ஞாயிறு, 26 மே, 2013

இன்று மாலை டி.எம்.எஸ். உடல் தகனம்

சென்னை: மறைந்த பழம்பெரும் பின்னணிப் பாடகர் டி.எம்.செளந்தரராஜன்
மறைவால் உலகெங்கும் உள்ள தமிழர்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். சென்னையில் உள்ள அவரது வீட்டில் அவரது உடலுக்கு பல்துறையினரும் அஞ்சலி செலுத்தியவண்ணம் உள்ளனர். சாகாவரம் படைத்த பல ஆயிரம் பாடல்களைப் பாடிய டிஎம்எஸ் இன்று கண் மூடி விட்டார். அவரது மறைவால் உலகத் தமிழர்கள் பெரும் சோகமடைந்துள்ளனர். எங்கு பார்த்தாலும் டிஎம்எஸ் பேச்சாகவே உள்ளது. டீக் கடை, கறிக் கடை என்று எந்த இடமாக இருந்தாலும் மக்கள் டிஎம்எஸ்ஸின் குரலையும், அவரது பாடல்களையும் பற்றியே பேசியபடி உள்ளனர். சென்னையில் உள்ள டிஎம்எஸ்ஸின் வீட்டில் திரைப்படத் துறையினர், அரசியல் துறையினர், பல்துறைப் பிரபலங்கள், ரசிகர்கள் குவி்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முதல்வர் ஜெயலலிதா, திமுக த லைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் டிஎம்எஸ்ஸின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். இன்று மாலை நாலரை மணியளவில் டிஎம்எஸ்ஸின் உடல் தகனம் டிஜிபி அலுவலகம் பின்புறம் உள்ள இடுகாட்டில் நடைபெறுகிறது.
tamil.oneindia.i

கருத்துகள் இல்லை: