சனி, 7 நவம்பர், 2020
ஜோ பைடன்: மூன்றாவது ஓட்டத்தில் முதலிடம் பிடித்த "அதிபர்
அமெரிக்க தேர்தலில் ஜோ பைடன் வெற்றி - 273 முன்னிலை.. Joe Biden Wins US Presidency With 273 Electoral College Votes
BBC :அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெறுவதற்கான தேர்தல் சபை வாக்குகளை பெற்றுள்ளார். பெரும்பான்மைக்கு தேவையான 270 வாக்குகளின் பலத்தை கடந்து அவருக்கு 273 தேர்தல் சபை வாக்குகள் இருப்பதாக பிபிசி கணித்துள்ளது.
தேர்தலில் நானே வென்றேன் - ட்விட்டர் பதிவு மூலம் உரிமை கோரும் டிரம்ப். அமெரிக்க தேர்தலில் நானே அதிக அளவில் வென்றேன் என்ற ஒற்றை வரியை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் டொனால்ட் டிரம்ப். முன்னதாக, மற்றொரு பதவில் தனது வழக்கறிஞர்கள் அமெரிக்க நேரப்படி காலை 11.3 மணியளவில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்துவார்கள் என்று குறிப்பிட்டிருந்தார் டிரம்ப். பிறகு அந்த பதிவை நீக்கி விட்டு, மிகப்பெரிய செய்தியாளர் சந்திப்பு நடக்கப்போவதாக அவர் கூறியுள்ளார்.
குட்டி புட்டி புகை ஜாலி பழக்கமுள்ள பார்ப்பனர்கள் மற்ற சாதி மக்களுடன் சேர்ந்து ...
பாஜகவினர் பங்கேற்கும் ஊடக விவாதங்களில் பங்கேற்பதில்லை: திமுக+ தோழமைக் கட்சிகள் முடிவு
nakkeeran.in : திமுக தலைமையிலான தோழமைக் கட்சிகளின் ஊடகக் கண்காணிப்புக் குழுக் கூட்டம் 06.11.2020 வெள்ளிக்கிழமை இணைய வழியில், திமுக தலைமையிலான தோழமைக் கட்சிகளின் ஊடகக் கண்காணிப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பேரா.கான்ஸ்டன்டைன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அருள்மொழி (திக), கோபண்ணா (காங்கிரஸ்), மகேந்திரன் (சிபிஐ), கனகராஜ்(சிபிஎம்), மல்லை சத்யா (மதிமுக), ரவிக்குமார் (விசிக), அப்துல் ரஹ்மான் (இயூமுலீ), அப்துல் சமது (மமக), சூர்ய மூர்த்தி (கொமதேக) ஆகியோர்கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-1. ஊடக விவாதங்களில் பாஜக சார்பில் பங்கேற்போர் தரம் தாழ்ந்த முறையில் கருத்துக்களைத் தெரிவிப்பதோடு, தனிநபர் தாக்குதலிலும் ஈடுபடுகின்றனர். அவர்களால் தமிழ்த் தொலைக்காட்சி ஊடக விவாதங்களின் தரம் சரிந்து கொண்டே போகிறது. எல்லா அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் விவாதத்துக்கு அழைக்கவேண்டியது ஊடகங்களில் கடமை என்றாலும் தரம் தாழ்ந்த விமர்சனங்கள் தனிநபர் தாக்குதல்கள் முதலானவற்றைத் தடுக்க வேண்டியதும் அவர்களுடைய கடமையே ஆகும்.
திமுக வேட்பாளர் தேர்வு .. ‘மண்டல’ செயல்திட்டம்!
7 பேர் விடுதலை: திமுக- காங்கிரஸ் மோதல்!
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று (நவம்பர் 7) வெளியிட்டிருக்கும் செய்தியில், “ முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையாளிகளை விடுதலை செய்வதை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். அவர்களை விடுவித்தால் சிறைச் சாலைகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் அனைத்து தமிழ் கொலை குற்றவாளிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழும்.
பிஹார் லாலுவின் RJD காங்கிரஸ் கூட்டணி 138 ! நிதிஷ் BJP கூட்டணி 112. Exit கருத்துக் கணிப்பு Bihar Exit - RJD emerge single largest party
ரஷிய அதிபர் புதின் அடுத்த ஆண்டு பதவி விலகுகிறாரா? கிரெம்ளின் மாளிகை விளக்கம்
ஒரு சிங்கள மாணவிக்கு யாழ்ப்பாணத்தில் படிப்பதற்கு ஏன் பிடித்திருக்கிறது?
நம்ம Jaffna : யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற சிங்கள மாணவி ஒருவர் சிங்களத் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் யாழ்ப்பாணத்தைப்பற்றி கூறிய விடயங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.சிங்கள மொழியில் இடம்பெற்ற இந்த உரையாடலின் தமிழ் மொழிபெயர்ப்பினை இங்கு இணைக்கின்றோம்.
யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் தாயக பிரதேசங்கள் குறித்து தென்னிலங்கை சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் பல்வேறுபட்ட கருத்து முரண்பாடுகள் மத்தியில் இந்த மாணவியின் வெளிப்படையான கருத்துக்கள் இங்கு காண்பிக்கப்படவேண்டியதாகும்.
மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு பினாமிகள் ஐவர் அடுத்தடுத்து கைது ..வேலுமணியின் 300 கோடி ரூபா எங்கே?
மஹா பெரியவாள் எங்கு போனாலும் பல்லக்கிலேயே போவா.. பல்லக்கைத் தூக்க 72 சூத்திரன்கள்...
Thamilan Da : மஹாப்பெரிய"வால்".... 1968 வரை... எங்கு போனாலும் பல்லக்கிலேயே போவா....
பல்லக்கைத் தூக்க, தொட்டாலே தீட்டு என்று சொல்லப்படும் சூத்திரன்தான் தூக்க வேண்டும்... முன்புறம், 18 பேர்,,, பின்புறம் 18 பேர்.. மொத்தம் 36 பேர்... 100 கிலோமீட்டர் வந்தபிறகு ஆட்கள் மாற்றப்படும்... ஆக 72 சூத்திரன்கள்... அதுமட்டுமல்லாது, 2 குதிரை, யானை, நாதஸ்வர செட் என்று காஞ்சியிலிருந்து திருச்சிபோல எங்கு போனாலும் இதில்தான் போவா...
1968...இல் திருச்சியில் தந்தை பெரியார் பேசும்போது....
""தோழர்களே மனிதனை மனிதன் தோளில் தூக்கிவந்தால், காவிரிப்பாலத்தில் தள்ளிவிடுங்கள்"" என்றார்... அந்த "வாலுக்குத்" தெரியும், பெரியார் தொண்டர்கள் தள்ளிவிட்டால்,,, எந்தக் கடவுளும் காப்பாற்ற மாட்டான் என்று... பல்லக்கை ஓரங்கட்டிவிட்டு, அன்றுமுதல் காரில் போனாள்... தமிழனின் மானம் காத்த பெரியார்
தஞ்சை: `வரவு, செலவுக் கணக்கு; கைவிரித்த மகன்?’ - துரைக்கண்ணு ஆதரவாளர்கள் கைது பின்னணி
வெள்ளி, 6 நவம்பர், 2020
அப்பா இல்லாத வெறுமையை கடந்துவிட்டதாக சொல்ல முடியாது – கலங்க வைத்த கனிமொழி எம்.பி.
puthiyamugam.com :எனது தந்தை இருக்கும்வரை எங்கள் வீடு கொண்டாட்டமாகவே இருக்கும். அப்படி இருக்கும்போது அவர் இல்லாத வெறுமையிலிருந்து நான் மீண்டுவிட்டதாக சொல்லமுடியாது.
அதேசமயம் அவர் இல்லாத நிலையில் அவரிடம் பெற்ற உறுதியை வெளிப்படுத்தி பணியில் ஈடுபடுகிறேன் என்று கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி பேட்டியில் கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
அந்தப் பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது.
2ஜி வழக்கில் எனக்கு தொடர்பு இருக்கிறதா இல்லையா என்பதுகூட தெரியாமல் என்னை கடுமையாக விமர்சித்தார்கள். அந்த வழக்கில் நான் கைதுசெய்யப்பட்டு ஜாமீன் கிடைக்குவரை எனது தந்தை மனதளவில் வருத்தப்பட்டார். தன்னால்தான் எனக்கு இதெல்லாம் நடப்பதாக கூறுவார். ஆனால், பொதுவாழ்க்கை என்று வந்துவிட்டால் இதெல்லாம் சகஜம் என்ற பக்குவத்தை அவரிடமிருந்து நான் பெற்றேன்.
விஜய் எத்தனையோ முறை சொல்லியும் எஸ்ஏசி கேட்கவில்லை.. விஜய்யின் தாயார் ஷோபா பேட்டி
Velmurugan P - tamil.oneindia.com : சென்னை: விஜய் எத்தனையோ முறை சொல்லியும் அரசியல் பயணம் குறித்து பொதுவெளியில் பேசுவதை எஸ்ஏ சந்திரசேகர் நிறுத்தவில்லையாம். இதனால் விஜய் அவருடைய தந்தையுடன் பேசுவதை நிறுத்திவிட்டார் எ னநடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் கூறினார்.
சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்ட இந்த நேரத்தில், நடிகர் விஜய், தனது விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றி உள்ளதாகவும் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி ஆரம்பக்க உள்ளதாகவும் செய்தி ஊடகங்களின் சமூக வலைதளங்களில் நேற்று தகவல்கள் காட்டுத் தீயாக பரவின. இந்நிலையில் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர், அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சிக்கு நான் தான் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளேன். இது என்னுடைய முயற்சி. இது விஜயின் அரசியல் கட்சி அல்ல" என்று நேற்று விளக்கம் அளித்தார். விஜய் விளக்கம் இதையடுத்து அரசியல் பிரவேசம் குறித்து விளக்கம் அளித்த நடிகர் விஜய், " என் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகா் அவா்கள் ஓா் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார் என்பதை ஊடகங்களின் வாயிலாக அறிந்தேன். அவா் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடா்பும் இல்லை என திட்டவட்டமாக எனது ரசிகா்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் ஒரு எம் எல் ஏயாக முடியல்லியே நோ பீஸ் ஆப் மைண்ட் அல்லது
ஆனைமலை சமணத்தின் அடையாளம்; அங்கு புதிய வழிபாட்டு கட்டமைப்புகளை உருவாக்கக் கூடாது – நீதிமன்றம்
வரலாற்றில் பிராமணர்கள் செய்த எடை குறைப்புகள்!
கொலை செய்ய ரூ.55,000! ரவுடி கும்பல் விலைப்பட்டியல் வெளியிட்டுள்ளது.. உத்தரப் பிரதேச மார்க்கெட்டில்
மாநிலத்தில் குற்றச்சம்பவங்களைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநில அரசு அறிவித்தாலும், அவை குறைந்த பாடில்லை. இந்நிலையில், உபியைச் சேர்ந்த ரவுடி கும்பல் ஒன்று குற்றம் செய்வதற்கான விலைப் பட்டியலை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்க்கெட்டில் காய்கறிகளுக்கு விலைபட்டியல் வைத்திருப்பது போன்று, யாரையாவது மிரட்ட வேண்டுமா ரூ. 1000, அடிக்க ரூ.5,000, தாக்கி காயப்படுத்த வேண்டுமா ரூ.10,000 கொலை செய்ய ரூ.55,000 வசூலிக்கப்படும் எனக் குற்றம் செய்வதற்கான விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் தொடங்கிய கட்சி பொறுப்பில் இருந்து விலகினார்
vijay shoba |
எஸ் ஏ சந்திரசேகர்-ஷோபா |
மேலும், அரசியல் கட்சியை பதிவு செய்ததற்கும், விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எஸ்ஏ சந்திரசேகர் விளக்கம் அளித்தார். இதையறிந்த நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இன்று என் தந்தை திரு.எஸ்.ஏ.சந்திரசேகா் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடா்பும் இல்லை என திட்டவட்டமாக எனது ரசிகா்களுக்கும் பொதுமக்களுக்கும் தொிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார். எஸ் ஏ சந்திரசேகர் ஷோபா இந்நிலையில் நடிகர் விஜய்யின் தாய் ஷோபா அளித்த பேட்டியில், அசோசியேஷன் தொடங்குவதாகவே என்னிடம் கையெழுத்து பெற்றார் எஸ்.ஏ.சி. கட்சி தொடங்குவதற்காக 2 வது முறை கையெழுத்து கேட்டபோது நான் போடவில்லை. அரசியல் பற்றிப் பேச வேண்டாம் என எஸ்.ஏ.சி. இடம் விஜய் கூறியிருந்தார்.
டிரம்ப்பின் அதிகாரிகள் ராஜினாமா! புதிய அதிபராகிறார் பிடென்
உலக அளவில் மிகப் பெரிய அவப்பெயரையும் சேர்த்தே சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் டொனால்ட் டிரம்ப். நவம்பர் 3 ஆம் தேதி நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான முடிவுகள், இந்திய நேரப்படி இன்று நவம்பர் 6 ஆம் தேதி வரை தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஜார்ஜியா, பென்சில்வேனியா மாநிலங்களில் இறுதிகட்ட எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்திய நேரப்படி நவம்பர் 6 ஆம் தேதி அதிகாலை அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். வாடியமுகத்தோடு பிரஸ் ரூமுக்கு வந்த டிரம்ப், முதலில் தனது குடியரசுக் கட்சி வெற்றிபெற்ற மாநிலங்களின் பெயர்களை எல்லாம் பட்டியலிட்டார். பின், ‘தேர்தல் சட்ட ரீதியாகவும் நியாயமாகவும் நடந்திருந்தால் நான் வெற்றிபெற்றிருப்பேன். சட்டவிரோதமான ஓட்டுகளை எல்லாம் எண்ணிக்கொண்டிருப்பதால்தான் அவர்கள் எங்களிடமிருந்து வெற்றியைத் திருட முயற்சிக்கிறார்கள்”என்று கூறியவர் அதற்கான எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை. டிரம்ப் தனது அறிக்கையை மட்டும் படித்துவிட்டு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் மீண்டும் தன் அறைக்குள் சென்றுவிட்டார்.
ராமேஸ்வரம் கோயில் தங்க நகை எடை குறைவு: ’40 ஆண்டு பயன்பாட்டால் தேய்மானம்’ – ராமநாதசுவாமி கோயில் நிர்வாகம்
Add caption |
அமெரிக்க மாகாண தேர்தல்களில் 5 பெண்கள் உள்பட இந்திய வம்சாவளியினர் 12 பேர் வெற்றி
* நியூயார்க் மாகாண சட்டசபைக்கு இந்திய வம்சாவளி பெண் வக்கீல் ஜெனிபர் ராஜ்குமார் (38), ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். அவர் குடியரசு கட்சி வேட்பாளர் ஜியோவானி பெர்னாவை வீழ்த்தி, அந்த மாகாண சட்டசபைக்கு தேர்வு பெற்றுள்ள முதல் தெற்காசிய பெண் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.
இந்தியா விமானங்களுக்கு தடை விதித்த சீனா.. இந்தியர்கள் சீனா வரவும் தற்காலிமாக தடை
சீனா வர தடை இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில். "இந்தியாவில் உள்ள சீன தூதரகம் / துணைத் தூதரகங்கள் இந்தியாவில் வசிக்கும் சீனர்களை தவிர மற்றவர்கள் விசா அல்லது குடியிருப்பு அனுமதிகளை வைத்திருந்தாலும், அவர்களுக்கு சீனா வர அனுமதி அளிக்கப்படாது
மாலியில் இஸ்லாத்தை ஏற்ற மர்யத்தின் கடிதமும் ,, Stockholm Syndrome மும்
வியாழன், 5 நவம்பர், 2020
அமெரிக்காவில் முதல் திருநங்கை எம்.பி.,யாக சாரா தேர்வு
திமுக-வில் இணைந்தார் (ஜல்லிக்கட்டு) காங்கேயம் கால்நடை வளர்போர் சங்க செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி
thinakaran :காங்கேயம்: காங்கேயம் கால்நடை வளர்போர் சங்க செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி திமுக-வில் இணைந்தார். ஜல்லிக்கட்டு போராட்டத்தை முன்னின்று நடத்தியவரான சேனாதிபதி கால்நடை ஆராய்ச்சி அறக்கட்டளை நடத்துகிறார். திராவிடத்தால் கொங்கு மண்டலமும் தமிழ்நாடும் பெற்ற நன்மைகளை பற்றி ஆய்வாளரை சேனாதிபதி நிகழ்த்தி வந்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கார்த்திகேய சேனாதிபதிக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்தினார்.
மயிலாப்பூர் தொகுதியில் கமல்ஹாசன் போட்டி?
ரஜினியுடன் கமல்ஹாசன் பேச்சு ( தன்கட்சிக்கு ஆதரவு தரவேண்டும் அம்புடுதே)
விஜய் மக்கள் இயக்கம் கட்சி SC சந்திரசேகர் பதிவு .. எனக்கும் கட்சிக்கும் தொடர்பு இல்லை நடிகர் விஜய் அறிவிப்பு
விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாற்றி இருப்பதாக விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் கூறினார். மேலும்,
அரசியல் கட்சியை பதிவு செய்ததற்கும், விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எஸ்ஏ சந்திரசேகர் விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இன்று என் தந்தை திரு.எஸ்.ஏ.சந்திரசேகா் அவா்கள் ஓா் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளா்ா என்பதை ஊடகங்களின் வாயிலாக அறிந்தேன். அவா் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடா்பும் இல்லை என திட்டவட்டமாக எனது ரசிகா்களுக்கும் பொதுமக்களுக்கும் தொிவித்துக்கொள்கிறேன்.
இதன் மூலம் அவா் அரசியல் தொடா்பாக எதிா்காலத்தில் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளும் என்னை கட்டுப்படுத்தாது என்பதை தொியப்படுத்திக்கொள்கிறேன். மேலும் எனது ரசிகா்கள், எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளாா் என்பதற்காக தங்களை அக்கட்சியில் இணைத்துக்கொள்ளவோ கட்சி பணியாற்றவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். அக்கட்சிக்கும் நமக்கும் நமது இயக்கத்திற்கும் எவ்வித தொடா்பும் கிடையாது என்பதை தொிவித்துக்கொள்கிறேன்
அமெரிக்க தேர்தலில் 4 இந்திய வம்சாவளியினர்.. டாக்டர் அமி பெரா, ரோகன்னா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, பிரமிளா ஜெயபால்
இவர்கள் அனைவரும் செல்லமாக ‘சமோசா காகஸ்’ என்று அழைக்கப்பட்டு வந்தனர். இவர்களில் கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டார். எஞ்சிய 4 பேரும் மீண்டும் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை தேர்தலில் போட்டியிட்டனர். அவர்கள் அனைவரும் வெற்றி பெற்று நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபைக்கு மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர்.
அமெரிக்க தேர்தல் 264 இடங்களில் ஜோ பைடன்முன்னிலை . டிரம்ப் 214 இடங்களுடன் பின்தங்கியுள்ளார்
dailythanthi.com :வாஷிங்டன், அமெரிக்க அதிபர் தேர்தல் நிறைவு பெற்று தற்பொது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதிபரை தேர்வு செய்ய அமெரிக்காவில் மொத்தம் உள்ள 50 மாநிலங்களில் 538 தேர்வாளர்கள் (பிரதிநிதிகள்) உள்ளனர். இவர்களில் 270 பேரின் வாக்குகளை பெறும் வேட்பாளரே அமெரிக்க அதிபராக தேர்வாக முடியும்.
இதுவரை நடந்து முடிந்துள்ள வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் ஜோ பைடன் முன்னிலை வகித்து வருகிறார். அதிபர் தேர்தலில் வெற்றியை முடிவு செய்யும் மாநிலங்களாக கருதப்படும் மிச்சிகன், விஸ்கான்சின் ஆகியவற்றில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். அதே நேரம் வடக்கு கரோலினா, பென்னிசில்வேனியா, ஜியார்ஜியா ஆகிய இடங்களில் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார். மிச்சிகனில் ஜோ பிடனுக்கு 49.9 சதவீதமும், டிரம்புக்கு 48.6 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன. ஏற்கனவே, அமெரிக்காவின் நியூ மெக்சிகோ, நியூ ஹார்ம்ஷயர், நியூயார்க், வெர்மான்ட், மேரிலேண்ட், மசாசூட்ஸ், நியூஜெர்சி, கனக்டிகட், டெலவர், வாஷிங்டன், கொலராடோ, கலிபோர்னியா, இல்லினாய்ஸ், விஸ்கான்சின் உள்ளிட்ட மாநிலங்களில் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார்.
உலகை ஒரு நாள் இஸ்லாம் ஆளும்.... கோஷமிடும் இஸ்லாமியவாதிகள்
அர்னாப் கோஸ்வாமிக்கு 14 நாள் நீதிமன்ற காவல் - ஏன் அர்னாப் கோஸ்வாமி கைது?
அர்னாப்பினால் தற்கொலை செய்தவரின் மனைவியும் மகளும் |
dailythanthi.com : மும்பை அலிபாக் பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு கட்டிட உள்வடிவமைப்பாளர் அன்வாய் நாயக் மற்றும் அவரது தாய் தற்கொலை செய்த வழக்கு தொடர்பாக தனியார் தொலைக்காட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை போலீசார் இன்று கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.மும்பையில் உள்ள வீட்டில் இருந்து தன்னை போலீசார் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி அழைத்துச் சென்றதாக அர்னாப் தெரிவித்திருந்தார். அவரது கைதுக்கு பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் சட்ட விதி மீறல் எதுவும் இல்லை என மராட்டிய அரசு தெரிவித்துள்ளது.இதற்கிடையில் மும்பையில் உள்ள இல்லத்தில் சென்று கைது செய்ய முயன்றபோது காவலர்களை தாக்கியதாக அர்னாப் கோஸ்வாமி, அவரது மனைவி மற்றும் 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அர்னாப் கோஸ்வாமியை அலிபாக் மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜோ பிடன் வெற்றிக்கு அருகில்! கடைசி நேரத்தில் திடீரென மாறிய முடிவு.. டிரம்ப் அதிர்ச்சி.... நூலிழை வித்தியாசத்தால்.....
திருமாவளவன் கைவைத்தது, சிலந்தி வலை அல்ல, உயிர்ப்பும், எதிர்வினையும் நிறைந்த தேன்கூடு.
புதன், 4 நவம்பர், 2020
அர்னாப் நிச்சயம் ஒரு ஊடகவியலாளர் இல்லை ஆட்சியாளர்களுக்கான மார்க்கெட்டிங் கூலியாள் .. சமூக வலையில் ..
அமெரிக்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த டிரம்ப் முயற்சி; பிடென் கண்டனம்! live streaming
“நாங்கள் இந்த தேர்தலில் வெற்றி பெற தயாராகி கொண்டிருக்கிறோம். வெளிப்படையாகச் சொல்வதானால் நாங்கள் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டோம். ஆனால் தேர்தலில் மோசடி நடக்கிறது. சட்டத்தை முறையான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எனவே நாங்கள் நாட்டின் உச்சநீதிமன்றத்திற்கு செல்வோம். அனைத்து வாக்குகளும் நிறுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்”என்று அறிவித்திருக்கிறார் டிரம்ப்.
அர்ணாப் கோஸ்வாமி அதிகாலையில் அடித்து இழுத்துச் சென்றதாக ரிபப்ளிக் டிவி புகார்!
tamil.oneindia.co -Arivalagan : மும்பை: ரிபப்ளிக் டிவி தலைமை எடிட்டர் அர்ணாப் கோஸ்வாமி இன்று திடீரென மும்பை போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அர்ணாபின் வீட்டுக்கு இன்று காலை சென்ற மும்பை போலீஸ் படையினர் அவரை அங்கிருந்து கைது செய்து ராய்காட் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். தற்கொலைக்குத் தூண்டியதாக தொடரப்பட்ட ஒரு பழைய வழக்கின் கீழ் அர்ணாப் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விசாரணை நடத்துவதற்காகவே அர்ணாபை போலீஸார் கைது செய்து கொண்டு சென்றுள்ளனராம். முன்னதாக பத்துக்கும் மேற்பட்ட போலீஸார் அர்ணாப் வீட்டுக்கு விரைந்தனர். அவர்களுடன் அர்ணாப் கடும் வாக்குவாதம் புரிந்துள்ளார். இதையடுத்து அவரை போலீஸார் பிடித்து இழுத்து கைது செய்து வண்டியில் ஏற்றதாக சொல்லப்படுகிறது. போலீஸார் தன்னைத் தாக்கியதாக அர்ணாப் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் போலீஸார் இதை மறுத்துள்ளனர்.
ஆர்.கே.சுரேஷ் சினிமாக்காரர்களை வலைவீசி பாஜகவுக்கு ஆள் சேர்த்துக் கொண்டிருக்கிறார். சினிமாவை விட அதிகம் சம்பாதிக்க...
அர்னாப் கோஸ்வாமி கைது .. (ரிபப்ளிக் டிவி) இருவரின் தற்கொலை விவகாரம்
Add caption |
This case goes back to 2018 when a
53-year-old interior designer Anvay Naik and his mother Kumud Naik dies
by suicide in Alibaug in May 2018. A suicide note purportedly written by
Anvay was found in which he said that Goswami and two others had not
paid him Rs 5.40 crore which led to his financial constraints.
இலங்கையில் கரை ஒதுங்கிய 100 திமிங்கலங்கள் மீண்டும் கடலுக்குள் அனுப்பும் பணி தீவிரம்
ரஜினி செல்வாக்கு - அதிர்ச்சி தந்த ரிப்போர்ட்! சினிமா புகழ், ரஜினியின் அரசியல் செல்வாக்காக மாறவில்லை!
“இந்த போட்டோ டெல்லி வரை போயிருக்கிறது. ரஜினி அரசியலுக்கு வர வேண்டுமென்றும், வருகிறார் என்றும் முப்பது வருடங்களாக தமிழ்நாட்டில் பேசப்படுகிறது. அதுவும் 1996 முதலான கடந்த 24 ஆண்டுகளில் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என்றே எல்லாரையும் பேசவைத்து தேர்தல் வாய்ஸ், ரஜினி மன்றம் இன்ன கட்சிக்கு ஆதரவு, எதிர்ப்பு என்றெல்லாம் பேசிய ரஜினி இன்று க்ளைமாக்ஸில் மீண்டும் அரசியலுக்கு வருவேனா, வர மாட்டேனா என்பது பற்றி மீண்டும் குழப்படைய வைத்திருக்கிறார்.
U.S Election live அமெரிக்க தேர்தல் முடிவுகள் நேரடி ... ஜோ பைடன் முன்னிலை ..
அதிமுகவுக்கு டாடா குழுமம் தேர்தல் நிதி: ரூ46.78 கோடி வழங்கியது
அரசியல் கட்சிகள் தனிநபர், தனியார் நிறுவனங்கள், அறக்கட்டளைகள்,
நிறுவனங்களிடம் இருந்து தேர்தல் நிதிகளைப் பெறுகின்றன. அதன்படி, டாடா
குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முற்போக்கு தேர்தல் அறக்கட்டளை 2019-20
ஆம் ஆண்டில் அதிமுகவுக்கு ரூ.46.78 கோடி தேர்தல் நிதியாக வழங்கியுள்ளது
தெரியவந்துள்ளது.
அதிமுக கடந்த நிதியாண்டில் பெற்ற மொத்த தேர்தல் நிதி பங்களிப்புகளில் தலா
ரூ.20,000க்கு மேல் என கிட்டத்தட்ட 90% தேர்தல் நிதியாக பெற்றுள்ளது. அதிமுக 2020 அக்டோபர் 26ம் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த 2019-20
ஆம் ஆண்டிற்கான தேர்தல் நிதி பங்களிப்பு அறிக்கையின்படி, ஐ.ஐ.டி.சி
லிமிடெட் நிறுவனத்திடமிருந்து அதிமுக ரூ.5.39 கோடி இரண்டு தனித்தனி
காசோலைகளைப் பெற்றுள்ளது.
நிரவ் மோடியின் மேல்முறையீட்டு மனு இங்கிலாந்து நீதிமன்றத்தில் தள்ளுபடி
செவ்வாய், 3 நவம்பர், 2020
ஆஸ்திரியா பயங்கரவாதத் தாக்குதலில் 4 பேர் பலி.. பலர் காயம் .. வியன்னாவில் 6 இடங்களில் துப்பாக்கிச்சூடு
நகரின் மையப்பகுதியில் உள்ள தேவாலயத்துக்கு அருகே தாக்குதல் நடந்துள்ளது. ஆனால், பயங்கரவாதிகள் அந்த ஆலயத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த வந்தார்களா என்பது இன்னும் தெளிவாகவில்லை.
ராமேஸ்வரம் கோயில் நகைத்திருட்டு அம்பலம் குருக்கள்கள், மணியம் உள்ளிட்ட 30 பேர்கள் மீது சந்தேகம்
இந்துக்களின்
முக்கிய புனித தலங்களில் ஒன்றாக விளங்கிவருவது ராமேஸ்வரம். காசிக்கு
நிகராக விளங்கும் இந்தத்தளத்திலுள்ள அருள்மிகு ராமநாதசுவாமி கோயிலுக்கு
நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இலங்கை மன்னர்
பராக்கிரம பாகுவால் சிறிய அளவில் உருவாக்கப்பட்ட இந்தக் கோயில், பின்னர்
ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களால் உலகப் பிரசித்தி பெற்ற மூன்றாம்
பிராகரத்துடன் உருவானது. மன்னர்களுக்குச் சொந்தமான கோயிலாக இருந்ததால்,
இந்தக் கோயிலில் பழைமைவாய்ந்த தங்கம், வெள்ளி, பவளம், முத்து, வைரம்,
வைடூரியம் உள்ளிட்ட 65 வகையான ஆபரணங்கள் கருவூலத்தில்
பாதுகாக்கப்பட்டுவருகின்றன.
வீடியோவால் பிரபலமான உணவுக் கடை முதியவர்: வீடியோ எடுத்த நபர் பணத்தை ஏமாற்றியதாக புகார்
அந்த வீடியோ வைரலானது; பலரும் அந்த முதியவருக்கு உதவ முன் வந்தனர் மேலும், கெளரவ் வாசன் அந்த முதியவருக்கு உதவ நன்கொடைகள் வழங்குமாறும் கேட்டிருந்தார்.தற்போது தனது பெயரில் வந்த பணத்தை, கெளரவ் மோசடி செய்துவிட்டார் என முதியவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கமலா ஹாரிஸ் எங்கள் கிராமத்து பொண்ணு" - கொண்டாடும் மன்னார்குடி கிராமவாசிகள்
பாஜகவின் வேல் யாத்திரை நவ. 6-ம் தேதி கர்நாடகா முதல்வர் எடியூரப்பா சென்னை வருகை
ஒரேநாளில் 7 பில்லியன் டாலர் முகேஷ் அம்பானி சொத்து மதிப்பில் சரிவு.. அதிர்ச்சி !
tamil.goodreturns.in/ கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட வர்த்தக மற்றும் பொருளாதாரப் பாதிப்பில் இந்திய மக்களும், இந்திய நிறுவனங்களும் மோசமான சூழ்நிலையை எதிர்கொண்ட போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது டெலிகாம் மற்றும் ரீடைல் வர்த்தகத்தை விரிவாக்கும் முயற்சியாக இப்பிரிவு பங்குகளை விற்பனை செய்து 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியை முதலீடாகப் பெற்றுப் பங்குச்சந்தையில் தாறுமாறான வளர்ச்சியைக் கண்டது.
இந்நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தற்போது மோசமான காலாண்டு முடிவுகள் மற்றும் பியூச்சர் ரீடைல் ஒப்பந்தத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் இந்நிறுவன பங்குகளை மிகவும் மோசமான சரிவை எதிர்கொண்டுள்ளது. திங்கட்கிழமை பங்குச்சந்தை வர்த்தகத்தின் ஒரு நாள் சரிவில் ஏற்பட்ட பாதிப்பு முகேஷ் அம்பானி சொத்து மதிப்பில் சுமார் 5 பில்லியன் டாலர் அளவிலான சரிவை ஏற்படுத்தியுள்ளது.
இதுமட்டும் அல்லாமல் இந்நிறுவன முதலீட்டாளர்கள் இன்று ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை இழந்துள்ளனர் ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரர் ஆக விளங்கும் முகேஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்த லாக்டவுன் காலத்தில் மட்டும் அதிகளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்து பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கும், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் புதிய நம்பிக்கையைக் கொடுத்தது.
இலங்கையில் கரையொதுங்கிய சுமார் 100 திமிங்கிலங்கள்.. பாணந்துறை கடற்கரையில்..
மத்தியபிரதேசத்தில் 28 தொகுதிகள் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு .- ஆட்சியை கைப்பற்றப்போவது யார்?
பா.ஜ அரசுக்குக் கப்பம் கட்டிவிட்டு தமிழ்நாட்டை கொள்ளையடிக்கும் அதிமுகவினர்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
dhinakaran :சென்னை: வெள்ளையர் ஆட்சிக் காலத்தில், பிரிட்டிஷாருக்குக் கப்பம் கட்டிவிட்டு சில குறுநில மன்னர்கள் மக்களை கொள்ளையடித்ததைப் போல, மத்திய பா.ஜ அரசுக்குக் கப்பம் கட்டிவிட்டு அ.தி.மு.க.வினர் தமிழ்நாட்டைக் கொள்ளையடித்துக் கொண்டிருப்பதாக புதுக்கோட்டையில் நடைபெற்ற ‘தமிழகம் மீட்போம்’ பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், புதுக்கோட்டை மாவட்டங்கள் சார்பில் நடைபெற்ற ‘’தமிழகம் மீட்போம்’’ - 2021 சட்டமன்றத் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் காணொலி வாயிலாகத் தலைமையேற்று, கலைஞர் சிலையைத் திறந்து வைத்தார். பின்னர் அவர், திமுக முன்னோடிகளுக்குப் பொற்கிழி வழங்கியும், மிசா தியாகிகள் சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் சிறை சென்ற தியாகிகளுக்கு ‘கலைஞர் தியாகச் செம்மல்’ விருதுகளையும் வழங்கி பேசியதாவது:
சீனாவுக்கு எதிராக அமெரிக்க - இந்திய ராணுவக் கூட்டணி! விளைவுகள் என்ன?
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை? 20 முதல் 30 தொகுதிகளுக்குள் அதிகபட்சம்..
தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தினேஷ் குண்டு ராவ் கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி சென்னை வந்தார். காங்கிரஸ் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட குண்டு ராவ் பின் செய்தியாளர்களிடம் பேசும்போது, ’தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெறும். மொத்த இடங்களையும் திமுக காங்கிரஸ் கூட்டணியே கைப்பற்றும். தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும்” என்று தெளிவான ஆங்கிலத்தில் கூறினார். அவர் coalition government என்று கூறாமல் allaince government என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். தமிழக காங்கிரஸ் புதிய பொறுப்பாளரான குண்டுராவின்
திங்கள், 2 நவம்பர், 2020
அமெரிக்கா தேர்தலுக்கு முந்தைய புதிய கருத்துக் கணிப்புகள் .. ஜோ பிடன் முன்னிலையில்
இளம் இசையமைப்பாளர் நவீன் சங்கர் திடீர் மரணம்
maalaimalar :இளம் இசையமைப்பாளரான நவீன் சங்கர் உடல்நலக்குறைவால் திடீரென மரணமடைந்தது தமிழ் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. .... தமிழ் திரையுலகினர் அதிர்ச்சி நவீன் சங்கர் வெற்றி மகாலிங்கம் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான விசிறி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் நவீன் சங்கர்.
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இசையமைப்பாளராக திகழும் நவீன் சங்கருக்கு, கடந்த வாரம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.