சனி, 8 அக்டோபர், 2016

பொறுப்பு முதல்வர்- நெருக்கும் மத்திய அரசு! வைகோ மூலம் சமாதானத்தில் இறங்கிய அதிமுக?

சென்னை: தமிழகத்துக்கு பொறுப்பு முதல்வரை நியமிக்க வேண்டும் என்று மத்திய அரசு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது. ஆனால் அதிமுகவோ மதிமுக பொதுச்செயலர் வைகோ மூலம் சமாதானத்தில் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரிக்க அப்பல்லோ மருத்துவமனையில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வந்து செல்கின்றனர். இந்த வகையில் மதிமுக பொதுச்செயலர் வைகோவும் இன்று வருகை தந்தார்.
ஆனால் வைகோ அப்பல்லோவில் இருந்து நேராக ஆளுநர் மாளிகைக்கு சென்றார். பின்னர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில் பொறுப்பு முதல்வர் என்பதே தேவை இல்லை என ஒரே போடாகப் போட்டார்"வைகோவின் அப்பல்லோ டூ ஆளுநர் மாளிகை விசிட் பல்வேறு யூகங்களை கிளப்பிவிட்டது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 2 வாரங்களாகிவிட்ட நி..


." நெருக்கும் மத்திய அரசு வைகோவின் அப்பல்லோ டூ ஆளுநர் மாளிகை விசிட் பல்வேறு யூகங்களை கிளப்பிவிட்டது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 2 வாரங்களாகிவிட்ட நிலையில் பொறுப்பு முதல்வர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்பது மத்திய அரசின் நிலைப்பாடு.<"அதுவும் தங்களுக்கு சாதகமான ஒருவரை முதல்வராக்குவதில் பாஜக மும்முரமாக இருக்கிறதாம்.. குறிப்பாக தம்பிதுரையை பொறுப்பு முதல்வராக்குவதில் பாஜக ..."


தம்பிதுரைக்கு பாஜக ஆதரவு?
அதுவும் தங்களுக்கு சாதகமான ஒருவரை முதல்வராக்குவதில் பாஜக மும்முரமாக இருக்கிறதாம்.. குறிப்பாக தம்பிதுரையை பொறுப்பு முதல்வராக்குவதில் பாஜக முனைப்பு காட்டுகிறதாம். ஆனால் அதிமுகவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மன்னார்குடி தரப்போ பொறுப்பு முதல்வரே தேவை இல்லை என்கிறதாம்.

இதனால் மத்திய அரசின் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் ஆளுநரின் நண்பரான வைகோவை களத்தில் இறக்கியிருக்கிறதாம் மன்னார்குடி தரப்பு. அதனால்தான் ..." அதிமுகவுக்காக வைகோ" அதிமுகவுக்காக வைகோ
 இதனால் மத்திய அரசின் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் ஆளுநரின் நண்பரான வைகோவை களத்தில் இறக்கியிருக்கிறதாம் மன்னார்குடி தரப்பு. அதனால்தான் அப்பல்லோ வந்த கையோடு ஆளுநரை 'நட்புரீதியாக' சந்தித்து பேசியிருக்கிறார் வைகோ.


40 நிமிடங்கள் நீடித்த இச்சந்திப்பின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தமிழகத்துக்கு தற்போது பொறுப்பு முதல்வர் தேவையே இல்லை என ஒரே போடாகப் போட்டார். அத்துடன் 2009-ல் கருணாநிதி 45 நாட்கள் மருத்துவமனையில் இருந்தபோது பொறுப்பு முதல்வர் கோரிக்கை எழவில்லை எனவும் சுட்டிக்காட்டினார் வைகோ. அதே நேரத்தில் அப்போது துணை முதல்வராக முக ஸ்டாலின் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: