கோலாலம்பூர்: மலேசியாவின் வடமேற்கில் சராவக் மாநிலத்தில் உள்ளது
போர்னியோ தீவு. இங்கு ஆண்டுதோறும் மே இறுதி வாரத்தில் கவாய் என்ற திருவிழா
கொண்டாடப்படுகிறது. தயாக் என்ற பழங்குடியினர் மற்றும் உள்ளூர் மக்கள் இந்த
திருவிழாவை மிக பிரம்மாண்டமாக கொண்டாடுகின்றனர். திருவிழாவுக்காக போர்னியோ
தீவுக்கு படகில் இன்று காலை பெண்கள், குழந்தைகள் உள்பட 100க்கும்
அதிகமானோர் சென்றனர். மலேசியாவின் மிக நீண்ட ரஜாங் ஆற்றில் படகு சென்று
கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக பாறையில் மோதி உள்ளது. இந்த விபத்தில்
படகு நொறுங்கியதாக தகவல் வெளியானது. பயணிகள் பலர் படகின் உள்ளே
சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள்
கூறுகையில், எக்ஸ்பிரஸ் படகில் 74 பேர் பயணிக்கலாம். ஆனால், அளவுக்கதிகமாக
மக்கள் சென்றுள்ளனர். அதனால் விபத்து நடந்திருக்க வாய்ப்புள்ளது. விபத்தில்
பயணிகள் இறந்தார்களா என்ற தகவல் இன்னும் கிடைக்கவில்லை. மீட்புப் படையினர்
விபத்து நடந்த பகுதிக்கு விரைந்துள்ளனர் என்றனர். இதனால் பதற்றம்
ஏற்பட்டுள்ளதுtamilmurasu.org
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக