மாலைமலர்: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதுபோல் பாஜகவால் நானும் கொல்லப்படுவேன் என அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.
புதுடெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் செய்த டெல்லி முதல் மந்திரியும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் அங்கு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.
டெல்லியில் நடைபெற்ற பேரணியின்போது தன்னை ஒருவர் கன்னத்தில் அறைந்ததை குறிப்பிட்டு பேசிய அவர், எனது உயிரை குறிவைத்து பாஜகவினர் தூண்டி விடப்பட்டுள்ளனர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை அவரது பாதுகாவலர்களே சுட்டுக் கொன்றதுபோல் என்றாவது ஒருநாள் நான் சுட்டுக் கொல்லபடுவேன். என்மீது கொண்ட கருத்து வேற்றுமையால் என் கட்சியை சேர்ந்த பாதுகாப்பு வீரரே என்னை சுட்டுக் கொன்று விட்டதாக போலீசார் அந்த சம்பவத்தை திசை திருப்பி விடுவார்கள். இல்லையென்றால், பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங்கை ஒரு காங்கிரஸ்காரரோ, மோடியை ஒரு பாஜக தொண்டரோ தாக்கினால் போலீசார் கைகட்டி வேடிக்கை பார்ப்பார்களா? என கெஜ்ரிவால் தனது பேட்டியின்போது கேள்வி எழுப்பினார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக