செவ்வாய், 22 ஜனவரி, 2013

Hariyana Ex Cm சவுதாலாவுக்கு 10 ஆண்டு சிறை

 முன்னாள் துணைப்பிரதமரும் ஹரியானாவின் முன்னாள் முதல்வருமான தேவி லாலின் மகன் சௌதலாதான் பின்னாளில் ஹரியானாவின் முதலமைச்சராக வந்தார் தற்போது அதே சௌதலாவுக்கும் அவரது மகன் அஜய்க்கும் ஆண்டுகள் சிறைத்தண்டனை என்பது அதிர்ச்சியாக உள்ளது,.
ஆசிரியர் நியமன வழக்கில் ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா மற்றும் அவரது மகன் அஜய் சவுதாலாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை கேட்டதும் சவுதாலா ஆதரவாளர்கள் நீதிமன்றத்தின் மீது கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இந்த தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்யப்போவதாக சவுதாலா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஹரியானா மாநிலத்தில் 2000ம் ஆண்டு இந்திய தேசிய லோக்தள் கட்சியின் தலைவரான ஓம்பிரகாஷ் சவுதாலா முதல்வராக இருந்த போது 3 ஆயிரம் ஆசிரியர்க நியமிக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றது என்பது புகார். இந்த புகார் மீது சிபிஐ வழக்குப் பதிவு விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா உள்ளிட்ட 55 பேரும் குற்றவாளிகள் என டெல்லி சிபிஐ நீதிமன்றம் கடந்த 17ம் தேதி தீர்ப்பளித்தது.உடனடியாக அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என்று நீதிபதி கூறியிருந்தார். அதன்படி இன்று காலை ஓம்பிரகாஷ் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா மற்றும் அதிகாரிகள் சஞ்சீவ் குமார், வித்யாதார் ஹெர்சிங் உட்பட 10 பேருக்கும் 10 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஏன் பணம் பதவி போன்றவை சரியாக வேலை செய்யவில்லை ?


இந்த தீர்ப்பை கேட்டதும் டெல்லி ரோஹினி பகுதியில் உள்ள நீதிமன்றம் முன்பாக கூடியிருந்த சவுதாலா ஆதரவாளர்கள் கொந்தளித்தனர். அவர்கள் சவுதாலாவுக்கு தண்டனை தர எதிர்ப்புத் தெரிவித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனால் போலீசாருக்கும் சவுதாலா ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்றது. அவர்களைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தியதுடன் கண்ணீர்புகை குண்டுகளையும் வீசினர். இதனால் அப்பகுதி போர்க்களமாக காட்சியளித்தது.  அப்போது கோர்ட் வளாகம் மீது சவுதாலா ஆதரவாளர்கள் கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தை நாடப் போவதாக சவுதாலா அறிவித்துள்ளார். தண்டனை விதிக்கப்பட்ட அஜய் சவுதாலா எம்எல்ஏவாகவும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும் இருக்கிறார். ஓம்பிரகாஷ் சவுதாலா ஹரியானா முதல்வராக 5 முறை இருந்துள்ளார். அஜய் சவுதாலா இவரது இளைய மகன் ஆவார்.இதுகுறித்து அஜய் சவுதாலா கூறுகையில், ஆசிரியர் நியமனத்தில் எந்த பணப்பரிமாற்றமும் நடைபெறவில்லை. தகுதி அடிப்படையில் தான் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். நாங்கள் அப்பாவிகள் என்பதை உயர்நீதிமன்றத்தில் நிரூபிப்போம். தீர்ப்பு நகல் கிடைத்ததும் மேல் முறையீடு செய்வோம் என்றார்.

ஹரியானாவின் இப்போதைய முதலமைச்சர் பூபிந்தர் சிங் ஹுடா கூறுகையில், சட்டம் தன் கடமையை செய்யும் என்று தெரிவித்துள்ளார். maalaisudar.com

கருத்துகள் இல்லை: