Amudhan R P : இந்த நடிகர் சகாப்தத்தில் உடைக்கப்பட்ட பர்னிச்சர்களில் சிறப்பான / பெசல் ஒன்று தலித் பர்னிச்சர் தான்.
சென்ற திமுக ஆட்சியில் திருமா முதல் பா ரஞ்சித் வரை பல தலித் ஆளுமைகள் மதிப்புடன் வலம் வந்தார்கள்.
அவர்கள் என்ன செய்தாலும் தமிழ் சமூகத்தால் பாராட்டப்பட்டார்கள்.
திமுக / திராவிட அரசியல் உருவாக்கி வைத்திருந்த சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு, மதச்சார்பின்மை ஈகோ சிஸ்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக தலித்துகள் பார்க்கப்பட்டனர்.
திமுகவை ஆதரிப்போரில் பெரும்பாலோனோர் தலித் தலைவர்களை, கலைஞர்களை தமது தோழமையாகப் பார்த்துக் கொண்டாடித் தீர்த்தார்கள்.
இவர்களை எதிர்ப்போரில் ஏறக்குறைய பலர் திமுக அல்லது திராவிட அரசியலை வெறுப்போராகத் தான் இருந்தனர்.
வெள்ளி, 13 நவம்பர், 2026
நடிகரின் தவேகாவல் உடைக்கப்பட்ட தலித் பர்னிச்சர்!
வியாழன், 12 நவம்பர், 2026
தாத்தா சொத்தில் பேரனுக்கு பங்கு இல்லையா? உச்சநீதிமன்ற தீர்ப்பு என்ன?
மின்னம்பலம் - Mathi : தாத்தாவின் சொத்தில் பேரனுக்குப் பிறப்புரிமை கிடையாது என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு கவனத்தைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெ.ராஜேஷ் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் அகஸ்டின் ஜார்ஜ் மசீஹ், சுனிதா அகர்வால் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு நவ.6-ந் தேதி இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
என்ன வழக்கு?
என்.ராமகிருஷ்ணனுக்குச் சொந்தமான 1,811 சதுர அடி நிலம் தொடர்பாக அவரது மகள் ஜி.லலிதா 1993-ஆம் ஆண்டு சொத்துப் பிரிவினை வழக்குத் தொடர்ந்தார். வாரிசுகளிடையே ஏற்பட்ட சமரசத்தின் அடிப்படையில் 1994 பிப்ரவரி 3-ந் தேதி நீதிமன்றம் பிரிவினைத் தீர்ப்பு வழங்கியது.
அமெரிக்க இந்திய மனைவியை துண்டு துண்டாக வெட்டி கொன்ற கணவன்
மாலைமுரசு : அமெரிக்காவில் மனைவியைக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நரேஷ் பட், தனது மனைவியின் உடலை அறுத்துத் துண்டுகளாக்கியதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். அதேநேரத்தில், மனைவியைக் கொலை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார். தனது மனைவி தற்கொலை செய்துகொண்டதாகவும், அவர் உயிரிழந்த பின்னரே உடலை மறைக்க முயன்றதாகவும் நரேஷ் பட் வாக்குமூலம் அளித்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மனைவியின் உடல் கண்டுபிடிக்கப்படாத நிலையில், விசாரணையின் போது அவர் அளித்துள்ள இந்த வாக்குமூலம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சௌதியில் மரண தண்டனையை எதிர்கொண்ட இலங்கை தமிழர் சிவராசா அனோஜன் முழுமையாக விடுதலை
![]() |
bbc ரஞ்சன் அருண் பிரசாத் : பேஸ்புக் பதிவொன்றின் ஊடாக முகமது நபி குறித்து அவதூறாக பேசிய குற்றச்சாட்டின் கீழ் சௌதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கை தமிழரான சிவராசா அனோஜன், அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விரைவில் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை கடந்த அக்டோபர் மாதம் 14ம் தேதி அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருந்த நிலையில், ஏனைய தண்டனைகளிலிருந்து அவர் கடந்த 9ம் தேதி விடுவிக்கப்பட்டிருந்தார்.
புதன், 11 நவம்பர், 2026
அகல்விளக்கு முகவரியில் இருபது பதிப்பகங்கள்... சீரழிவின் உச்சத்தில் உள்ளதா தமிழ்ச்சமூகம்?
![]() |
Kiritharan Karthigesu Yoganathan : அகல்விளக்கு முகவரியில் இருபது பதிப்பகங்கள்... சீரழிவின் உச்சத்தில்
உள்ளதா தமிழ்ச்சமூகம்?
கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்திருக்கும் இந்த கேவலமான உலகில் எவனுமே செய்யாத ஒரு அசிங்கமான மோசடித் தனத்தை அறிந்ததில் இருந்து பெரும் மன உளைச்சலாக இருக்கிறது..
ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனையே கடித்தக் கதையாக அரசின் அனைத்து அமைச்சுத் துறைகளிலும் கொள்ளையடித்த ஓங்கோல் திருடர்கள் கடைசியில் அறிவு வளர்க்கும் அறம் விதைக்கும் நூலகத் துறையிலேயே வாயை வைத்து இருக்கிறார்கள்..
செவ்வாய், 10 நவம்பர், 2026
’ஹேக்கர்களின் கைவரிசை’; தமிழக அரசின் கோடிக்கணக்கான நிதி திடீர் மாயம்!
நக்கீரன் :;தமிழக அரசின் வங்கிக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு கோடிக்கண்கான ரூபாய் நிதி கையாடல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக ஊரக வளர்ச்சித் துறையின், அரசு நிதி பரிவர்த்தனைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த வங்கிக் கணக்குகளை ஹேக் செய்த சில மர்ம நபர்கள், மூன்று ஊராட்சி ஒன்றியங்களின் சில குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளிலிருந்து சுமார் ரூ.22.10 கோடி திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்தான முதற்கட்ட விசாரணையில், இந்த சம்பவம் வெளிநாடுகளிலிருந்து சில நபர்களால் நடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, நைஜீரியாவிலிருந்து இந்த மோசடி சம்பவம் நடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அரசு நிதி பரிவர்த்தனைகளுக்கான வங்கிக் கணக்குகளில் மர்ம நபர்கள் ஊடுருவி இவ்வளவு பெரிய தொகையைக் கையாடல் செய்திருப்பது அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டிலிருந்து வந்த பெண்ணிடம் கொள்ளை - பாலியல் கொடுமை
![]() |
Kanakanayakam Vijaypiragaash ; வெளிநாட்டிலிருந்து வந்த பெண்ணுக்கு இப்படியொரு கொடூரமா? போதைப்பானம் கொடுத்து கும்பல் வெறிச்செயல் – முல்லைத்தீவில் அதிர்ச்சி!
சவூதி அரேபியாவில் உழைத்துவிட்டு பெருங்கனவுகளோடு தாயகம் திரும்பிய தமிழ்ப் பெண்ணொருவர், திட்டமிட்ட சதித்திட்டம் மூலம் போதைப்பொருள் கலந்த பானத்தைக் குடிக்கச் செய்யப்பட்டு, குழுவாகப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட தோடன்றி, லட்சக்கணக்கான ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணமும் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து வெளிவந்துள்ள பகீர் தகவல்கள் இதோ...
தோழிக்காக ஏறிய வாகனம்... காத்திருந்த பேராபத்து!
அக்கரைப்பற்றைச் சேர்ந்த 33 வயதுடைய குறித்த பெண், சவூதி அரேபியாவில் 2 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிவிட்டு கடந்த நவம்பர் 4-ஆம் திகதி இலங்கை திரும்பியுள்ளார். அப்போது, சவூதியில் தன்னுடன் பணிபுரிந்த கவிதா எனும் தோழி கொடுத்தனுப்பிய பொதியை, புதுக்குடியிருப்பிலுள்ள அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.
திங்கள், 9 நவம்பர், 2026
பெரியார் அறிவுலகத்திற்கான நூல் கொள்முதல் முறைகேடு - உடனடி நடவடிக்கை கோரி கூட்டறிக்கை – 2026 நவம்பர் 9
Vasu sumathi : கோவை பெரியார் அறிவுலகத்திற்கான நூல் கொள்முதலில் முறைகேடு
- உடனடி நடவடிக்கை கோரி கூட்டறிக்கை – 2026 நவம்பர் 9
சமீபத்தில் பயன்பாட்டுக்கு வந்துள்ள கோவை பெரியார் அறிவுலகத்தில் உண்மைத்தன்மையும், அறிவுப்பெறுமதியும் இல்லாத போலியான பல நூல்கள் இடம் பெற்றிருப்பதற்கு எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், வாசகர்களாகிய நாங்கள் எங்களது கண்டனத்தையும் எதிர்ப்பையும் இந்தக் கூட்டறிக்கையின் வாயிலாக வெளிப்படுத்துகிறோம்.
சமூகத்தில் அறிவுப்பரவலுக்கான சீரிய வழியென நூலகத்தைக் கருதி 1948ஆம் ஆண்டு பொது நூலகச் சட்டத்தை இயற்றிய, 1972ஆம் ஆண்டு பொது நூலக இயக்ககத்தை உருவாக்கிய முன்னோடி மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாடு அரசின் பொது நூலக இயக்ககத்தின் கீழ் மாநிலம் முழுவதும் மாவட்ட மைய நூலகங்கள், கினள நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள், நடமாடும் நூலகங்கள், பகுதிநேர நூலகங்கள், சிறப்புப் பகுதிநேர நூலகங்கள் என 4,755 நூலகங்கள் இயங்கிவருகின்றன.
பாராட்டப்பட வேண்டிய திமுக பலிகடாவாக்கப்பட்டிருக்கிறது!
Prabaharan Alagarsamy : பாராட்டப்பட வேண்டிய திமுக பலிகடாவாக்கப்பட்டிருக்கிறது!
20 புத்தகங்கள் பதிப்பித்துள்ள மிகச்சிறிய பதிப்பாளர் (நிகர்மொழி பதிப்பகம்) என்கிற வகையிலும், கடந்த திமுக ஆட்சியில் நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ய நடைமுறைப்படுத்தப்பட்ட ஒற்றைச் சாளர முறையில் மிகச்சிறிய அளவில் பயன்பெற்ற பதிப்பாளர் என்கிற வகையிலும் இதை எழுதுகிறேன்.
நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்வதில் பன்னெடுங்காலமாகவே இடைத்தரகர்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்து வந்துள்ளது. கடந்த காலங்களில், 20% முதல் 30% வரை கமிஷன் கொடுக்காமல் புத்தகங்களை நூலகங்களுக்குக் கொடுக்க முடியாது என்கிற நிலைதான் எல்லா ஆட்சிக் காலங்களிலும் இருந்தது. மிகப்பெரிய பதிப்பகங்கள் இதிலிருந்து தப்பியிருக்கலாம். மட்டமான மலிவான மட்டித்தாளில் (Newsprint quality paper) நூலகங்களுக்கான புத்தகங்களை அச்சிடும் மோசடியும் பல காலமாக நடந்து வந்துள்ளது.
இந்த நிலையை ஒழித்து ஒற்றைச் சாளர முறையை 2024-ஆம் ஆண்டு திமுக அரசு அறிமுகப்படுத்தியது. பதிப்பாளர்கள் தங்கள் புத்தகங்களை நேரடியாக அரசின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கண்டிப்பாக ஐஎஸ்பிஎன் (ISBN) பெற்றிருக்க வேண்டும்; அச்சிடப்படும் தாள்கள் குறிப்பிட்ட தரத்தில் இருக்க வேண்டும்; கேள்விகளை நிவர்த்தி செய்வதற்கு நேரடியாக அரசின் உதவி எண் (Help-line); இப்படி நிறைய விதிமுறைகளுடன் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.


