புதன், 29 மே, 2013

மோசடி புகார்: மருத்துவ கல்லூரி நிறுவனர் மீது 56 வழக்குகள்


ஜேப்பியார்..ஜெகத்ரட்சகன் ..தம்பிதுரை போன்றோருக்கு கல்லூரிக்கான அனுமதியளித்த போதே இது போன்ற செய்திகள் எதிர்காலத்தில் வரும் என்பது எதிர்பார்த்ததே....


திருவள்ளூர் மாவட்டத்தில், மருத்துவ கல்லூரி நடத்தி, பல்வேறு
டி.டி.நாயுடு, சாதாரண விவசாயி. 1991க்குப் பின், திருத்தணியில், நெல் வியாபாரம் செய்து வந்தார். 1993ம் ஆண்டு, திருத்தணி சன்னிதி தெருவில்,
தொடர்ந்து, 2007ம் ஆண்டு, பொறியியல் கல்லூரியை, மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையமாக மாற்றினார். இந்திய மருத்துவ கழகம் அனுமதி பெறாமலே, மாணவர்களை, கல்லூரியில் சேர்த்தார். இதனால், 2011ம் ஆண்டு, மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி மறுக்கப் பட்டது. மேலும், கல்லூரி மாணவர்களிடம் பல லட்சங்கள் பெற்று, ரசீது கொடுக்கவில்லை. அனுமதியில்லாத கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள், பின் கல்லூரியை விட்டு விலக, சான்றிதழ்கள் மற்றும் பணம் தராமல் ஏமாற்றினார். மருத்துவ கல்லூரிக்கு தேவையான பொருட்கள் மற்றும் கருவிகள் வாங்கியதற்கும், பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். மேலும், கட்டடப்பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்களுக்கு பல லட்சம் ரூபாயை கொடுக்காமல் ஏமாற்றி வந்தார்.இப்படி, இவர் மீது, கனகம்மாசத்திரம் காவல் நிலையம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவிலும், 42 வழக்குகள் நிலுவையில் உள்ளன. சென்னையில், 14 வழக்குகளும் இவர் மீது உள்ளன. வங்கி மோசடி செய்தது தொடர்பாக, இன்ஸ்பெக்டர், தட்கல் தலைமையிலான தனிப்படை இவரை தேடி வந்தது.கடந்த, 2012 டிச., மாதம் சென்னையைச் சேர்ந்த அகர்வால் மகன், நவன் கிஷோர் என்பவர், டி.டி.நாயுடு கல்லூரியில், மருத்துவ படிப்பில் சேர, 15 லட்சம் ரூபாய் கொடுத்தார். ஆனால், பணம் கொடுத்தும், மருத்துவ கல்லூரியில் இடம் தரவில்லை.

இதுதொடர்பாக, 2012ம் ஆண்டு பதியப்பட்ட புகார் மீது, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., ரூபேஷ் மீணா உத்தரவை அடுத்து, போலீசார், டில்லியில் முகாமிட்டு, அங்கு பதுங்கியிருந்த, டி.டி.நாயுடுவை கைது செய்து, நேற்று முன்தினம் திருவள்ளூருக்கு அழைத்து வந்தனர். பல்வேறு வழக்குகளில், "டிமிக்கி' கொடுத்து வந்த டி.டி.நாயுடு, தற்போது வசமாக சிக்கியுள்ளார்.

போலி ஆவணங்கள் தயாரித்துவங்கியில் ரூ.120 கோடி மோசடி

போலி ஆவணங்கள் தயாரித்தும், ஒரே ஆவணத்தை, இரண்டு வங்கிகளுக்கு கொடுத்தும், 120 கோடி ரூபாய் கடன் பெற்று, மோசடி செய்தது தொடர்பான, சி.பி.ஐ., வழக்கில், ஓராண்டுக்கு மேல், டி.டி.நாயுடு தலைமறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது.
மருத்துவ கல்லூரி கட்டடங்களுக்கு, முறையான அனுமதி பெற, மாவட்ட நிர்வாக அளவில் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு ஏதும் பெறாமல், போலி முத்திரைகள் தயாரித்து, அனுமதி பெற்றது போல், டிரஸ்ட் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்துள்ளார்.
ஒரே ஆவணத்தை, சென்னை அண்ணா நகர், தி.நகரில் உள்ள, இரண்டு வங்கிகளுக்கு கொடுத்து, 120 கோடி ரூபாய் வரை, கடன் பெற்று, மோசடி செய்துள்ளார். சி.பி.ஐ.,யில், வங்கி மோசடி தொடர்பான வழக்குகளை விசாரிக்கும், தென்மண்டல அலுவலகம் பெங்களூரில் உள்ளது. டி.டி.நாயுடு மீது, பெங்களூர் சி.பி.ஐ.,யில், 2012 பிப்., மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கல்லூரியில் ஆய்வு செய்து, போலி ஆவணங்கள், அதிகாரிகளின் பெயரில் தயாரிக்கப்படிருந்த ரப்பர் ஸ்டாம்புகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில், டி.டி.நாயுடு, 15 மாதங்களாக தலைமறைவாக இருந்து வருகிறார்.சி.பி.ஐ., தேடுதல் வேட்டைக்கு பயந்து, நட்சத்திர ஓட்டல்களில், மாறி மாறி தங்கி, சிக்காமல் தப்பிய விவரம் தெரிய வந்துள்ளது. மாணவர்களிடம் மோசடி செய்த வழக்கில் கைதான டி.டி.நாயுடு, வங்கி மோசடி வழக்கிலும், விரைவில் கைதாவார் என, தெரிகிறது.
இந்திய மருத்துவகவுன்சில் அனுமதி உண்டா?
டி.டி.நாயுடு கல்லூரிக்கு, இந்திய மருத்துவ கவுன்சில், இன்னும் உரிய அனுமதி தரவில்லை. கடந்த ஆண்டில் ஆய்வுக்கு வந்த இந்திய மருத்துவ கவுன்சில் உறுப்பினர்கள், விதிமுறைப்படி உரிய கட்டமைப்புகள் இல்லை என, மனுவை நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த நிலையில், கல்லூரிக்கு எந்த சிக்கலும் இல்லை எனக்கூறி, தற்போது, மாணவர்கள் சேர்க்கையைத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கல்லூரியில் பயிலும், புதிதாக சேரும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என, கல்வியாளர்கள் கூறுகின்றனர். -நமது நிருபர் குழு-dinamalar.com
கடை வைத்து, கொடுக்கல் வாங்கல் செய்து வந்தார். 1998ம் ஆண்டு குண்ணவளம் பகுதியில், 50 ஏக்கர் நிலம் வாங்கி, பொறியியல் கல்லூரி துவங்கினார்.பின், கல்லூரியை, 110 ஏக்கரில் விரிவுபடுத்தினார். 2006ம் ஆண்டு, மாணவியர் அறைக்குள் புகுந்ததாக, இவர் மீது புகார் எழுந்தது. அண்ணா பல்கலைக் கழகத்திலும், மாணவர்கள் புகார் கொடுத்ததால், மாணவர்கள் சேர்க்கை நின்றது.
மோசடிகளில் ஈடுபட்ட டி.டி.நாயுடு மீது, மொத்தம், 56 வழக்குகள் நிலுவையில் உள்ளது அம்பலமாகியுள்ளது.சென்னை - திருத்தணி தேசிய நெடுஞ்சாலை, புதூர் அருகே, குண்ணவளம் பகுதியில், டி.டி., மருத்துவ கல்லூரி இயங்கி வருகிறது. இதன் நிறுவனர் தீனதயாள நாயுடு, 55, என்ற டி.டி.நாயுடு. கல்லூரி, 2007ல் துவக்கப்பட்டது. டி.டி.நாயுடு, திருத்தணி அடுத்த டி.சி.என்.கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த குத்தா நாயுடு மகன். திருமணமாகி, இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர்.

கருத்துகள் இல்லை: