தமிழ்நாட்டு வரலாற்றில் கோவில் நகை, பணம், விலையுயர்ந்த சாமி ஆடைகள், பூசை பாத்திரங்கள், தானியங்கள் திருட்டில் ஈடுபட்ட பிராமணர்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ.
கிபி 1152-ம் ஆண்டு பந்தநல்லூர் கோவிலில் உள்ள பிராமணர்கள் இறைவனுக்கு நகைகள் செய்ய வைத்திருந்த தங்க நகைகளை திருடி விட்டார்கள்.
இதனால் கோயிலில் பூசை செய்யும் உரிமையை அவர்கள் இழக்க நேரிட்டது. பின்பு அந்த உரிமை 180 காசுகளுக்கு வேறு பிராமணர்களுக்கு விற்கப்பட்டது.
கிபி 1213-ம் ஆண்டு கடவுளுக்கு தலையில் அணியப்பட்ட திருப்பட்டம் என்ற நகையைத் திருடிய பிராமணனின் வீடு பறிமுதல் செய்யப்பட்டது.
கி.பி 1289-ம் ஆண்டு மாறவர்மன் குலசேகர பாண்டியன் காலத்தில் பிராமணர்கள் கோவில் நகைகளை திருடியது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
கி.பி 1255-ம் ஆண்டு குடுமியான்மலை கோயில் பிராமணர்கள் ஆலயத்தின் பணம் நகைககளை களவாடி உள்ளனர்.
கி.பி 1225-ம் ஆண்டு திருநாகேஸ்வரம் கோயிலில் பணியாற்றிய இரண்டு பிராமண சகோதரர்களும், வேறு ஒருவரும் கோயிலில் விலையுயர்ந்த ஆடைகளைத் திருடி தங்கள் சொந்த தேவைக்கு பயன்படுத்தி உள்ளனர். கோயில் கட்டுமானப் பணியில் இருந்த செங்கற்களை தங்கள் வீடுகள் கட்ட பயன்படுத்தி உள்ளனர்.
கி.பி 1225-ம் ஆண்டு சிரீரங்கம் கோயிலில் பூசாரிகளும் பிராமண அலுவலர்களும் கோயில் சொத்துக்களை கையாடல் செய்துள்ளனர்.
கி.பி 1194-ம் ஆண்டு கோவிந்த புத்தூர் கோயிலின் தலைமை பிராமணர் கோயிலின் நிதியை கையாடல் செய்துவிட்டார். எனவே அவனது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவன் வீடும் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் கோயில் கட்டப்பட்டது.
கி.பி 1244-ம் ஆண்டு பிள்ளையாதவராயர் என்பவர் நடத்திய தணிக்கையில் பிராமணன் ஒருவர் கோயில் கிடங்கில் வைத்திருந்த நெல்லையும் கருவூலத்தில் வைத்திருந்த பணத்தையும் களவு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கி.பி 992-ம் ஆண்டு திருவலம் கோயிலின் கணக்குகளை தணிக்கை செய்தபோது பிராமணர்கள் கோவில் நிலங்கள் மூலம் பணம் அபகரிப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கி.பி 1099-ம் ஆண்டு ஒரு கோவிலில் உள்ள நகைகளும், பூசை பாத்திரங்களும் கோயில் பூசாரிகளில் ஒருவனால் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு 240 காசுகள் என மதிப்பிடப்பட்டது. அவற்றை தன்னால் திருப்பி செலுத்தமுடியாத நிலையை இருப்பதாக அவன் அறிவித்தான்.
அதற்கு ஈடாக அவனுக்கு வழங்கப்பட்ட பூசை உரிமையை வேறு பிராமணர்களுக்கு விற்று கிடைக்கும் தொகையை இழப்பீடாக எடுத்துக்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.
கி.பி 1289-ம் ஆண்டு சேலம் பகுதியில் ஒரு பிராமணன், அவன் மனைவி, மருமகள் என அனைவரும் கோவில் பாத்திரங்கள் மற்றும் நகைகளை தொடர்ந்து திருடி வந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
புதுக்கோட்டையில் திருநாளுக்குன்றமுடைய நாயனார் கோயிலில் பணம், நகைகள் திருடப்பட்டதால் பூசை மற்றும் தினசரி வழிபாடுகள் தடைபட்டது.
மேற்கண்ட தகவல்கள் NCBH வெளியீடு, இந்திய ஐரோப்பியவியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் எஸ்.ஜெயசீல ஸ்டீபன் அவர்கள் எழுதிய ’தமிழக மக்கள் வரலாறு – காலனிய வளர்ச்சி காலம்’ புத்தகத்தில் தொகுக்கப்பட்ட தகவல்கள்.
நன்றி :
Madras Radicals
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக