புதன், 23 ஜனவரி, 2013

விஸ்வரூபம் நான் சொன்னபடிதான் இருக்கிறதா? பார்த்துச் சொல்லுங்கள்

Tamil
றுதியாக, உறுதியாக அல்லது ஒருவழியாக ‘விஸ்வரூபம்’ வெள்ளிக்கிழமை (25-1-2013)  வெளியாக இருக்கிறது.
‘விஸ்வரூபம்’ படத்தை திரையிடுவதில் ஏற்பட்ட சர்ச்சையில், ‘தியேட்டர், டி.டிஎச்’ என்று கமல் செய்த திரைக்கதை; ஹாலிவுட் படங்களுக்கே சவால் விடும் அளவிற்கு பரபரப்பாக அமைந்தது.
‘தமிழ் சினிமாவின் பல புதுமைகைளுக்கு முன்னோடி’ என்று கமலை புகழ்கிறார்கள்; அவரின் ரசிகர்களாகவும் இருக்கிற இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள்.
அதோடு இதையும் அவர்கள் சேர்த்து சொல்லலாம்; ‘படம் வெளியாவதற்கு முன் இதுபோன்ற விளம்பர யுக்திகளை ஹாலிவுட்டில் கூட இதுவரை யாரும் செய்ததில்லை. உலக சினிமாக்களுக்கே புதிய விளம்பர யுக்தியை அறிமுகம் செய்திருக்கிறார் உலக நாயகன்’ என்று.

‘விஸ்வரூபம்’ படத்தின் முதல் விளம்பரம் தினத்தந்தியில் வெளியினாபோது, அந்தப் படத்தின் அரசியல் கண்ணோட்டம், இப்படித்தான் இருக்கும் என்று எழுதியிருந்தேன். (6-6-2012)
அதை தொடர்ந்து ஒரு கேள்விக்கான பதிலையும், இன்னொரு கட்டுரையையும் எழுதியிருந்தேன். அவைகளை இங்கு மீண்டும் பிரசுரிக்கிறேன். படம் பார்த்து விட்டு சொல்லுங்கள்; நான் எழுதிய படிதான் படம் இருக்கிறதா? என்று. (இருக்கும்)
‘அப்படி இல்லாமல், இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக படம் இருந்தால் நீ என்ன செய்வாய்?’ என்கீறார்கள் என்னிடம் பலர்.
நிச்சயம் வருத்தம் தெரிவிப்பேன்.
சரி, அது இருக்கட்டும்; ‘நான் எழுதியபடி படம் இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்,?’ நான் கேட்கிறேன்.
**
வேறு வேலைகள் இருப்பதால், எனக்கு இன்னும் ஒரு வாரத்திற்கு மேல் சினிமா பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. வாய்ப்பிருக்கிற தோழர்கள் பார்த்துவிட்டு எழுதுங்களேன். http://mathimaran.wordpress.com/

கருத்துகள் இல்லை: