயல்படும் மந்திரிகளை அறிந்துகொள்ள வேண்டாமா?
- அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் திருடர்கள் ஆந்திராவுக்கு ஓடி விட் டார்கள் என்று ஜெயலலிதா சொன்னார். ஆனால் அங் கிருந்த திருடர்கள் எல்லாம் இங்கு வந்துவிட்டதுபோல கடந்த இரண்டு ஆண்டு களில் திருட்டு, கொள்ளை, வழிப்பறிகள் முற்றுப்புள்ளி இல்லாமல் தொடர்ந்தன. தொடர்ச்சியாகத் தவறு செய்பவர்களுக்குக் காவல் நிலையம் தான் தப்பிக்கும் வாசலைத் திறந்து வைக்கிறது. கூலிப்படைகள் பெயர்ப் பலகை மாட்டி தனி வெப்சைட் திறக்காத குறையாகப் பட்டவர்த்தனமாகச் செயல்படுகின்றன. இதைத் தடுக்க காவல் துறையின் உயர் அதிகாரிகளால் முடியவில்லை. அவர் களுக்கு வேறு பிசினஸ் உள்ளது. இப்போதே இதைக் கவனிக்காவிட்டால், அய்ந்தாண்டுகள் முடியும் போது இந்த ஆட்சியால் கண்டுபிடிக்க முடியாத குற்ற வாளிகளின் தொகை நீக்கப்பட்ட மந்திரி களை விடக் கூடுதலாக இருக்கும்.
- இது அதிகாரிகளின் அரசாங்கமாக இருக் கிறது. தகுதியற்ற அமைச்சர்கள் இருக்கும் இடத்தில் அதிகாரி கள்தான் ஆதிக்கம் செலுத்துவார்கள். பல முக்கியமான துறைகளில் மூத்த அய்.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அமைச் சர்களே நடுங்குகிறார்கள். முதலமைச்சர் அலுவலக அதிகாரிகளின் குட்புக்கில் இடம் பெற்றிருக்கும் அய்.ஏ.எஸ்.கள் நினைத்தால் எதுவும் சாத்தியம். இத னால் சிலரது வசதி வாய்ப்புகள் அரசியல்வாதிகளுடன் ஒப்பிட முடியாத உச்சத்தைத் தாண்டி எகிறுகிறது.
- சித்திரை மாதம், புதிய தலைமைச் செயலகம், அண்ணா நூலகம், வள்ளுவர் சிலை பராமரிப்பு, சமச்சீர் கல்வி என எல்லாவற்றையும் கருணாநிதி எதிர்ப்புக் கண்ணாடி போட்டுப் பார்ப்பதை முதலில் விட வேண் டும். தமிழன்னைக்குச் சிலை வைப்பதை விட்டுவிட்டு, தமிழக அரசு நிர்வாகத்தில் இருக்கும் களங்கங்களைக் களையெடுக்க வேண்டும்.
ஆனந்தவிகடன் எழுதியுள்ள இந்த நீண்ட கட்டு
ரையில் மற்ற பகுதிகள் எல்லாம் அம்மையாருக்குப் புகழாரங்கள்தான். அவர்கள்
இந்தக் குறை பாடுகளைச் சுட்டிக்காட்டியிருப்பதன் நோக்கமே, இந்தக் குறை
பாடுகளில் முதலமைச்சர் அக்கறை காட்டித் திருந்திக் கொள்ள வேண்டும் என்ற
எண்ணத்தோடுதான் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இருந்தாலும்
இந்த ஆட்சியில் என்னென்ன குறை பாடுகள் உள்ளன என்பதைச் சுட்டிக் காட்டவே,
அவற்றை இங்கே தொகுத்துத் தந்துள்ளேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக