கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் நடிப்புத் திறமையால் கலக்கியதோடு, சொந்தப் பிரச்சனையாலும் கலக்கியவர் நடிகை அஞ்சலி. சித்தி மற்றும் நெருங்கிய நண்பரைப் போல் பழகிய இயக்குனரால் ஆபத்து என தலைமறைவாகி பிறகு அதிரடியாக வெளிவந்து இரு திரையுலகிலும் பரபரப்பை ஏற்படுத்திய அஞ்சலி பல புகார்களை பலர் மீதும் கூறினார்.
அஞ்சலி, இயக்குனர் களஞ்சியம் மீது பல புகார்களைக் கூறினாலும் வழக்குகள் ஏதும் தொடுக்கவில்லை. ஆனால் குற்றம் சாட்டப்படும் களஞ்சியமோ ’என் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு இப்போது நடிக்க மறுக்கிறார் என்றும், அஞ்சலியின் தவறான குற்றச்சாட்டால் எனக்கு சமுதாயத்தில் இருக்கும் நல்ல பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விட்டது என்றும் கிரிமினல் வழக்குகள் தொடர்ந்திருந்தார்.
நேற்று(24.05.13) வழக்கு விசாரணைக்கு வந்தபோது அஞ்சலியோ, அஞ்சலி தரப்பில் வக்கீல்களோ கோர்ட்டில் ஆஜராகாததால் நீதிபதி இந்த வழக்கை 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துவிட்டார். மேலும் 5-ஆம் தேதியன்று அஞ்சலி அல்லது அவரது வக்கீல் யாராவது ஒருவர் கண்டிப்பாக ஆஜராக வேண்டுமாம். இல்லாவிட்டால் அஞ்சலிக்கு கைது வாரண்ட் விதிக்க வாய்ப்புகள்இருப்பதாக கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக