tamil.oneindia.com - Velmurugan P :
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆரம்பத்தில் முன்னிலையில் இருந்த
தான் இப்போது ஒவ்வொரு மாநிலமாக பின்னடைவை சந்தித்து வருவது விசித்திராக
உள்ளதாக அதிபர் டிரம்ப் அதிர்ச்சியுடன் புலம்பி வருகிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் 3ம் தேதியான நேற்று நடந்தது. தேர்தல் முடிந்த
உடனனேய வாக்குகுள் எண்ணப்பபட துவங்கின. முடிவுகள் தற்போது வெளியாகி
வருகின்றன.. மொத்தம் 538 பிரதிநிதிகளை கொண்ட தேர்வு குழுவில், 270
பிரதிநிதிகளின் வாக்குகளைப் பெறுபவர்தான் வெள்ளை மாளிகையை ஆள முடியும்.
அதாவாது அமெரிக்காவின் ராஜ்ஜியத்தை கைப்பற்ற முடியும்.
இதில் ஆளும் கட்சி வேட்பாளரான டிரம்பை விட எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி
வேட்பாளர் ஜோ பிடன் முன்னிலையில் இருக்கிறார். அதாவது தற்போதைய தகவலின் படி
குடியரசு கட்சி வேட்பாளரான அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 214 வாக்குகள்
பெற்றுள்ளார். ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் 238 வாக்குகள் பெற்று
முன்னிலையில் இருக்கிறார். இருதரப்பிலும் போட்டி மிக கடுமையாக உள்ளது
உச்ச நீதிமன்றம் போவேன்
அமெரிக்காவில் கடந்த 100 வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்த முறை மிக அதிக
அளவில் வாக்குகள் பதிவாகி உள்ளதால், இந்த முறை வாக்கு எண்ணிக்கை முடிய
நீண்ட நேரம் ஆகும் என்று தெரிகிறது.. இந்நிலையில் எதிர்கட்சியினர் வாக்கு
எண்ணிக்கையில் முறைகேடு செய்து வெற்றி பெற முயற்சி செய்வதாக அதிபர் டிரம்ப்
குற்றம்சாட்டி உள்ளார். அத்துடன் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும்
என்று வலியுறுத்தி வருகிறார். உச்சநீதிமன்றத்தை அணுக இருப்பதாகவும்
கூறியுள்ளார்., தேர்தலில் ஏற்கனவே தாம் வெற்றி பெற்று விட்டதாகவும் அவர்
கூறியுள்ளார்.
தபால் வாக்குகளில் முறைகேடு
இது தொடர்பாக டிரம்ப் கூறுகையில், வாக்கு எண்ணிக்கை எண்ணத் தொடங்கிய இரவு
பெரும்பாலான மாநிலங்களில் தான் முன்னிலையில் இருந்ததாகவும், ஆனால், திடீரென
ஒவ்வொரு மாநிலங்களிலும் எதிரான முடிவுகள் வெளியாகியிருப்பது விசித்திரமாக
உள்ளதாகவும் புலம்பி உள்ளார் டிரம்ப்.. ஒவ்வொரு முறையும் தபால் வாக்குகள்
எண்ணப்படும் போதெல்லாம் முடிவுகள் எப்படி மாறுகின்றன என்பது தெரியவில்லை
என்றும் டிரம்ப் வேதனை தெரிவித்துள்ளார்.
ஜோ பிடன் அதிரடி
டிரம்ப் இப்படி புலம்பி வரும் நிலையில் ஜோ பிடனோ வெற்றிக்கு அருகில்
நிற்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் அனைவரின் வாக்குகளும் எண்ணப்படும் வரை
ஓய்வெடுக்க மாட்டோம் என்று ஜோ பைடனின் தேர்தல் பிரச்சாரக் குழுவினர்
தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஜோ பைடனின் தேர்தல் பிரச்சார மேலாளர்
கூறும்போது, வாக்கு எண்ணிக்கையைத் தடுத்து நிறுத்த ட்ரம்ப் முயன்றால்
நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம். இதனை எதிர்கொள்ளச் சட்டரீதியான குழு
எங்களிடம் உள்ளது என்றார்.
நூலிழை வித்தியாசம்
தற்போதைய நிலையில் ஜார்ஜியா, வடக்கு கரோலினாவில் வெறும் ஒரு சதவீதம்
வாக்குகளே பெற்று முன்னிலையில் இருக்கிறார் டிரம்ப். இதேபோல்
பென்சிலோனாவிலும் 53 சதவீத வாக்குகள் பெற்று டிரம்ப் முன்னிலையில்
இருக்கிறார். மெக்சிகன் மாகாணத்தில் பீடன் முன்னிலையில் இருககிறார்.
விஸ்கான்சின் மாகாணத்தில் இருக்கும் ஒரு சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளே
இடைவெளி உள்ளது. மிக கடுமையான போட்டி நிலவுவதால் யார் வெல்வார்கள் என்பது
பெரிய கேள்வியாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக