இரண்டு முன்னாள் விடுதலை புலிப் போராளிகளின்
உண்மைக் கதை ஜெயவர்தினி, நாகநாதன் மற்றும் அவர்களின் மூன்று பிள்ளைகள்மூன்று தசாப்தங்களுக்கு மேலாக யுத்தத்தினால் ஒடுக்கப்பட்ட நாட்டில் பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தவர்களை - விடுதலை புலி களை (எல்.ரீ.ரீ.ஈ) - தமது உதாரண புருஷர்களாக கொண்டு அநேகமான தமிழ் இளம் பெண்களும் மற்றும் பையன்களும் வளர்ந்து வந்தார்கள். இளம் ஜெயவர்தினியும் அதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை, மற்றும் அவளது மனதுக்கு வெறுப்பான பிரச்சாரங்களால் நஞ்சூட்டப்பட்டிருந்தது, அவள் செஞ்சோலை அனாதை இல்லத்தை சேர்ந்த ஒரு அனாதையாக இருந்தபடியால் அதைச் செய்வது எல்.ரீ.ரீ.ஈ யினருக்கு வெகு எளிதாக இருந்தது. ஜெயவர்தினி ஒரு போதும் ஒரு அன்பான அன்னையின்
அரவணைப்பையோ இன் கனிவையோ உணர்ந்ததில்லை. ஒரு குடும்பத்தின் உண்மையான அன்பு எப்படியிருக்கும் என்று எண்ணற்ற தடவைகள் அவள் கனவுகள் கண்டதுண்டு, தான் தனது பெற்றோர்களை இழந்திருக்காவிட்டால் தனக்கும் அந்த அன்பு கிடைத்திருக்கும் என்று அவளால் அதிசயப்பட மட்டுமே முடிந்தது. அவள் விரும்பியதெல்லாம் தன்னைப்பற்றி அக்கறை காட்டும் நபர்களுடனான ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கே. சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதற்கே அவள் எப்போதும் ஆசைப்பட்டாள். ஆனால் வாழ்க்கை அவளை ஒருபோதும் நியாயமான முறையில் நடத்தாததையே காணக்கூடியதாக இருந்தது. ஜெயவர்தினிக்கு தெரிந்த ஒரே குடும்பம் செஞ்சோலை அனாதை இல்லத்தை சேர்ந்த ஏனைய அனாதைகள், மற்றும் எல்.ரீ.ரீ.ஈ ஆகியோரை மட்டுமே. விஷமாக்கப்பட்ட மனது
தனக்கு தங்க ஒரு இடம்தந்து தன்னை படிக்க வைப்பதற்காக, அவள் எல்.ரீ.ரீ.ஈக்கு நன்றி உடையவளாக இருந்தாள். ஸ்ரீலங்கா இராணுவம் மற்றும் சிங்கள மக்கள் ஆகியோர்கள் கொடியவர்களாகவும் நம்ப முடியாதவர்களாகவும் இருக்கிறார்கள் என்கிற நம்பிக்கையுடனேயே ஜெயவர்தினி வளர்ந்துவந்தாள். அவர்கள் தமிழர்களை அழிக்க நினைப்பவர்கள் என்கிற எண்ணம் அவளுடைய மனதில் நஞ்சாக கலக்கப்பட்டிருந்தது. அந்த வெறுப்பு பின்னாளில் அவளை தீவிரவாதஅமைப்பில் இணைய வைத்து, தமிழ் மக்களை பாதுகாப்பது என்கிற பெயரில் ஒரு தவறான பயணத்துக்கு வழிநடத்தியது. “எனக்குத் தெரிந்த ஒரே குடும்பம் அந்த இல்லத்தில் வாழ்ந்த ஏனைய பிள்ளைகள் மற்றும் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடும் எல்.ரீ.ரீ.ஈ வீரர்கள் மட்டும்தான். எனக்குத் தெரிந்த ஒரே தாய் அனாதை இல்லத்தில் எங்களைக் கவனித்துக்கொண்ட அந்த பெண்மணி மட்டும்தான்” அவள் தனது பழைய நினைவுகளை மீட்டினாள்.
எல்.ரீ.ரீ.ஈயில் இணைந்ததின் பின்னர், அவள் அரசாங்கப் படைகளுக்கு எதிராக அர்ப்பணிப்புடனும் மற்றும் பெருமையுடனும் கடுமையாக போராடினாள்,” நான் ஒரு காரணத்துக்காக போராடுகிறேன் என்பதை நான் உணர்ந்திருந்தேன், அனாதை இல்லத்திருந்த எனது சக சிறார்கள் மற்றும் பின்னர் எனது சக அங்கத்தவர்கள் இவர்களை தவிர எனது வாழ்க்கையில் வேறு யாரையும் நான் அறிந்திருக்கவில்லை. அரசாங்கப் படைகள் அதுவம் விசேடமாக இராணுவத்தினர்கள் கொடிய கொலைகாரர்கள், அவர்கள் வெறுமே எங்களைக் கொல்வதற்காக திரிகிறார்கள் என்று எங்களை நம்ப வைத்திருந்தார்கள்”. ஜெயவர்தினியை போலவே எல்.ரீ.ரீ.ஈ க்காக போராடிய மற்றும் அநேக அங்கத்தவர்களையும் எல்.ரீ.ரீ.ஈ மூளைச் சலவை செய்து தவறாக வழிநடத்தியிருந்தது. எல்.ரீ.ரீ.ஈ யின் முன்னாள் கொலை இயந்திரங்களாக மாறிய முன்னாள் அப்பாவி இளைஞர்கள் எப்படி கொலைகாரர்களாக மாற்றப்பட்டார்கள் என்று சொல்வதற்கு அவர்களுக்கும் ஒரு கதை இருக்கும்.
பின்னர் தன்னைவிட மூத்த அங்கத்தவரான சிதம்பரம் நாகநாதன் என்பவரை அவளது இயக்கத்துக்குள்ளேயே சந்திக்க நேர்ந்ததுடன் இருவரும் காதல் வசமானார்கள். எனினும் அவர்களது காதல் விவகாரம் எல்.ரீ.ரீ.ஈ யினரால் சாதகமாக நோக்கப்படவில்லை. இந்த அங்கத்தவர்கள் திருமணம் செய்து குடும்பங்களை உருவாக்கினால் யுத்தம் புரிவதற்கு இயக்கத்துக்கு தேவையான மனித வலு கிட்;டாமல் போய்விடும் என்று தீவிரவாத தலைவர்கள் எண்ணினார்கள். ஜெயவர்தினிக்கும் மற்றும் நாகநாதனுக்கும் அது ஒரு நீண்ட போராட்டமாகவே இருந்தது, இறுதியில் அவர்களால் அதை சமாளிக்க முடிந்தது. “ எனினும் அது உண்பதற்கு சுவையான ஒரு பண்டமாக இருக்கவில்லை, நாங்கள் இருவரும் திருமணத்தில் இணைவதற்கான அனுமதியை பெற்று திருமணத்தில் இணைவதற்காக எங்களுக்கு வழங்கப்பட்ட பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்கவேண்டியிருந்தது. எனினும் நாங்கள் செய்யவேண்டியதை சிறப்பாகச் செய்துமுடித்து இறுதியாக திருமணம் முடித்து முரசுமோட்டையில் குடியேறினோம்”. அவர்கள் பங்குக்கு உரிய சோதனைகளையும் மற்றும் துயரங்களையும் அவர்கள் தாண்டி வரவேண்டியிருந்தது, ஆனால் எப்படியோ ஒருவாறு அவர்கள் தங்கள் திருமண பந்தத்தை காப்பாற்றி வந்தார்கள்.
புலிகளின் அட்டூழியங்களை உணர்தல்
இப்படியே காலம் கடந்து சென்றபோது அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள் மற்றும் ஜெயவர்தினி தனது மூன்றாவது மகனை கர்ப்பம் தரித்தாள். ஆரம்பத்தில் தீவிரவாதிகளை நம்பியிருந்த மற்றும் பலரைப் போலவே அவளும் மெல்ல மெல்ல எல்.ரீ.ரீ.ஈயின் அட்டூழியங்களை காணலானாள்.
“எங்கள் சக போராளிகள், பயங்கரவாத தலைவர்களின் நோக்கத்தை அல்லது செயல்களை துணிவுடன் கேள்வி கேள்வி கேட்டபோது அவர்கள் தண்டிக்கப்படுவதை நான் கண்டிருக்கிறேன். அவர்களது இலட்சியத்துக்காக போராடும் தங்களது சொந்த அங்கத்தவர்களையே அவர்கள் கொலை செய்வதை நான் பல சந்தர்ப்பங்களில் கண்டுள்ளேன், ஆனால் யுத்தத்தில் காயம் பட்டு அங்கவீனர்கள் ஆவது மிகவும் துரதிருஷ்டமான சம்பவம். யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் தங்களுக்கு சுமையாக இருந்த பல அங்கத்தவர்களை எல்.ரீ.ரீ.ஈ தலைவர்கள் கொன்றொழித்தார்கள்” பழையதை நினைவுகூர்ந்தார் நாகநாதன்.
அந்த போராட்டத்தில் இந்த அப்பாவி மக்கள் அகப்பட்டிருந்தபோது, இறுதியாக அது தமிழ் மக்களின் விடுதலைக்காக அல்ல ஆனால் அதிகாரத்துக்காக மேற்கொள்ளப்பட்டது என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். பாதுகாப்பு படையினருக்கும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ யினருக்கும் இடையில் அதிகரித்து வந்த போருக்கு மத்தியில் அப்பாவி பொதுமக்கள் அநேகர் அகப்பட்டுக் கொண்டார்கள். அவர்கள் அனைத்தையும் இழந்து அவர்களின் வாழ்க்கை சிதைந்து போயிருந்தது. எல்.ரீ.ரீ.ஈ யிடம் நல்லெண்ணம் கிடையாது மற்றும் எல்.ரீ.ரீ.ஈ தலைவர்கள் அதிகாரம் பெறுவதற்காக நடத்தப்படும் இந்த திட்டம் முழுவதிலும் தாங்கள் வெறும் பகடைக் காய்களாக பயன்படுத்தப்பட்டுள்ளோம் என்பதை அவர்கள் உணரத் தலைப்பட்டார்கள்.
போரின் இறுதிக்கட்டத்தில் எல்.ரீ.ரீ.ஈயின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்த பொதுமக்களை அரசாங்கப் படைகள் இருந்த பக்கம் வரும்படி அரசாங்கப் படையினர் கட்டளை பிறப்பித்தனர் என்று ஜெயவர்தினி தெரிவித்தாள். “ இருந்தும் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் அவர்களை கடந்து செல்ல அனுமதிக்கவில்லை, மற்றும் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கடந்து செல்ல முயன்றவர்கள் மீது அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். ஆயிரக்கணக்கானவர்களை தடுத்து வைத்து அவர்களை வெளி உலகத்திடமிருந்து பிரித்து வைத்திருந்த மணல் அணைகளை கடந்து சென்றவர்கள், உண்மையான சுதந்திரம் என்று தங்களை நம்பவைத்திருந்த சுதந்திரம் பயங்கரவாதிகளின் பக்கம் இல்லை, ஆனால் அந்த மணல் அணைகளுக்கு அப்பால்தான் இருக்கிறது என்பதை உணாந்து கொண்டார்கள். அதை கடந்து சென்றவர்கள் ஒலி பெருக்கி வழியாக மற்றவர்களையும் வரும்படி தூண்டினார்கள் மற்றும் அரசாங்கப் படைகளின் தாக்குதல்களிலிருந்து தப்பவதற்காக, எல்.ரீ.ரீ.ஈ தங்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவதற்கு இடமளிக்க மறுத்தார்கள்” என்று அவள் மேலும் தெரிவித்தாள். எல்.ரீ.ரீ.ஈ மனிதக் கேடயங்களாக வைத்திருந்தவர்களை மீட்பதற்காக அரசாங்கம் பல வழிகளிலும் முயன்றது.
மனிதக்கேடயம்
மறுபுறத்தில் கிளர்சிக்காரர்கள் சர்வதேசத்தின் கவனத்தையும் மற்றும் அனுதாபத்தையும் தங்கள் பக்கம் ஈர்ப்பதற்காக தாக்குதலற்ற வலயத்தில் தங்கியிரு;த பொதுமக்கள்மீது வன்முறையை பிரயோகிக்க அரசாங்கப் படைகளை தூண்டினார்கள்.
கிட்டத்தட்ட 300,000 பொதுமக்கள் எல்.ரீ.ரீ.ஈ யின் பிடிக்குள் சிக்கியிருந்தார்கள், பயங்கரமான இராணுவத்தின் துப்பாக்கிச்சூடு,மற்றும் வான்தாக்குதல்கள் என்பனவற்றிலிருந்து எல்.ரீ.ரீ.ஈ அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கியது,ஆனால் மனிதக் கேடயத்தின் மறைவிலிருந்து அரசாங்கப்படைகளுக்கு எதிராக பாரிய ஆயுதங்களை பயன்படுத்த அது அவர்களுக்கு அனுமதி வழங்கியது.
இந்தச் சமயத்தில் ஜெயவர்தினி தனது மூன்றாவது மகனை பெற்றாள். அவளும் அவளது கணவரும் தங்கள் மூத்த பிள்ளைகள் இருவரையும் மற்றும் ஏழு நாட்களே நிறைந்த மூன்றாவது மகனையும் கொண்டு அரசாங்கப் படைகளின் பக்கம் கடந்து சென்று சரணடைய முடிவு செய்தார்கள்.
எல்.ரீ.ரீ.ஈ யின் கொடூரத்தை அனுபவித்தது ஜெயவர்தினி என்கிற ஒருவர் மட்டுமல்ல. அவர்களுக்காக பல வருடங்களாக அவள் ஒரு சுதந்திரப் போராளியாக இருந்துள்ளாள், அவர்களது போராட்டத்தை மிகவும் உணர்ச்சிபூர்வமாக விசுவசித்திருந்தாள். எனினும் மணல் அணைக்கு அப்பாலிருந்து கமழ்ந்து வரும் உண்மையான சுதந்திரத்தின் நறுமணத்தை அவள் உணரத் தொடங்கியதும், அவள் அங்கு செல்ல விரும்பினாள். ஆனால் தமிழர்களின் சுதந்திரத்துக்காக போராடுவதாக கூறும் எல்.ரீ.ரீ.ஈ தான் அவர்களது சுதந்திரத்தை தடுக்கும் முக்கியமான ஒன்றாக இருந்தது.
“என்னையும் மற்றும் நான் முதலில் எடுத்துச் சென்ற எனது ஏழுநாள் குழந்தையையும் எனது கணவர் பாதுகாப்பாக மணல் அணையை நோக்கி அழைத்துச் சென்று அதைக் கடப்பதற்கு எனக்கு உதவி செய்துவிட்டு, எங்களது மற்ற இரண்டு குழந்தைகளையும் எடுத்து வர சென்ற அதேவேளை எல்.ரீ.ரீ.ஈ எங்களை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்தது. மற்றும் ஏதோ ஒன்று எனது முகத்தை தாக்கியதுதான் கடைசியாக எனக்கு தெரிந்தது:” என்று அவள் சொன்னாள்
தனது மனைவி கீழே விழுவதை அவதானித்த அந்தக்கணமே தான் அவளை நோக்கி ஓடியதாகவும் ஆனால் அவளது சலனமற்ற சடலம் இரத்த வெள்ளத்தில் கிடப்பதையே தான் கண்டதாகவும் நாகநாதன் கூறினார்.”எனது மனைவியும் எங்களது பிள்ளையும் இறந்து விட்டனர் என்றே நான் எண்ணினேன். நான் அங்கிருந்து திரும்புவதற்கு எத்தனித்த சமயம் அந்த குழந்தை ஒரு சத்தத்தை வெளிப்படுத்தியது, நான் காயமடைந்த அந்தக் குழந்தையை எடுத்துக்கொண்டு இராணுவம் இருந்த பக்கமாக ஓடினேன். இராணுவ வீரர்கள் காயமடைந்த அந்தக் குழந்தையை எனது கரங்களிலிருந்து எடுத்து ஒரு உலங்கு வானூர்தியில் போட்டு எங்கோயோ அனுப்பினார்கள், மற்றும் அந்த நேரத்தில் அந்த குழ்ந்தையை எங்கு அனுப்பினார்கள் என்று எனக்குத் தெரியாது” என்று வேதனையுடன் அவர் அதை நினைவு கூர்ந்தார்.
உறுதியான நினைவூட்டல்
எப்படியோ ஜெயவர்தினியின் அதிர்ஷ்டம்தான் இராணுவம் அவளை கண்டது. அவள் இன்னமும் உயிரோடிருப்பதை அறிந்த இராணுவம்அவளை உலங்குவானூர்தி மூலமாக கொழும்புக்கு அனுபப்பிவைத்தது. “எனக்கு ஆறு மாதங்களுக்கு பின்னர்தான் நினைவு திரும்பியது, அப்போது வைத்தியர்கள் எனது முகத்தின்மீது பல அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டிருந்தார்கள், அந்த வெடி எனது முகத்தின் ஒரு பகுதியை சிதைத்துவிட்டது. நான் எனது கண்களில் ஒன்றை இழந்து விட்டேன்,பல எலும்புகள் உட்பட எனது மூக்கும் சிதைந்துவிட்டது. எனக்கு மூக்கு இருக்கவில்லை, ஆனால் வைத்தியர்கள் எனது தொடைப் பகுதியில் இருந்து ஒரு துண்டு தசையை வெட்டியெடுத்து எனது முகத்தை மறுவடிவாக்கம் செய்தார்கள். இன்று எனது முகத்தை கண்ணாடியில் பார்த்தால் நான் பார்ப்பதைக்கண்டு அச்சம் அடைகிறேன். இருந்தாலும் அவையாவும் எனக்கு நடந்தவைகளின் உறுதியான ஒரு நினைவூட்டல்,அது எனக்கு நடந்தவைகள் என நான் நம்புகிறேன். இப்போது நான் வெறும் எண்ணிக்கை மட்டுமே, போராடும் இயந்திரத்தின் ஒரு பகுதி மட்டுமே அதைவிட என்னால் எல்.ரீ.ரீ.ஈக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை என்பதை நான் உணர்கிறேன்”
எனினும் ஜெயவர்தினி; இப்போது இராணுவத்தையும் மற்றும் சிங்களவர்களையும் தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றியவர்கள் என்கிற கண்ணோட்டத்திலேயே பார்க்கிறாள். “இராணுவமோ அல்லது அரசாங்கமோ எனது உயிரை காப்பாற்றியதற்கு வலுவான ஒரு காரணம் இருக்க வேண்டும். அவர்கள் ஆறுமாதங்களாக போராடி எனது உயிரை மீட்டு எனக்கு சாவிலிருந்து புத்துயிர் அளித்துள்ளார்கள்.அதற்கு முரண்பாடாக அவர்கள்மீது திருட்டு, சித்திரவதை என்று பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன,அவர்களது அன்புக்கும் இரக்கத்துக்கும் நான் ஒரு நல்ல உதாரணம். நான் போரின்போது எனது மோதிர விரலை இழந்துவிட்டேன். மற்றும் நீங்கள் நம்ப மாட்டீர்கள் என்னை கண்டெடுத்த இராணுவ வீரர்கள் எனது இழந்த விரலிலிருந்த திருமண மோதிரத்தை பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்து எனக்கு நினைவு திரும்பியதும் என்னிடம் திரும்ப ஒப்படைத்தார்கள்” தன்னை காப்பாற்றியர்கள் மீது அளவிடமுடியாது நன்றிப் பெருக்குடன் அவள் அதை தெரிவித்தாள்.
ஜெயவர்தினியின் குழந்தை லேடி றிட்ஜ்வே வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அவளுக்கு நினைவில்லாத காலம் முழுவதும் அந்தக் குழந்தை பத்திரமாக பராமரிக்கப்பட்டு வந்திருந்தது. “எனக்கு நினைவு திரும்பியதும், நான் வைத்தியசாலை அதிகாரிகளிடம் எனக்கு தாக்குதல் நடைபெற்ற அந்த நேரத்தில், பிறந்து ஏழு நாள் மட்டுமே நிரம்பிய ஒரு குழந்தை இருந்தது. எனது மகன் உயிரோடிருக்கிறானா இல்லையா என்று எனக்குத் தெரியாது என்று கூறினேன். எனினும் அவர்களது பதிவுகளில் இருந்து, இராணுவம் வான்வழியாக ஒரு குழந்தையை கொழும்புக்கு அனுப்பி வைத்ததாகவும் மற்றும் தாயற்ற அந்தக் குழந்தை சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர் ஒரு டி.என்.ஏ சோதனை மேற்கொண்டதின் பின் அந்தக் குழந்தை என்னுடையது என உறுதி செய்யப்பட்டு எனது சிறிய மகன் என்னிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டான்.
என்னையும் எனது மகனையும் காப்பாற்ற சிங்கள மக்கள் மேற்கொண்ட வலுவான முயற்சியை எண்ணும்போது எனக்கு பேசுவதற்கு வார்த்தைகளே வரவில்லை, இன்றும்கூட அவர்களை அழிப்பதற்கு தீவிரமாக போராடிய என்னைப்போன்ற ஒருத்தியிடம் அவர்கள் காட்டிய தாராள மனதையும் கருணையையும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்களது இரக்கத்தின் பரிமாணம் எனது புரிந்துணர்வுக்கும் அப்பாற்பட்டது, சிறுவர் வைத்தியசாலையை சோந்த ஒரு வைத்தியர், அவருக்குகூட அந்த நேரத்தில் ஒரு பிள்ளை இருந்தது,எனது பிள்ளைக்கு உயிர் கொடுப்பதற்காக வேண்டி தனது பாலை ஊட்டியுள்ளார். அந்தப் பெண்மணிக்கு நான் எப்படி எனது நன்றியை திரும்பச் செலுத்துவேன் அல்லது எனக்கு செய்தவற்றுக்கு எல்லாம் இராணுவத்துக்கு நான் எப்படி நன்றி சொல்லுவேன்? அவர்கள் மீதுள்ள எனது நன்றிக்கடனை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது: என்று சொன்னாள் ஜெயவர்தினி.
எல்.ரீ.ரீ.ஈ - கபடதாரிகள்
முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ தலைவர்கள் பலர் இப்போது அனுபவிக்கும் சுதந்திரத்தை காணும்போது தனக்கு வெறுப்பை தவிர வேறு எதுவும் தோன்றவில்லை என்றுஜெயவர்தினி கூறினாள். “ இந்த கபடதாரிகள் எங்களை கைவிட்டுவிட்டு, எங்களை சாக விட்டுவிட்டு, தங்கள் சொந்த வழிகளை செதுக்கிக் கொண்டு போகிறார்கள் என்று அவள் மேலும் கூறினாள்.
இன்று ஜெயவர்தினி மற்றும் நாகநாதன் ஆகியோர்கள் தங்கள் இரண்டு குழந்தைகளுடன் யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையிலுள்ள, கோட்டைகாட்டில் சுதந்திரக்காற்றை சுவாசித்தபடி வாழ்கிறார்கள். ஜெயவர்தினி மற்றும் நாகநாதன் போன்ற இன்னும் பல எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் சமாதானமாக வாழ்வதை தவிர வேறு எதையும் செய்வதற்கு வற்புறுத்தப்படுவதில்லை. அழிந்துபோன தங்கள் வாழ்க்கையை அவர்கள் மெதுவாக மீளக்கட்டியெழுப்பி வருகிறார்கள். தமிழ் புலம்பெயர் சமூகத்திலுள்ள சில சக்திகள், இந்த நேரத்தில் தங்கள் பிள்ளைகள் வெளிநாடுகளில் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கும்போது இங்குள்ள தமிழர்களுக்காக அக்கறை தெரிவித்து குரலெழுப்புகிறார்கள். இதுதானா அவர்கள் தங்கள் மக்களுக்காக செய்வது அல்லது இந்த நாடுகளால் தங்களுக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமையை பாதுகாக்கவும் மற்றும் தங்களை திருப்பி அனுப்பாமல் தங்கள் நலன்களை பாதுகாக்கவேண்டியும் இதை செய்கிறார்களா? தமிழ் மக்களுக்கு ஒரு தனிநாடு வேண்டி தாங்கள் போராடுவதாக அவர்கள் கூறிக்கொள்கிறார்க,இருந்தும் அவர்கள் இப்போது குடியிருக்கும் வெளிநாடுகளில் தங்களுக்கு உள்ள வசதிகள் யாவற்றையும் விட்டுவிட்டு இந்த நாட்டுக்கு வந்து அவர்கள் கோரிக்கை விடும்; தனிநாட்டில் குடியிருப்பார்களா? நிச்சயமாக இல்லை.
போரில் அகப்பட்ட மக்களே அதிகம் இன்னல்களை அனுபவித்துள்ளார்கள். அவர்களில் யாரும் திரும்பவும் அதைப்போன்ற ஒன்றை நோக்கி செல்வதை விரும்பவேயில்லை.ஒருபோதும் விரும்பவில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக