மின்னம்பலம் :
தேனியில்
மறுவாக்குப்பதிவுக்கு எடுத்துவரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்
தொடர்பாக காங்கிரஸ் சார்பில் தேர்தல் அதிகாரியிடம் புகார்
அளிக்கப்பட்டுள்ளது.
தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்தும், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், அமமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வனும் களத்தில் உள்ளனர். தொகுதிக்குட்பட்ட ஆண்டிப்பட்டி பாலசமுத்திரம் அரசுப் பள்ளி வாக்குச்சாவடி, பெரியகுளம் அருகிலுள்ள வடுகபட்டி ஆகிய இரண்டு இடங்களுக்கும் வரும் 19ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
ஏற்கெனவே கோவையிலிருந்து தேனிக்கு 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், நேற்று முன்தினம் திருவள்ளூரிலிருந்து 20 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 30 விவிபாட் இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. ஆனால், இதற்கு திமுக, அமமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் செய்தித் தொடர்பு பிரிவு தலைவர் கோபண்ணா நேற்று (மே 16) அளித்துள்ள மனுவில், “தேனி மாவட்டத்தில் மே 19ஆம் தேதி நடைபெறவுள்ள மறுவாக்குப்பதிவு இயந்திரங்கள் அதிமுக வேட்பாளருக்குச் சாதகமாகத் திருத்தப்பட்டிருக்கலாம் எனக் கருதுகிறோம். எனவே, தேர்தலின்போது ஒப்புகை சீட்டு இயந்திரத்தில் பதிவாகும் துண்டு சீட்டுகளை எண்ண வேண்டும். தேனி மாவட்டத்தில் ஆளும்கட்சி வேட்பாளருக்கு ஆதரவாகத் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் செயல்படுகின்றனர். அதிமுக வேட்பாளரின் சட்ட விரோத நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தி நியாயமான முறையில் தேனியில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கோபண்ணா, “சமீபத்தில் கோவையிலிருந்து 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டதாகப் புகார் தெரிவித்தோம். ஆனால், அவை திருப்பி அனுப்பப்பட்டதாகத் தேர்தல் அதிகாரி தெரிவித்தார். ஆனால், நேற்று மீண்டும் திருவள்ளூரிலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனிக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்கள் அதிமுக வேட்பாளருக்குச் சாதகமாகப் பயன்படுத்தப்படுவதற்காகக் கொண்டுவரப்பட்டதா என்பது குறித்து சந்தேகம் எழுப்பி புகார் அளித்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
மேலும், “இரண்டு இடங்களில் பயன்படுத்துவதற்கு 50 இயந்திரங்கள் எதற்கு என்று கேள்வி எழுப்பினோம். பழுதடைந்தால் மாற்றிக்கொள்வதற்காக என்று தெரிவித்தனர். ஆனால் எங்களுக்கு இன்னும் அதுகுறித்து பலத்த சந்தேகம் இருக்கிறது. தேனி மக்களவைத் தொகுதியில் ஏதோ தவறு நடக்க வாய்ப்பிருப்பதாகவே கருதுகிறோம்” என்று சந்தேகம் எழுப்பினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக