புதன், 15 மே, 2019

1970 களிலேயே கம்யூட்டர் குறித்தும் செமிகண்டக்டர் குறித்தும் கலைஞர் பாட திட்டம் தீட்டி இருக்கிறார்!

Sivasankaran Saravanan:   : இந்த வீணாப் போன கலைஞர் தான் எல்லாத்துக்கும்
காரணம்...
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் திரு. உதயசந்திரன் ஐஏஎஸ் தற்போது பள்ளிக் கல்வித்துறையில் எடுத்துவரக்கூடிய முயற்சிகள் பாராட்டை பெறுகின்றன. அது வரவேற்க வேண்டிய விஷயமே.
ஆனால் ஊடகங்களாலும் கருத்துருவாக்கம் செய்பவர்களாலும் அரசியல்வாதிகளுக்கு கல்வி பற்றிய எந்த அறிவும் இருக்காது என்பது போன்ற தோற்றத்தையே நமக்கு காட்டியிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த திராவிட கட்சி முதல்வர்கள் கல்லூரி படிப்பு கூட படிக்காதவர்கள் அவர்களுக்கு எங்கே கல்வித்துறையின் மீது அக்கறையோ அறிவோ இருக்கப்போகிறது என்பதையே தொடர்ந்து பரப்பி வரப்பட்டது .
1969 ம் ஆண்டு தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்கும் டாக்டர் கலைஞர் கல்வித்துறையின் மீதுள்ள அக்கறையால் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராகவும் பொறுப்பேற்கிறார். ஒரு மாநில முதல்வரே பாடநூல் கழகத்திற்கு தலைவராவது எல்லாம் இந்தியாவில் நினைத்துக்கூட பார்க்கமுடியாத விஷயம். 1970 களில் கலைஞர் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட பாடப்புத்தகங்களை பார்க்கும்போது தமிழ்நாடு வளர்ந்த மேற்கத்திய நாடுகளில் ஒன்றோ என்று தான் தோன்றுகிறது .
அப்போதே கணினியின் பயன்பாடு பற்றி ஒரு புத்தகத்தை முதல்வர் வெளியிட்டுள்ளார். ஆனால் நமது பத்திரிகைகளோ யாரோ ஒரு பிராமண எழுத்தாளர் தான் நமக்கு கம்ப்யூட்டரை அறிமுகம் செய்து வைத்தார் என்றெல்லாம் சொல்லிவந்துள்ளன.

ஓடிஷா மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணிபுரியும் திரு. பாலகிருஷ்ணன் என்பவரது கருத்தையும் இத்துடன் இணைத்துள்ளேன். கலைஞர் அளவுக்கு இந்தியாவில் வேறெந்த முதல்வரும் இந்தளவுக்கு உத்வேகத்துடன் செயற்படவில்லை என்பதே தரவுகள் தருகிற உண்மையாக உள்ளது..!
- எழுதியவர் திரு. Sivasankaran Saravananva
________
1970 களிலேயே கம்யூட்டர் குறித்தும் செமிகண்டக்டர் குறித்தும் கலைஞர் பாட திட்டம் தீட்டி இருக்கிறார்! என்ன தொலைநோக்கு அந்த மனிதருக்கு!! 1980 இல் நான் ஒன்றாம் வகுப்பு சேர்ந்தேன். அப்[போது எம்.ஜி.ஆர் ஆட்சி. நான் எட்டாம் வகுப்பு முடிக்கும் வரை என் பாட புத்தகத்தில் எந்த இடத்திலும் கம்யூட்டர் என்ற வார்த்தையைப் படித்தது இல்லை. 1989 இல் மீண்டும் கலைஞர் வந்த பிறகே கணிணி குறித்த பாடதிட்டம் பதினோராம் வகுப்புக்கு ஒரு தனி குரூப்பாக அறிமுகம் செய்யப்பட்டது. டைடல் பார்க்கை 1996 இல் உருவாக்கியவரும் அவரே! - புதுகை அப்துல்லா

கருத்துகள் இல்லை: