இதையறிந்த
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநகர செயலாளர் ஆயிஷா, மாவட்ட தலைவர்
சித்ரா தலைமையில் 75க்கும் மேற்பட்ட பெண்கள் திருச்சி அரசு மருத்துவமனை
முன் கூடினர். பின்னர் அவர்கள் மருத்துவமனை எதிரே திடீர் சாலை மறியலில்
ஈடுபட்டனர்.
தகவலறிந்த
துணை கமிஷனர் செல்வகுமார், உதவி கமிஷனர்கள் ஜெயசந்திரன், கணேசன்,
இன்ஸ்பெக்டர்கள் பால்சாமி, பாலகுமரன், சித்ரா ஆகியோர் மறியலில்
ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மறியலை கைவிட்டு,
மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
மேலும், மருத்துவமனை உள்ளே சென்ற அவர்கள் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், மாநகர செயலாளர் வெற்றி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உடனே மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். வழக்கை வாபஸ் பெறக்கோரி சிறுமியின் பெற்றோருக்கு மிரட்டல் விடுப்பவர்களை கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு வழங்க வேண்டும். உலகநாதன் மீது 2013 வருட பாலியல் பலாத்கார சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்த வேண்டும் என்று மாதர் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து அரசு மருத்துவமனை டீன் கார்த்திகேயனை, தாசில்தார் பாலதண்டாயுதபாணி சந்தித்து சிறுமிக்கு தகுந்த சிகிச்சை அளிக்க கோரினார். அதன்பிறகே சிறுமி பிரியங்கா, முதல்வரின் இலவச காப்பீட்டு திட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டார்.< செய்தி, படங்கள்: ஜெ.டி.ஆர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக