மேலும் இது மக்களிடம் பொது
வாக்கெடுப்புக்கும் விடப்பட்டது. அதில் சுமார் 78 சதவீதம் பேர் ரஷிய
அதிபராக புதின் 2036-ம் ஆண்டு வரை தொடர விருப்பம் தெரிவித்தனர். அதனை
தொடர்ந்து புதின் 2036 வரை, அதாவது, அவரது, 83-வது வயது வரை, அதிபராக
இருப்பார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில்
உடல்நலக்குறைவு காரணமாக புதின் அடுத்த ஆண்டு ஜனவரியில் பதவி விலக உள்ளதாக
தகவல் வெளியானது.
ரஷிய தலைநகர் மாஸ்கோவை சேர்ந்த
பிரபல அரசியல் விமர்சகர் வலேரி சோலோவி என்பவர் இங்கிலாந்தில் இருந்து
வெளியாகும் பிரபல பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்தார்.
அப்போது அவர் கூறும் போது, “புதின் பார்கின்சன் நோயால் அவதிப்படுகிறார்.
அண்மையில் அவர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியின் வீடியோ பதிவை பார்த்தால்
இதை தெரிந்து கொள்ள முடியும். அவர் நடப்பதற்கு மிகவும் சிரமப்படுகிறார்.
நாற்காலியை பிடித்து அமரும் போது அவர் கைகளில் வலியை உணர்வதை காணமுடிகிறது.
பேனாவை பிடித்து எழுதும் போது அவரது கைகள் நடுங்குகிறது.
எனவே
அவர் தனது பொது வாழ்வில் இருந்து விலகி உடல் நிலையில் கவனம்
செலுத்துவதற்காக தனது 37 வயது காதலி அலினா கபீவா மற்றும் 2 மகள்கள்
ஆகியோரின் வற்புறுத்தலுக்கு இணங்கி பதவியை விட்டு வெளியேற
முடிவெடுத்துள்ளார். தனது குடும்பத்தினரின் ஆலோசனைகளை பெரிதும்
மதிக்கக்கூடியவரான புதின் அவர்களின் யோசனையை ஏற்று அடுத்த ஆண்டு ஜனவரியில்
தனது பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு
முன்னதாக புதின் விரைவில் ஒரு புதிய பிரதமரை நியமிப்பார். பின்னர் அவரை
அதிபராக்குவார்” என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக