சீனாவில் ஆண் பெண் விகிதாசாரத்தில் பாரிய வித்தியாசமுள்ளதாக
கணக்கெடுப்பின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
2012 ஆம் ஆண்டு சீனாவில் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகைக் கணக்கெடுப்பில் 117
ஆண் குழந்தைகளுக்கு 100 பெண் குழந்தைகள் மட்டுமே பிறக்கின்றன. இதனால் ஆண்
பெண் விகிதாசாரத்தில் சமனிலை ஏற்படாது பாரிய வித்தியாசம் ஏற்பட்டுள்ளது.
உலகின் சனத்தொகை மிகுந்த நாடான சீனாவில் கடந்த 1980 ஆம் ஆண்டுமுதல் ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை என்ற திட்டம் அமுல்படுத்தப்பட்டது.
இத் திட்டமே பெண் குழந்தைகளின் பற்றாக்குறைக்குக் காரணமெனக் கூறப்படுகிறது. இச்சட்டம் கட்டாயமாகவுள்ளதால் அதிக பெண்கள், ஆண் குழந்தை பெறவே விரும்புகின்றனர்.
எனவே, கர்ப்பமான பெண் கருவிலே பெண் குழந்தையென உறுதிசெய்து விட்டால் கருக்கலைப்புச் செய்வது வாடிக்கையாக உள்ளது . இந்நிலையை சீர்படுத்தும் நடவடிக்கைகளில் சீனா தீவிரமாக ஈடுபட்டுள்ளது..thinakkural.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக