வெள்ளி, 17 மே, 2019

பிரிங்கா காந்தி உத்தர பிரதேச தேர்தல் பிரசார கூட்டத்தில் ...


தினகரன் :உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி  நேற்று முன்தினம் மாலை   வாகன பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது மக்கள் கூட்டத்தில் நின்றுக் கொண்டிருந்த ஒருவர் மயங்கி விழுந்தார். இதை பார்த்த பிரியங்கா உடனடியாக வாகனத்திலிருந்து இறங்கி வந்து தண்ணீர்  கொடுத்து முதலுதவி செய்தார்.
மயக்கம் தெளிந்த அந்த நபரிடம் விசாரித்தலில் அவர் நெஞ்சு வலியால் மயங்கி விழுந்தது தெரியவந்தது. உடனடியாக கார் ஒன்றை வரவழைத்த பிரியங்கா, அந்த நபரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.  இதேபோல சில தினங்களுக்கு முன்  கட்டியால் பாதிக்கப்பட்ட  சிறுமியை தனி விமானம் ஏற்பாடு செய்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைகான செலவுகளை தானே ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: