புதன், 5 அக்டோபர், 2016

அ.தி.மு.க.,வில் மீண்டும் 1984: ஊரை அடிச்சு உலையில் போடும் அமைச்சர்கள் எம் எல் ஏக்கள் கவுன்சிலர்கள் ...

அ.தி.மு.க.,வில் மீண்டும் 1984: அள்ளித்தட்டிய அமைச்சர்கள்!< தமிழக அரசியல் வரலாற் றில், மறக்க முடியாத ஆண்டு 1984. அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர்.,
உடல்   நலக்குறைவால், அமெரிக்காவில் புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்போது, அந்தக்கட்சி சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை. எம்.ஜி.ஆர்., என்ற மாபெரும் வசீகர சக்தியை வைத்து, தேர்தலில் வெற்றி கொள்வதற்கான வியூகத்தை வகுத்தது, அன்றிருந்த 12 சீனியர் அமைச்சர்கள்.<>அன்று 12 பேர்<>அவர்கள் தான், தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க.,வேட்பாளர்களையும் தேர்வு செய்தனர். நிச்சயமாக ஜெயிப்போம் என்ற நம்பிக்கையில், சொத்துக்களை விற்று லட்சங் களில், அந்த அமைச்சர்களைக் குளிப்பாட்டினர் பலர். விளைவு, 'சீட்' கிடைத்தது; ஜெயித்தார் கள்; அமைச்சர்க ளானார்கள்; செல்வத்திலும், செல்வாக்கிலும் அசாத்தியமான உயரங்களைத் தொட்டனர். அதில் மட்டும், அந்த 12 சீனியர் அமைச்சர்கள் அள்ளித்தட்டியதைப் பற்றி, ஆயிரம் கதைகள் இன்னும் உலவுகின்றன.


அதே அ.தி.மு.க.,வில், 32 ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் அதே வரலாறு திரும்பியுள்ளது.
இப்போது, ஜெயலலிதா முதல்வர். எம்.ஜி.ஆரைப் போலவே, அ.தி.மு.க., எனும் ஆலமரத்தின் ஆணிவேர்; அன்றைக்காவது, புரூக்ளின் மருத்துவமனையில் அவர் எதற்காக சிகிச்சை பெறுகி றார், எந்த நிலையில் உள்ளார் என்பது குறித்து தகவலும், புகைப்படங்களும் வெளியிடப்பட்டன.
வெறுப்பேற்றிய வேட்பாளர் பட்டியல்!

இப்போது உள்ளூருக்குள்ளேயே இருந்தாலும், அரைகுறை அறிக்கைகள் மட்டுமே வெளியாகின் றன. கோவில் கோவிலாய் கும்பிடும் தொண்டனுக் காக ஒரு புகைப்படத்தைக் கூட, வெளியிட 'அதிகார' வட்டம் அசைந்து கொடுப்பதாயில்லை. எப்படி யிருக்கிறார் என்பதே தெரியாமல், முதல்வர் உள்ளே இருக்க, வெளியிலே உள்ளாட்சிதேர்தல் நடக்கிறது.

கால் நுாற்றாண்டு காலத்தில், ஜெ., தலையீடு இன்றி, அ.தி.மு.க.,வில் தயாரான முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும் தேர்வு செய்த அந்த பட்டியல், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆக்ரோஷமான எதிர்ப்பையும் உருவாக்கியது.

எதிர்க்கட்சியிலிருந்து புதிதாக கட்சிக்கு வந்தவர்கள், கட்சி உறுப்பினராகவே இல்லாதவர்கள், அமைச்சர் மற்றும் மாவட்டச்செயலாளர்களுக்கு வேண்டிய வர்கள், பெயரளவுக்குக் கட்சியில் இருந்து கொண்டு, பெரும் தொகை கொடுத்தவர்கள் என பல தரப்பினருக்கும் 'சீட்' கொடுத்து விட்டு, கட்சியின் உண்மை விசுவாசிகளை புறக்கணித்துவிட்டனர் என்று குமுறி வெடித்து, கொந்தளித்தனர் கட்சி நிர்வாகிகள்.

தலைமைக்கழகத்தை முற்றுகையிட்டனர்; எம்.ஜி.ஆர்., சிலை முன் உண்ணாவிரதம் இருந்தனர்; அலைபேசி கோபுரங்களில் ஏறி, ஆவேசம் காட்டினர். அமைச்சர்கள், மாவட்டச்செயலாளர்கள், வேட்பாளர் அறிமுகக் கூட்டத்திலேயே கலந்து கொள்ள முடியாத அளவுக்கு, கடுமையான எதிர்ப்பு அலை. ஆளும்கட்சியில் ஓங்கி அடித்தது. ஆனால், ஒன்றுமே நடக்கவில்லை.  தினமலர்.com

கருத்துகள் இல்லை: