காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உத்தரவை, சுப்ரீம் கோர்ட்,
நேற்று நிறுத்தி வைத்ததால், தமிழகத்திற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு
சேர வேண்டிய தண்ணீரை, காவிரியில் இருந்து திறந்து விடும்படி, சுப்ரீம்
கோர்ட், அடுத்தடுத்து பிறப்பித்து வரும் உத்தரவுகளை, கர்நாடக அரசு,
தொடர்ந்து மீறி வருகிறது.இதனால், கோபமடைந்த நீதிபதிகள், இம்மாதம், 4ம்
தேதிக்குள்,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்படி, மத்திய அரசுக்கு
உத்தரவிட்டனர். இந்நிலையில், திடீர் திருப்பமாக, 'காவிரி மேலாண்மை
வாரியம் அமைக்க வேண்டும் என்ற உத்தரவை வாபஸ் பெற வேண்டும்' எனக்கூறி,
மத்திய அரசு சார்பில், நேற்று முன்தினம், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
செய்யப்பட்டது.
இந்த வழக்கு, நீதிபதிகள், தீபக் மிஸ்ரா, உதய்
லலித் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு முன், நேற்று மீண்டும்
விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி, ''காவிரி
மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உத்தரவை வாபஸ் பெற வேண்டும் அல்லது
இறுதி விசாரணை நடக்கும்,அக்.,18 வரை, ஒத்தி வைக்க வேண்டும்,'' என,
வாதிட்டார். இதற்கு, தமிழக அரசு சார்பில் ஆஜரான, மூத்த
வழக்கறிஞர்,
சேகர் நபாடே கடும் எதிர்ப்பு தெரிவித் தார்.
எனினும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான உத்தரவை, நீதிபதிகள் நிறுத்தி வைத்தனர்; பின், நீதிபதிகள் கூறியதாவது:
காவிரியில், தமிழகத்திற்கு, 24 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட்டுள்ளதாக கர்நாடகா தெரிவித்துள்ளது. நாங்கள் உத்தரவிட்டபடி,மீதமுள்ள, 12 ஆயிரம் கன அடி நீரையும், அக்., 6ம் தேதிக்குள் திறந்து விட வேண்டும். அதன்பின், வரும், 7ல் இருந்து, 18 வரை, தினமும், 2,௦௦௦ கனஅடி, தண்ணீரை திறந்து விட வேண்டும்.
காவிரி படுகையில், எவ்வளவு தண்ணீர் உள்ளது என்பதை, தமிழகம், கர்நாடகா, கேரளா,புதுச்சேரி யைச் சேர்ந்த அதிகாரிகள் இடம் பெற்றுள்ள காவிரி கண்காணிப்புக் குழு ஆய்வு செய்து, அக்., 17ல் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி கள் கூறினர். இதையடுத்து, வழக்கின் அடுத்த விசாரணை, வரும், ௧௮ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
காவிரி படுகையில், எவ்வளவு தண்ணீர் உள்ளதை என்பது குறித்து, மத்திய நீர்வள ஆணைய தலைவர், ஜி.எஸ்.ஷா தலைமையிலான கண்காணிப்பு குழு, வரும், ௭ல் இருந்து, ௧௫ வரை ஆய்வு செய்ய உள்ளது. கர்நாடகா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் உள்ள முக்கிய அணைகளிலும் இந்த குழு, ஆய்வு செய்யும்.
'உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து, தமிழகத்திற்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்' என, மத்திய நீர்வளத் துறை செயலர் சசிசேகருக்கு, தமிழக அரசு தலைமைச் செயலர், ராமமோகன ராவ் கடிதம் எழுதி உள்ளார்.>கடிதம் வருமாறு: காவிரி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, காவிரி மேலாண்மை வாரியத்தை யும், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவை யும் அமைக்க வேண்டும் என, தமிழகம் வலி யுறுத்தி வருகிறது. அதில், காவிரி மேலாண்மை வாரியத்தை, நான்கு நாளில் அமைக்க வேண்டும் என, செப்., 30ல், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையில், மத்திய அரசு, உச்ச நீதிமன்றத் தில், நேற்று முன்தினம் தாக்கல் செய்துள்ள மனுவில், 'செப்., 30ம் தேதி பிறப்பித்த உத்தர வில், திருத்தம் செய்ய வேண்டும்;
காவிரி மேலாண்மை வாரியத்தை, தற்போது அமைக்க இயலாது' என, குறிப்பிட்டுள்ளது. மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனு, உச்ச நீதிமன்றத் திற்கு அளித்த உறுதி மொழிக்கு எதிராக அமைந்துள்ளது. மத்திய அரசின் நிலைப்பாட்டில், ஏன் திடீர் மாற்றம் ஏற்பட்டது என்பது புரிய வில்லை.
மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவை, உடனடியாக திரும்ப பெற வேண்டும்.உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து, தமிழகத்திற்கு நீதி கிடைக்க செய்ய வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார் தினமல,காம்

ஆய்வு செய்யும் குழு

காவிரி மேலாண்மை வாரியம்: தலைமை செயலர்கடிதம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக