நாமக்கல்லில் நடைபெற்ற அதிமுக தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி வேலு பணியிடை நீக்கம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.நாமக்கல்லில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் அ.தி.மு.க நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் கடந்த மாதம் 15ஆம் தேதி நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன் உள்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.இந்த நிகழ்ச்சிககு வந்த நீதிபதி வேலு, பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்து கூட்டம் முடிவடையும் வரை நிகழ்வுகளைக் கவனித்தார். நீதிபதி ஒருவர், கட்சி நிகழ்ச்சியில் பார்வையாளராகக் கலந்து கொண்டது, சர்ச்சையை ஏற்படுத்தியது.இதையடுத்து, இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டது. இந்த நிலையில், நீதிபதி வேலுவை பணியிடை நீக்கம் செய்து உயர்நீதிமன்ற பதிவாளர் உத்தரவு பிறப்பித்தார்.பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நீதிபதி வரும் ஜூலை 31ஆம் தேதியுடன் பணியில் இருந்து ஓய்வு பெற இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது webdunia
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக