வியாழன், 30 மே, 2013

பாலியல் குற்றங்கள் பற்றிய போதிய கவனம் தேவை


கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது நம்முடைய இந்திய
அரசாங்கத்திற்கு பொருத்தமானதொன்று. ஒரு மருத்துவக் கல்லூரி மாணவி டில்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனைத் தொடர்ந்து அரசாங்கம்
பெண்களுக்கெதிரான மற்றும் பாலியல் தொடர்பான குற்றங்களில்
ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும், அதற்கு தேவையான சட்ட திருத்தங்களை கொண்டுவரவேண்டும் என்ற நோக்குடன் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மாவின் தலைமையில் ஒரு நீதிக் குழுவை அமைத்தது. இந்தக் குழு தன்னுடைய பரிந்துரையை 30 நாட்களுக்குள் அளிக்கவேண்டும் என்ற காலக்கெடுவையும் நிர்ணயித்தது.
பொது மக்கள், மகளிர் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், சட்ட வல்லுனர்கள், நீதித்துறையை சார்ந்தவர்கள் என பல தரபட்டவர்களையும் விசாரித்து, கலந்தாலோசித்து தனக்கு கொடுக்கப்பட்ட கெடுவுக்கள் வர்மா குழு தன்னுடைய பரிந்துரையை அரசாங்கத்திற்கு வழங்கியது.
நீதிபதி வர்மா குழு வழங்கிய பரிந்துரைகளை மத்திய அரசாங்கம் ஏற்றுக்கொண்டு ஒரு அவசர சட்டத்தைக் கொண்டுவந்தது. பின்னர் அரசாங்கம் பாலியல் குற்றங்களுக்கு எதிரான ஒரு புதிய சட்ட மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து, அந்த சட்ட மசோதா பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்குப் பிறகு ஏப்ரல் 3 ஆம் தேதி, 2013 வருடம் The Criminal Law (Amendment) Act, 2013 என்ற சட்ட வடிவத்தை பெற்றது.

மேற்சொன்ன சட்டத்தின் வாயிலாக ஏற்கனவே இருக்கும் இந்திய தண்டனை சட்டம், இந்திய குற்றவியல் சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகிய சட்டங்களில் உள்ள சில சட்ட பிரிவுகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது, மேலும் சில சட்ட பிரிவுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த சட்ட திருத்தத்தால் இதுகாரும் குற்றமாக பார்க்கப்படாத சில விவகாரங்கள் குற்றமாக்கப்பட்டுள்ளன. அதேபோல் திருத்தம் செய்யப்பட்ட சில குற்றங்களுக்கு தண்டனையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.சட்டத்தில் புதிதாக புகுத்தப்பட்ட சில குற்றங்கள் திராவகம் வீசுதல்
மற்றவர்கள் மீது திராவகம் வீசினால் இ.த.ச 326 ஏ பிரிவின் படி 10 ஆண்டுகள் சிறையில் தொடங்கி ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும். கூடவே 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
மற்றவர்கள் மீது திராவகம் வீச முயற்சித்தால் இ.த.ச 326 பி பிரிவின் படி 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் பாலியல் தொந்தரவு செய்தல் - இ.த.ச 354 ஏ
  1. தவறான நோக்கத்தாடு ஒருவரை தீண்டுதல் மற்றும் வெளிப்படையாக வன்புணர்ச்சிக்கு அழைத்தல்
  2. வன்புணர்ச்சி வைத்துக்கொள்ள மற்றவரை அழைத்தல் அல்லது வேண்டுதல்
  3. மேற்சொன்ன குற்றங்களில் எவரேனும் ஈடுபட்டால் அவர்களுக்கு ஐந்தாண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை உறுதி
  4. பாலியில் ரீதியாக மற்றவர்கள் மீது ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்துதல் அல்லது குறிப்பிடுதல்
  5. வலுக்கட்டாயமாக ஒருவரை ஆபாச படங்களை பார்க்கச் செய்தல்
  6. மற்றவர்கள் மீது பாலியில் ரீதியாக தேவையற்ற செய்கைகளில், வார்த்தைகளில் ஈடுபடுதல்
3 முதல் 5 வரை குறிப்பிடப்பட்ட குற்றங்களில் யாரேனும் ஈடுபட்டால் அவர்களுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும் அல்லது அபராதமும், அல்லது இரண்டும் சேர்த்தும் தண்டனையாக வழங்கப்படும்.
பொது இடங்களில் பெண்களை மானபங்க படுத்தல் (ஆடைகளை களைய செய்தல் – Public Disrobing of Women)- இ.த.ச 354 பி
மேற்சொன்ன குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்படும்.
பெண்களின் அந்தரங்கத்துக்கு குந்தகம்/ பாதிப்பு / ஊறு விளைவிப்பது/ பங்கம் ஏற்படுத்துவது (Voyeurism) இ.த.ச 354 சி
ஒரு பெண் தனிமையில் இருக்கும் (பொது இடங்களில் இல்லாத போது) போது அவளுடைய அந்தரங்கங்களை பார்ப்பது அல்லது படம்பிடிப்பது குற்றமாகும்.
இதற்கு தண்டனை – முதல் முறை இந்த குற்றத்தை நிகழ்த்தினால் ஓர் ஆண்டுக்கு குறையாமல் மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை, கூடவே அபராதமும் விதிக்கப்படும். இரண்டாம் முறையாக மேற்சொன்ன குற்றத்தை ஒருவர் செய்தார் என்றால் அவருக்கு மூன்றாண்டுகள் முதல் ஏழாண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.
ஒரு நபரை அவரது விருப்பத்துக்கு மாறாக பின் தொடர்தல் (Stalking) – இ.த.ச 354 டி
ஒருவருக்கு விருப்பம் இல்லாத போதும் அவரை பின் தொடர்தல் அல்லது இணையத்தின் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது வேறு மின்னணு தொலைத்தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தி மற்றவர்களை தொடர்வதோ (தொந்தரவு செய்வதோ) அல்லது வேவு பார்த்து மன உளைச்சலை ஏற்படுத்துவதில் ஈடுபட்டால் அவர் மேற்சொன்ன குற்றத்தை இழைத்தவர் ஆவார்.
குறிப்பிட்ட குற்றத்தை இழைத்தவருக்கான தண்டனை ஓர் ஆண்டு முதல் மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம்.
ஆள் கடத்துதல் – Human Trafficking – இ.த.ச 370
யாரேனும் விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதற்காகவோ, அல்லது அடிமைப்படுத்துவதற்காகவோ, அல்லது கட்டாயமாக உடல் உறுப்புகளை எடுப்பதற்காகவோ ஆள் கடத்துதலில் ஈடுப்பட்டால் அவர்களுக்கு 7 ஆண்டுகள் முதல் ஆயுள் வரை (கடத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை பொருத்து) சிறை தண்டனை விதிக்கப்படும். கடத்தப்பட்ட நபரை வேலைக்கு ஆட்படுத்துவதும் குற்றமாகும்.
இந்த சட்ட திருத்தங்களில் முக்கிய மாற்றம் கொண்டுவரப்பட்டிருப்பது கற்பழிப்பு குற்றத்தில் தான். இது நாள் வரை கற்பழிப்பு (rape) என்று சொல்லப்பட்ட குற்றம் சட்ட திருத்தத்திற்கு பிறகு பாலியல் தாக்குதல் Sexual Assault என்று அழைக்கப்படுகிறது. பாலியல் தாக்குதல் என்ற குற்றம் விரிவாக்கப்பட்டுள்ளது. இது நாள் வரை ’கற்பழிப்பு’,’பலாத்காரம்’, ’வன்புணர்ச்சி’என்றால், என்ன மாதிரியான குற்றம் என்று அனைவருக்கும் தெரிந்த விதத்திலிருந்து மேலும் சில விவகாரங்களை உட்சேர்த்து பாலியல் தாக்குதல் என்றால் என்ன? என்று திருத்தப்பட்ட சட்டம் ஒரு பெரிய விளக்கத்தை அளித்திருக்கிறது.
Sexual Assault: Sexual assault means –
(a) The introduction (to any extent) by a man of his penis, into the vagina(which term shall include the labia majora), the anus or urethra or mouth of any woman or child–
(b) the introduction to any extent by a man of an object or a part of the body (other than the penis) into the vagina(which term shall include the labia majora) or anus or urethra of a woman
(c) the introduction to any extent by a person of an object or a part of the body (other than the penis) into the vagina(which term shall include the labia majora) or anus or urethra of a child.
(d) manipulating any part of the body of a child so as to cause penetration of the vagina (which term shall include labia majora) anus or the urethra of the offender by any part of the child’s body;
In circumstances falling under any of the six following descriptions:
Firstly – Against the complainant’s will.
Secondly – Without the complainant’s consent.
Thirdly – With the complainant’s consent when such consent has been obtained by putting her or any person in whom the complainant is interested, in fear of death or hurt.
Fourthly – With the complainant’s consent, when the man knows that he is not the husband of such complainant and that the complainant’s consent is given because the complainant believes that the offender is another man to whom the complainant is or believes herself to be lawfully married.
Fifthly – With the consent of the complainant, when, at the time of giving such consent, by reason of unsoundness of mind or intoxication or the administration by the offender personally or through another of any stupefying or unwholesome substance, the complainant is unable to understand the nature and consequences of that to which such complainant gives consent.
Sixthly – With or without the complainant’s consent, when such complainant is under eighteen years of age. Provided that consent shall be a valid defence if the complainant is between sixteen years and eighteen years of age and the accused Person is not more than five years older.
இந்தப் பாலியல் தாக்குதல் சாதரணமானதாக இருந்தால் சம்மந்தப்பட்ட குற்றவாளிக்கு ஏழாண்டுகள் முதல் ஆயுள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். இதே அந்தக் குற்றம் பெரியதாக இருந்தால் பத்தாண்டுகள் முதல் ஆயுள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
பாலியல் தாக்குதலினால் ஒருவர் இறந்துவிட்டால் அல்லது அந்த தாக்குதலின் காரணமாக ஒருவர் நடைபிணமாக ஆனார் என்றால், அத்தகைய குற்றத்தை இழைத்தவருக்கு 20 ஆண்டுகள் முதல் ஆயுள் வரை சிறை தண்டனை அல்லது மரண தண்டனை வழங்கப்படும்.
கூட்டாக சேர்ந்து பாலியல் தாக்குதலில் (gang rape) ஈடுபடுபவர்களுக்கு 20 ஆண்டுகள் முதல் ஆயுள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும் குற்றவாளிகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ செலவிற்காகவும் புணர் நிர்மானத்திற்காகவும் தகுந்த இழப்பீடு வழங்கவேண்டும்.
ஆனால் அனைவரும் விறுவிறுப்போடு எதிர்பார்த்த, காரசாரமாக விவாதிக்கப்பட்ட ஒரு விவகாரம் மேற்சொன்ன சட்ட திருத்தத்தில் இல்லை அதுதான்  “விவாக கற்பழிப்பு’ – Marital rape.
அது என்ன விவாக கற்பழிப்பு? திருமணமான தம்பதிகளிடையே, அதாவது கணவன், மனைவியின் விருப்பதிற்கு மாறாக கட்டாயமாக உறவு வைத்துக்கொண்டால் அதற்கு பெயர்தான் விவாக கற்பழிப்பு. நீதிபதி வர்மா குழுவின் பரிந்துரையில் விவாக கற்பழிப்பு குற்றமாக்கப்படவேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. ஆனால் அரசாங்கம் அதை செய்யவில்லை. காரணம்? மதம் தான். இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களிலும் மனைவி கணவனுக்கு கட்டுபட்டே ஆகவேண்டும் (அனைத்து விவகாரத்திலும்) என்ற சம்பிரதாயம் உள்ளது. அதனால் எதற்கடா வம்பு, ஏற்கனேவே நிலைமை சரியில்லை, சும்மா இருந்த சங்கை ஊதி கெடுக்க வேண்டாம், அதனால் விவாக கற்பழிப்பை குற்றமாகி மாட்டிகொள்ள வேண்டாம் என்ற நல்லெண்ணத்தில் தான் விவாக கற்பழிப்பு குற்றமாக்கப்படவில்லை.
 (ஆழம் மே 2013 இதழில் வெளியான கட்டுரையின் திருத்தப்படாத முழு வடிவம்).

கருத்துகள் இல்லை: