ஞாயிறு, 12 மே, 2019

மோடி (செல்லூர் 2): மேகமூட்டங்கள் இருந்ததால் ராடாரில் இந்திய விமானங்கள் சிக்கவில்லை


மோடி ரேடார் ட்வீட்vikatan.com -kasi-viswanathan-m : CPRF வீரர்கள் கொல்லப்பட்ட புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடிகொடுக்கும் விதமாக, பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ் - இ - முகமது தீவிரவாதத் தளத்தின்மீது இந்திய விமானப்படை விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதில் தீவிரவாதிகள் பலரும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தாக்குதல் குறித்து News nation என்ற ஊடகத்திற்கு அளித்த நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அதில் "தாக்குதல் நிகழ்த்தப்பட்ட நாளன்று வானிலை சற்று மோசமாக இருந்தது. வல்லுநர்கள் தாக்குதலை வேறு நாள் வைத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.
ஆனால் நான்தான் மேகங்கள் நம்மை ரேடார்களின் பார்வையிலிருந்து காக்கும் என அறிவுறுத்தினேன்" என்றார். ஆனால் ரேடார் தொழில்நுட்பத்தால்
மேகங்களைக் கடந்து பார்க்கமுடியாதா என்ன?
நிச்சயம் பார்க்கமுடியும். சாதாரண ஒளி அலைகளை விட மிகவும் குறைந்த அலைநீளம் (wavelength)  கொண்ட ரேடியோ அலைகள் கொண்ட ரேடார்கள் இயக்கப்படுவதால் மேகங்கள் மேலே செல்லும் விமானங்களைக் கண்டறிய எந்த ஒரு தடங்கலும் இருக்காது.

வானிலை ரேடார்கள்தான் கிட்டத்தட்டச் சாதாரண ஒளியின் அலைநீளம் இருக்கும் அலைகளைக் கொண்டு மேகங்களைக் கண்டறிவதற்கென்றே வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் ராணுவங்களில், வானில் செல்லும் உலோகங்களைக் கண்டறியும் வண்ணமே ரேடாரில் அலைகள் அனுப்பப்படும். சில சிறப்பு உளவு விமானங்கள் மட்டுமே இதிலிருந்து தப்பமுடியும். மேகங்கள் விமானங்களை காப்பாற்ற வாய்ப்பில்லை. இப்படியான தனது 'மாஸ்டர் பிளானை' வெளி

கருத்துகள் இல்லை: