மின்னம்பலம் :ஓட்டப்பிடாரம்
தொகுதியில் அதிமுகவினர் வித்தியாசமான பணப் பட்டுவாடா திட்டத்தை
செயல்படுத்தி வருகிறார்கள். அதாவது பணம் கொடுத்துவிட்டு, அந்தந்த வீட்டு
சுவர்களில் அடையாள குறியிட்டுவருகிறார்கள்.
ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மோகன், அமமுக வேட்பாளர் சுந்தரராஜன், திமுக வேட்பாளர் சண்முகையா களத்தில் உள்ளார்கள்.
அதிமுகவினரின் பணப் பட்டுவாடா வியூகம் என்னவெனில், பணம் கொடுக்கப்பட்ட வீட்டில் அதிமுகவுக்கு ஓட்டு உறுதி என்றால் அந்த வீட்டில் சிவப்பு நிற மார்க்கர் மூலமாக, வீட்டு வாசலில் இன்ஷியல் போட்டுவிட்டு கீழ்ப் பகுதியில் வாக்காளர் எண் எழுதிவிட்டு போய்விடுகிறார்கள். இது வீட்டு உரிமையாளர்களுக்குத் தெரியாமலேயே நடக்கிறது என்பதுதான் ஜனநாயகக் கொடுமை.
ஓட்டப்பிடாரம் சிவன்கோவில் வீதியில் வசிக்கும் வெள்ளைப்பாண்டியின் வீட்டில் ப.க.37/ 197,38 என எழுதியிருந்ததைப் பார்த்தோம். இதுபற்றி அவரிடமே கேட்டோம்.
“இலை கட்சிகாராங்க கையில பணம் கொடுத்துட்டு ஓட்டு யாருக்கு போடுவிங்க என்று கேட்டாங்க. அந்தக் காலத்திலேர்ந்தே இலைக்குத்தான் போடுவேன்னு சும்மா சொன்னேன். அந்த நேரத்தில்தான் இப்படி எழுதியிருக்காங்க” என்றார்.
ஓட்டப்பிடாரம் குறுக்குச் சாலையில் வசிக்கும் ஶ்ரீராம் வீட்டில் ப.க,37/ வ.எ.;664,457 என எழுதியிருந்தார்கள். அதைப்பற்றி ஶ்ரீராமிடம் கேட்டோம். “யார் எப்போ எழுதினாங்கனு தெரியல. நீங்க சொல்லித்தான் பாக்குறேன்” என்று உள்ளே சென்றுவிட்டார்.
அங்குள்ள அதிமுக பிரமுகர்களிடம் வீட்டுச் சுவர்களில் உள்ள குறியீடுகளைப் பற்றிக் கேட்டோம்.
“நாங்கள் பணம் கொடுத்து மார்க்கரால் குறியீடு செய்ததெல்லாம் அதிமுக ஓட்டு. அவர்களுக்கு முழுமையாகப் பணம் கொடுத்துவிட்டோம் என்று அர்த்தம். மேற்பார்வையாளர்கள் வீதி வீதியாக வீடு வீடாக வந்து குறியீடுகளையும் வாக்குகளையும் கணக்கெடுத்துப்போய் தொகுதிப் பொறுப்பாளரிடம் ஒப்படைப்பார்கள்” என்றவர்களிடம்,
“திமுகவினரின் வீட்டுச் சுவர்களிலும் உங்கள் மார்க்கர் உள்ளதே… கணக்கு சரியா வருமா?” என்று கேட்டோம்.
“எல்லாம் பொறுப்பாளர்களும் வெளியூர்காரங்கதான். அவர்களுக்கு என்ன தெரியபோகுது? அவர்களை திருப்திப்படுத்தத்தான் இப்படி ஒரு மார்க்கர் வேலை” என்று பதில் சொல்லி அசர வைத்தார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக