சென்னை : மக்கள் சக்தி இயக்க தலைவர் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி நேற்று உடல் நல குறைவு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 85.
இவரது
மனைவி சீதா லட்சுமி 10 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார்.
சித்தார்த்தா, அசோகன் என்ற 2 மகன்களும், கமலா என்ற மகளும் அமெரிக்காவில்
பணி புரிகின்றனர்.
உதயமூர்த்தி தனது அண்ணன் மகன் ஜெகதீசனுடன்,
நீலாங்கரை அடுத்த அக்கரை விஜிபி லேஅவுட் 5வது லேனில் வசித்து வந்தார். நாகை
மாவட்டம் மயிலாடுதுறை விலா நகரில் 1928ல் பிறந்தவர். அண்ணாமலை பல்கலை,
கிண்டி பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்துள்ளார். 1989ல்
மக்கள் சக்தி இயக்கம் தொடங்கி நடத்தி வந்தார். நேற்று முன்தினம் ரத்த
அழுத்தம் குறைந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு பெரும்பாக்கத்தில் உள்ள தனியார்
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று காலை 10.30 மணிக்கு மரணம்
அடைந்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக