நெட்டை தொட்டதும் ஃபேஸ்புக் சைன் இன் ஆனது. சற்று நேரத்தில்
ஸ்டேட்ஸ் ஒன்றினை அப்டேட் செய்தது. லொக்கேஷன் கிரீம்ஸ் ரோடு என்று காட்டியது. “இன்று ஞாயிற்றுக்கிழமை. அமைச்சர்கள் நிதானமாகத்தான் அப்பல்லோவுக்கு வர ஆரம்பித்தார்கள். முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் காலை ஏழு மணிக்கு அப்பல்லோவுக்கு வந்தார். மெயின் கேட்டில் இருந்த போலீஸார் அவரை தடுத்து நிறுத்தினார்கள். அவர், தான் வந்த இன்னோவா காரில் இருந்து இறங்கி, போலீஸாரிடம் ஏதோ சொன்னார். அதன் பிறகே அவர் உள்ளே அனுமதிக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம், எஸ்.பி.வேலுமணி, உதயகுமார், விஜயபாஸ்கர் என அமைச்சர்கள் ஒவ்வொருவராக ஒன்பது மணிக்குப் பிறகு வந்து சேர்ந்தனர். எல்லோரும் முதல்தளத்தில் உள்ள வெயிட்டிங் ஹாலில்தான் காத்திருந்தனர். பன்னீர் வந்ததும் அவரை நெருங்கிப் போய் பேசினார் நத்தம் விஸ்வநாதன்.
( முதல்வருடன் இப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ்)
இருவர் முகத்திலும் அப்படி ஒரு இறுக்கம். ‘நேற்று கவர்னர் எப்படியாவது அம்மாவை பார்த்துடுவார்னு நினைச்சிட்டு இருந்தோம். கடைசியில அவரும் பார்க்காமல் டாக்டர்களிடம் மட்டும் பேசிட்டு போயிட்டாரு. உள்ளே என்ன நடக்குதுன்னு சின்னம்மா கொஞ்சம் வெளிப்படையாக சொல்லலாம். ஆனால், அவங்க அதை நினைக்கவே மாட்டேங்குறாங்க. அடிமட்ட தொண்டர்களுக்கு உள்ளே என்ன நடக்குதுன்னு சொல்ல வேணாம். அமைச்சர்களுக்காவது சொல்லலாம் இல்லையா... எங்களுக்கும் அம்மா மேல எவ்வளவு பாசம் இருக்குன்னு ஏன் சின்னம்மாவுக்கு புரியலை. சின்னம்மா சொந்தக்காரங்க மட்டும் அம்மா இருக்கும் செகண்ட் புளோருக்கு போறாங்க... வராங்க... அமைச்சர்களை மட்டும் ஏன் அனுமதிக்க மாட்டேன்னு சொல்றாங்க? அதான் பயமா இருக்கு. இதெல்லாம் அம்மாவுக்குத் தெரிந்து இருந்தால் அவங்களே எங்களை உள்ளே வரச்சொல்லி இருப்பாங்க” என்ற வேதனைக் குரல்கள் அப்பல்லோவின் முதல்தளத்தில் இன்று காலையில் இருந்து அதிகமாக கேட்க ஆரம்பித்துள்ளது” என்பதுதான் அந்த ஸ்டேட்ஸ். அதற்கு லைக் போட்டு ஷேர் செய்தது வாட்ஸ் அப்.தொடர்ந்து மெசேஜ் ஒன்றினையும் டைப்பிங் செய்தது வாட்ஸ் அப்.
“லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பேல் இன்று காலை எட்டு மணி அளவில் மருத்துவமனைக்கு வந்தார். சசிகலா உறவினர் டாக்டர் சிவகுமார்தான் அவரை அழைத்து வந்தார். நேற்று ஜெயலலிதாவைப் பரிசோதித்த ஜான் பேல் சில மருந்துகளை லண்டனில் இருந்து வரவழைக்க சொல்லியிருந்தார். இதுபற்றி நேற்று மின்னம்பலத்தில் கூட செய்தி படித்தேன். அந்த மருந்துகள் விமானத்தில் வந்து கொண்டிருக்கிறது. இன்று நள்ளிரவில் அது வந்து சேரும் என்கிறார்கள். அதை நாளை காலை ஜெயலலிதாவுக்கு செலுத்துவாராம் டாக்டர் ஜான் பேல். அதன் பிறகு முதல்வரின் உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றங்கள் கண்காணிக்கப்படுமாம். புதிய மருந்தை ஜெயலலிதா உடல் எந்த அளவுக்கு உடனடியாக ஏற்கும் என்பதும் சொல்ல முடியாது. அதனால் காலையில் டெஸ்ட் இன்ஜக்ஷன் போட்டுப் பார்த்துவிட்டுதான் சிகிச்சை தொடங்க திட்டமிட்டிருக்கிறார்களாம். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று மாலையில் லண்டன் டாக்டரிடம் பேசப் போயிருக்கிறார். ‘எதுவா இருந்தாலும் சிவகுமார்கிட்ட கேளுங்க. அவர் கேட்டு சொல்லுவாரு. ஆளாளுக்கு குழப்ப வேண்டாம்’ என்று ஒரு குரல் கடுமையாக சொன்னதாம். எதுவும் பேசாமல் அமைதியாக திரும்பிவிட்டாராம் ராதாகிருஷ்ணன்” என்ற மெசேஜுக்குச் செண்ட் கொடுத்து ஆஃப் லைனில் போனது வாட்ஸ் அப். மின்னம்பலம்,காம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக