செவ்வாய், 22 ஜனவரி, 2013

Jeya coming 22 நாட்களும் ஹாயாக இருந்த 32 அமைச்சர்களும் திக்திக்!

கொடநாட்டில் இருந்து முதல்வர் திரும்புகிறார்! அமைச்சர்கள் அமாவாசை பார்த்து திக்திக்!!

Viruvirupu
முதல்வர் ஜெயலலிதா நாளை மாலை சென்னை வந்து சேர்வார் என தமிழக அரசு தலைமைச் செயலக வட்டாரங்களில் கூறப்படுகிறது. 22 நாட்களின் பின், மாநில தலைநகருக்கு திரும்புகிறார் அவர்.
முதலமைச்சர் ஜெயலலிதா சென்னையில் இருந்து இம்மாதம் 1-ம் தேதி கொடநாடு புறப்பட்டுச் சென்றார். சென்னையில் இருந்து தனி விமானத்தில் கோவை சென்ற அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு சென்றார். அங்கிருந்தபடியே அரசுப் பணிகளை அவர் கவனித்து வந்தார்.
கொடநாட்டில் இருந்தபடி அவர் முதல்வர் பணிகளை செய்வது குறித்து, தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க. உட்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்த போதெல்லாம், அவர்கள்மீது, அவதூறு வழக்குக்கள் பாய்ந்தன. பல வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ளன. மேலும் சில வழக்குகள் இனிமேல்தான் போடப்படவுள்ளன.
அதே நேரத்தில், கடந்த 22 நாட்களும், அமைச்சர்கள் மன அழுத்தம் ஏதுமின்றி, ஹாயாக இருந்தார்கள். அம்மா சென்னையில் இருந்தால்தானே, புதிய பட்டியலுடன் ராஜ்பவனுக்கு புறப்பட்டு செல்கிறாரா என்பதில் கண் வைத்திருக்க வேண்டும்?
22 நாட்கள் கொடநாட்டில் இருந்து அரசு பணிகளை கவனித்து வந்த முதலமைச்சர் ஜெயலலிதா நாளை (புதன்கிழமை) மதியம் சென்னை திரும்புகிறார். கொடநாட்டில் இருந்து 2.30 மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு ஹெலிகாப்டரில் வரும் அவர், பின்னர் அங்கிருந்து தனி விமானத்தில் சென்னை வருகிறார்.
22 நாட்களும் ஹாயாக இருந்த 32 அமைச்சர்களும், அடுத்த அமாவாசை எப்போது என்று காலன்டரில் தேடத் தொடங்கியுள்ளார்கள். அமாவாசையின்போது அமைச்சர்களை மாற்றுவதே அம்மாவின் வழக்கம்.

கருத்துகள் இல்லை: