நாம் முத்தம் கொடுத்தால் தினமலர் நாளிதழுக்கு என்ன சங்கடம்?” ஸ்டாலின் கேள்வி!
தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த இளைஞரணி பயிற்சி பாசறை கூட்டத்தில் பேசியபோதே, இவ்வாறு குறிப்பிட்டார். “நாடாளுமன்ற தேர்தல் குறித்த நேரத்திலோ, முன்பாக வந்தாலோகூட நாம் அதற்கு தயாராகவே உள்ளோம்” என்றவர், தேர்தல் நிதி பற்றி குறிப்பிடும்போதே, தினமலர் முத்தம் பற்றி விமர்சித்தது குறித்து கருத்து தெரிவித்தார்.
அவர் பேசும்போது, “நாடாளுமன்ற தேர்தல் நிதியாக, பாசறையில் கலந்து கொண்டவர்கள் 100 ரூபாய் கொடுத்தால் அவர்களுடன் போட்டோவும், 500 ரூபாய் கொடுத்தால் கைகுலுக்கியும், 1000 ரூபாய் கொடுத்தால் தோளில் கை போட்டபடியும் , 5000 ரூபாய் கொடுத்தால் முத்தம் கொடுத்தும் போட்டோ எடுக்கலாம் என்று நான் நாமக்கல்லில் நடந்த கூட்டத்தில் கூறினேன். இப்படி நான் கூறியதற்கு தினமலர் நாளிதழில் முத்தம் கொடுப்பது குறித்து விமர்சனம் செய்திருந்தனர்.
இதைப் பற்றி அவர்களுக்கு என்ன சங்கடம்? தினமலர் நாளிதழில் அவ்வாறுதான் செய்வார்கள். அதை பற்றியெல்லாம் எனக்கு கவலை இல்லை” என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக