ஞாயிறு, 1 நவம்பர், 2020
இலங்கையில் Elephant Human Conflict யானைகள் தாக்கி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு – துப்பாக்கிச் சூட்டினால் 300க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழப்பு
thesamnet.co.uk : இந்த வருடத்தின் முதல் பத்து மாதங்களில் காட்டு யானைகள் தாக்கி 52 பேர் உயிரிழந்ததாக வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதே நேரம் பல்வேறு காரணிகளினால் 372 யானைகள் இதுவரையில் உயிரிழந்ததாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் மாதம் ஒன்றுக்கு 700 காட்டு யானைகள் பிறப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் 150க்கும் அதிகமான காட்டு யானைகள் குறிப்பிட்ட வயதுக்கு முன்னரே பல்வேறு சுகாதார காரணிகளால் உயிர் இழப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் 300க்கும் அதிகமான யானைகள் மனிதரின் துப்பாக்கிச் சூட்டிலும் வலைகளிலும் சிக்கி உயிர் இழக்கின்றன.
இந்தநிலையில், நாட்டில் இறுதியாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி 6 லட்சத்து 100 காட்டு யானைகள் இருப்பதாக வனஜீவராசிகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக