சவூதி அரேபியாவுக்கு எதிராக தேசிய பிக்குகள் முன்னணி கொழும்பில் ஆர்ப்பாட்டம்
சவூதி
அரேபியாவில் இலங்கைப் பணிப்பெண் ரிசானா நபீக் இற்கு மரண தண்டனை
நிறைவேற்றப்பட்டமையை கண்டித்தும் வேலை வாய்ப்புகளுக்காக மத்திய கிழக்கு
நாடுகளுக்கு இலங்கையர்களை அனுப்ப வேண்டாம் எனக் கோரியும் தேசிய பிக்குகள்
முன்னணி கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தியது.
கொழும்பு நகர மண்டபத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெருந்திரளான பிக்குகள்
ஜனாதிபதி மாளிகையை நோக்கிப் பேரணியாக சென்றனர். சர்வதேச சட்டத்தை மீறும்
வகையில் சவூதி அரேபியாவினால் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனையை கண்டிக்கிறோம்,
இனிமேலும் இதனை பார்த்துக்கொண்டிருக்க முடியாது, சவூதிக்கு எமது
எதிர்ப்பினை வெளிப்படுத்துகிறோம் ஆகிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அவர்கள்
ஏந்தியிருந்தனர். ஆர்ப்பாட்டத்தின் பின்னர் தேசிய பிக்குகள் முன்னணியினரின்
கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்றை ஜனாபதிக்கு கையளித்தனர். thenee.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக