ஞாயிறு, 4 அக்டோபர், 2026

இந்திய பைலட் ஸ்மித் நெற்றியில் முத்தமிட்டு UAE இளவரசர் சொன்ன வார்த்தை.. ரொம்ப பெருமையா இருக்கு

 தினத்தந்தி : துபாய்: துபாய் - டெல்அவிவ் விமானத்தில் கத்துக்குத்து காயமடைந்தாலும் விமானம் கடத்தலை தடுத்து ஹீரோவான இந்திய பைலட் ஸ்மித் மச்சாரை ஐக்கிய அரபு அமீரகத்தின் பட்டத்து இளவரசர்சந்தித்து நலம் விசாரித்து நெற்றியில் முத்தமிட்டார் வாழ்த்து தெரிவித்தார். 
துபாய் - டெல்அவிவ் விமானத்தை கடத்தி அதில் பயணித்த 180 பேரையும் கொல்ல ஓமன் துணை விமானி ஹமிம் அல்ஹமாமி முயன்றார். இதற்காக இந்திய கேப்டனான பைலட் ஸ்மித் மச்சாரை அவர் கத்தி மற்றும் 'காக்பிட்' கோடரியால் வெட்டினார். 
இந்த சம்பவம் கடந்த30ம் தேதி நடந்தது. ரத்த வெள்ளத்தில் இந்திய பைலட் ஸ்மித் மச்சார் காக்பிட் கதவை திறந்ததால் பயணிகள் சேர்ந்து ஓமன் துணை விமானியை சிறைபிடித்தனர். 

Flydubai விமான விபத்து - உண்மையில் ஒரு பெரிய Miracle அதிசயம்தான்

Sridhar Subramaniam  : flydubai சம்பவம் பற்றிப் பல்வேறு கருத்தியல்கள் சமூக ஊடகங்களில் உலவுகின்றன. தாக்குதலைத் துவக்கிய ஓமானைச் சேர்ந்த பைலட்டின் பெயர் வெளியாகியதில் இருந்து இந்துத்துவர்கள் உற்சாகத்துடன் அதனைப் பகிர்ந்து எழுதி வருகிறார்கள். 
ஸ்கோர் செய்ய ஒரு சிறந்த வாய்ப்புக் கிடைத்ததை பிரதமர் மோடியும் சரியாகப் பயன்படுத்தி வருகிறார். ஆனால் இந்துத்துவ எதிர்ப்புத் தரப்பில் இரண்டு எதிர்வினைகள் வருகின்றன. ஒன்று: கனத்த அமைதி. இரண்டாவது கான்ஸ்பிரசி தியரிகள்.
இரண்டுமே எதிர்பார்த்ததுதான். செப்டம்பர் 11க்கே தியரிகள் இன்னமும் ஓடுகின்றன எனும் போது இதில் வருவதில் ஆச்சரியமில்லை. 
ஆனால் நடந்த விஷயங்களை வைத்துப் பார்க்கும் போது, இது நிஜத்தில் மதவாதம் சார்ந்த தீவிரவாத சம்பவமாகவே இருந்திருக்க வாய்ப்புள்ளது என்பது புரியவருகிறது. 
உண்மையில் என்ன நடந்தது என்பதை ஹிண்டு இன்று ஒரு கட்டுரையில் விளக்கி இருக்கிறது.