Karthikeyan Fastura :
ஒரு டாக்டர் நண்பரையும் Entrepreneur ஆக்கிவிட்டாச்சு. Dr.Vijay Anand
என்னோட Startup பதிவுகளை தொடர்ந்து படித்துவந்தவர். அந்த பதிவுகள்
தான் இப்போது Startup விக்கிரமாதித்தன்ஸ் என்ற புத்தகமாக வந்திருக்கிறது. FB messengerல் தொடர்ந்து பேசுவார். நிறைய ஐடியாக்களை விவாதிப்பார். பல அவரது மருத்துவ துறைக்கு சம்பந்தமில்லாததாக இருக்கும். ஆனால் மனிதருக்கு ஏதாவது ஒன்றை செய்தே ஆக வேண்டும் என்ற ஊக்கம் மட்டும் இருந்தது.
திடிரென்று ஒருநாள் "ப்ரோ, ஒரு புது ஐடியா. நான் எங்க மருத்துவ துறையில் PG முடித்து அதற்கு மேல் படிக்கணும் என்றாலும் அதற்கென்று தனி NEET Exam இருக்கிறது. அதற்கு ஒரு Online Mock Exam Portal பண்ணலாமா.. நீங்க செய்வீங்களா.. " என்றார்.
தாரளாமாக செய்யலாம். அது எப்படி இருக்கணும்னு சொல்லுங்க என்றேன்
அது ஒருவர் Online Test பண்ணிட்டு அவர்கள் எவ்வளவு Score எடுத்தாங்க. அவங்க கூட எழுதியவர்களில் எத்தனையாவது Rank, என்ன பண்ணினார்கள் என்று Test எழுதி முடித்ததும் தெரிந்தால் அவர்கள் Prepare பண்றதுக்கு வசதியாக இருக்கும். எங்கள் துறையில் இதற்கு போதிய கோச்சிங் சென்டர்ஸ் கிடையாது என்றார்.
எல்லாமே செய்யலாம். கொஞ்சம் டைம் வேண்டும் என்றேன்.
ரெண்டு வாரம் போதுமா.. என்றார். நான் சிரித்துவிட்டேன். இவ்வளவு குறைவான நேரத்தில் இருந்தாலும் எங்க பசங்களிடம் கேட்டேன். முடியும் சார் என்றார்கள். எனக்கும் உள்ளுக்குள் முடியும் என்று தோன்றவே வேலையை ஆரம்பித்தோம். ஏற்கனவே இருந்த சில கட்டமைப்புகளை ஆராய்ந்தோம். அதில் ஒன்னு கை கொடுக்கும் என்று தோன்ற எடுத்துபோட்டு பிரிச்சு மேய்ந்தோம். முட்ட முட்ட உடையாதது எதுவுமில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அது எங்கள் கைவசமானது. தளம் ரெடியானது. ஸ்டார்ட்அப் உலகில் பிள்ளைய கூட எளிதில் பெத்துவிடலாம் பேர் வைக்க தான் ரெம்ப போராடனும். வச்ச பெயரையே வைக்க முடியாது. Domain கிடைக்காது. ஒரு வழியா அம்சமான Domain Name சிக்க பதிந்துவிட்டோம்.
நான் நிறைய பேரிடம் பேசிருக்கேன் ஒரு பதினைந்து வந்தால் போதும் ஜெயிச்சுடலாம் என்றார் விஜய்.
www.aspirantdesk.com என்ற பெயரில் தளம் வெளியிட்டோம். டாக்டர்கள் பதிந்தார்கள். ஒரு ஞாயிற்றுக்கிழமை விஜய் போன் பண்ணினார். நான் நினைத்த அளவுக்கு Registration நடக்கவில்லை ப்ரோ வெறும் 20 பேர் தான் வந்திருப்பாங்க. அதில் ஐந்து பேர் தான் Pay பண்ணிருக்காங்க என்றார்.
வாவ். இவ்ளோ பேர் பண்ணிருக்காங்க. எவ்ளோ பெரிய விஷயம். எடுத்தவுடன் Payment வருவதெல்லாம் வேற லெவல். நீங்க ஜெயிச்சிட்டீங்க. இன்னும் கொஞ்சம் மார்கெட்டிங் பண்ணுங்க. எனக்கு தெரிந்து இந்த Segmentல் உங்களோட Site தான் Course சேர சொல்லாமல் Exam எழுத சொல்லுது. மற்ற தளங்கள் எல்லாம் Course சேர சொல்றாங்க. அதற்கு நிறைய கட்டணம் கேட்கிறார்கள். கொஞ்சம் முயற்சித்தால் பலன் கிடைக்கும்ங்க என்றேன்.
ரெண்டு நாள் அவர் வட்டத்தில் Whatsapp வழியாகவே மார்கெட்டிங் செய்தார். அதில் நிறைய பேர் ஆர்வம் காட்டினார்கள். அவர் எதிர்பார்த்ததை விட பல மடங்கு Registration நடக்கிறது. காரணம் அவரின் கடின உழைப்பு. இதற்கு முன்பு நடந்த பல தேர்வுத் தாள்களை வைத்து ஒரு தரமான மாதிரி தேர்வுத் தாளை வடிவமைத்தார். அது நன்றாக பலன் கொடுக்கிறது. இப்போது மருத்துவத்தின் வெவ்வேறு பிரிவுகளில் உள்ள எல்லாத் தேர்வுகளையும் கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு வருகிறார்.
எனக்கு என்ன பெருமிதம் என்றால் ஒருவரை தொழில்முனைவோராக மாற்றிவிட்டோம் ,அதுவும் மிக குறைந்த செலவில் என்பதே. அதற்கு தொழில்நுட்ப ரீதியிலும் நாங்களே பங்களிப்பை கொடுத்திருக்கிறோம். அதற்கு தேவையான கட்டணத்தை பெற்றுக்கொண்டோம்.
கொடுத்து வைத்தல் என்பது இது தான் போல. நாம் அறிந்ததை ஊருக்கு திறந்த மனத்துடன் கொடுத்தால் ஊர் பல மடங்கு திரும்பி தருகிறது. இன்னும் இந்த புத்தகம் நிறைய தொழில் முனைவோர்களை உருவாக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக