துணை ஜனாதிபதி பதவிக்கு அமெரிக்க
வரலாற்றில் முதல் முறையாக, இந்திய வம்சாவளிப்பெண்ணான கமலா ஹாரிஸ் (56)
களத்தில் உள்ளதால் இந்தியாவில் இந்த தேர்தல் முன் எப்போதையும் விட இப்போது
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தலுக்கு முந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் ஜோ பைடன் முன்னிலை பெற்றிருப்பதை காட்டின.
அமெரிக்காவில்
மொத்தம் உள்ள 538 தேர்தல் சபை ஓட்டுகளில் 270 ஓட்டுகளை பெறுபவரே ஜனாதிபதி
ஆக முடியும். கலிபோர்னியாவில் 55, டெக்சாஸில் 38, நியூயார்க் மற்றும்
புளோரிடாவில் தலா 29, பென்சில்வேனியாவிலும், இல்லினாய்சிலும் தலா 20,
ஓஹியோவில் 18, ஜார்ஜியாவிலும், மிச்சிகனிலும் தலா 16, வட கரோலினாவில் 15
வாக்குகள் உள்ளன. இந்த மாகாணங்கள், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முக்கிய
பங்கு வகிக்கும்.
நேற்று ஓட்டுப்பதிவு
முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கி விட்டது. இந்நிலையில் அமெரிக்க
அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் துணை
ஜனாதிபதி ஜோ பைடன் முன்னிலை வகித்து வருவதாக அமெரிக்க ஊடகங்கள்
தெரிவிக்கின்றன.
அமெரிக்க ஜனநாயகக் கட்சியின்
ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன்: டெக்சாஸ், ஜார்ஜியா, புளோரிடா, நியூ
ஹாம்ப்ஷயர் மற்றும் வெர்மான்ட் ஆகிய இடங்களில் முன்னிலை வகித்து வருவதாக
தகவல்கள் தெரிவிக்கின்றன.
கென்டக்கி, வர்ஜீனியா மற்றும் தென் கரோலினா, இன்டியானா, ஆகிய இடங்களில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலை வகித்து வருகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக