வெள்ளி, 31 மே, 2013

Selam: Honor Killing அருந்ததிய பெண் திருமணம் முடித்த அடுத்த நாள் கௌரவ கொலை

நேற்று திருமணம்... இன்று கருமாதி! - சேலத்தில் கெளரவ கொலை!   


சேலம்: சேலத்தில் வேறு, வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டதால், திருமணம் நடந்த மறுநாளே மணப்பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம், மல்லூரை அடுத்த வாணியம்பாடி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் 20 வயது பிரியங்கா. வாணியம்பாடியை அடுத்த குலாளர் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (30). பிரியங்கா சேலம் சக்தி கைலாஷ் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். மூர்த்தி கட்டிட மேஸ்திரியாக வேலை பார்க்கிறார். இருவருக்குமிடையே காதல் மலர்ந்து கடந்த சில ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.
இருவர் வீட்டிலும் திருமணத்திற்கு எதிர்ப்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை கஞ்சமலை சித்தர் கோவிலில் இருவரும் பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணம் முடிந்த பின் இருவரும் ஜோடியாக மூர்த்தியின் வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள். தன்னை எதிர்த்து மகன் காதல் திருமணம் செய்து கொண்டு வந்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத மூர்த்தியின் தந்தை, அதேப் பகுதியை சேர்ந்த ரவுடிகள் தர்மலிங்கம் மற்றும் மோகன்குமாரிடம் 50 ஆயிரம் பணத்தை கொடுத்து இருவரையும் பிரிக்க சொல்லி இருக்கிறார். இதைத் தொடர்ந்து ரவுடிகள் இருவரும் நேற்று இரவே பிரியங்காவை வீட்டில் இருந்து கடத்தி வந்து வாணியம்பாடி ஏரியின் அருகே இருந்த கிணற்றில் கொலை செய்து போட்டுவிட்டு சென்றிருக்கிறார்கள். இன்று காலை கிணற்றில் தண்ணீர் எடுக்க வந்தவர்கள் அதில் உடல் மிதப்பதை பார்த்துவிட்டு போலீசில் புகார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரியங்காவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


இந்த சம்பவத்தை தொடர்ந்து சில தாழ்த்தப்பட்ட அமைப்புகளும், அருந்ததியர் சமூகத்தினரும் சேலம் அரசு மருத்துவமனைக்கு வர தற்போது அங்கே பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது

கருத்துகள் இல்லை: