செவ்வாய், 4 அக்டோபர், 2016

இந்து முன்னணியை விரட்டுவோம் – சென்னை, திருச்சி, புதுவை ஆர்ப்பாட்டம்

இந்து முன்னணியும் பிஜேபியும் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று வெறிகொண்டு கத்திக்கொண்டு இருக்கிறார்கள், நேரம் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
kovai-hindu-munnani-riots-chennai-pp-demo-posterகோவையில் போலீசு உதவியுடன் இந்து முன்னணி காலிகள் வெறியாட்டத்திற்கு எதிராக மக்கள் அதிகாரம் – சென்னையில் ஆர்ப்பாட்டம்  கோவையில் போலீசு உதவியுடன் இந்து முன்னணி காலிகள் வெறியாட்டத்திற்கு எதிராக மக்கள் அதிகாரம் ஒருங்கிணைத்து ஜனநாயக முற்போக்கு இயக்கங்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் 01-10-2016 அன்று நடைபெற்றது.
சசிகுமார் என்ற இந்துமுன்னணியினைச் சேர்ந்த நபர் கொல்லப்பட்டதை அடுத்து தமிழகம் முழுவதும் இருந்து திரட்டப்பட்ட இந்து முன்னணி ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி காலிகள் கோவையை சூறையாடினர், போலீசோடு சேர்ந்து கொண்டு.
இந்த வெறியாட்டத்தை கண்டித்து அடுத்த நாளே வியாபாரிகளும் முற்போக்கு அமைப்பினரும் சுமார் 800 பேர் போலீசு நிலையத்தை முற்றுகையிட்டு இருக்கிறார்கள் . இந்து முன்னணியும் பிஜேபியும் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று வெறிகொண்டு கத்திக்கொண்டு இருக்கிறார்கள், நேரம் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். கடந்த 28 அன்று ஆர்ப்பாட்டம் நடத்திய பி.ஜே.பி – எச்சு ராஜா பார்ப்பன மதவெறியை கக்குகிறார். தங்களது நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு எல்லாவகையிலும் முயன்று கொண்டே இருக்கிறார்கள்.

இந்த நிலையில் கோவையில் போலீசு உதவியுடன் இந்து முன்னணி காலிகள் வெறியாட்டத்தை மக்களிடம் அம்பலப்படுத்தி, “இந்த அரசுக்கட்டமைப்பு மக்களைக்காக்க வக்கில்லை அதுமட்டுமல்ல இதுதான் எதிரி; மக்களைக்காக்க மக்கள் அதிகாரமே தீர்வு” என்பதை முன்வைத்து தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் லட்சத்திற்கும் மேற்பட்ட துண்டறிக்கைகளையும் விநியோகித்து ஆயிரக்கணக்கான சுவரொட்டிகளை ஒட்டியது; மக்களிடையில் பிரச்சாரங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. அடுத்தகட்டமாக தமிழகம் முழுவதும் அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகளை ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றது.
அதன் படி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 01-10-2016 கொளுத்தும் வெயிலிலும் நடந்த ஆர்ப்பாட்டம் காவிக்காலிகளுக்கு எச்சரிக்கை அளிக்கும் விதமாகவும் தோற்றுப்போன அரசுக்கட்டமைப்பை தூக்கியெறியவேண்டும் என்பதை அறிவிக்கும் விதமாகவும் இருந்தது.
kovai-hindu-munnani-riots-chennai-pp-demo-com-vetrivel-chezhiyan
தோழர் வெற்றிவேல் செழியன்
இந்த கண்டன ஆர்ப்பட்டத்திற்கு மக்கள் அதிகாரம் சென்னைமண்டல ஒருங்கிணைப்பாளர் சென்னை தோழர் வெற்றிவேல் செழியன், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் சென்னைக்கிளை செயலர் வழக்கறிஞர் மில்டன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்டச் செயலர் தோழர் குமரன், திராவிடர் கழகத்தின் மாநில மாணவரணி  செயலர்தோழர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச் செயலர் தோழர் ஆளூர் ஷானவாஸ், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில இணைச்செயலர் தோழர் மா.சி.சுதேஷ் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் கனகராஜ், திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலர் தோழர் விடுதலை ராஜேந்திரன், மக்கள் அதிகாரத்தின் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் காளியப்பன் ஆகியோர் உரையாற்றினர்.
kovai-hindu-munnani-riots-chennai-pp-demo-com-sudhesh-kumar
தோழர் மா.சி.சுதேஷ்குமார்
சாலையை கடந்து சென்ற ஒரு ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் சவாரிக்கு போகாமல் முழுவதும் ஆர்ப்பாட்டத்தை கேட்டுக்கொண்டு இருந்து இருக்கிறார். அப்போது ஆட்டோவுக்கு அருகில் நின்று கொண்டிருந்த போலீஸ்காரர்கள் சிலர் “இவங்க எல்லாம் எதுக்கும் பயப்பட மாட்டாங்க, எவ்வளவு நேரம் ஆனாலும் இருப்பாங்க, தீவிரவாதிங்க” என்றிருக்கிறார்கள். இதைக்கேட்ட ஆட்டோ ஓட்டுனரோ, “நல்லவங்க எல்லாத்தையும்,  போராடுறவங்க எல்லாத்தையும் தீவிரவாதின்னு அப்படியே சொல்ல வேண்டியதுதானே” என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.
காவிக்காலிகளுக்கு எச்சரிக்கை அளிக்கும் விதமாகவும் மக்களை பாதுகாக்க வக்கில்லாத தோற்றுப்போன அரசுக்கட்டமைப்பை தூக்கியெறியவேண்டும் என்பதை அறிவிக்கும் விதமாகவும் இந்த ஆர்ப்பாட்டம் இருந்தது.
தோழர் குமரன், தோழர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், தோழர் கணேசன், தோழர் காளியப்பன், தோழர் விடுதலை ராஜேந்திரன், தோழர் ஆளூர் ஷானவாஸ், தோழர் மில்டன் ஆகியோரின் ஆர்ப்பாட்ட உரைகள் விரைவில் தனிப்பதிவுகளாக வெளியிடப்படும். வினவு.com

கருத்துகள் இல்லை: