thetimestamil.com ; மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைது
செய்யப்பட்ட ராம்குமார், சந்தேகத்துக்குரிய வகையில் புழல் சிறையில் மரணமடைந்தார். ஆறு நாட்களுக்குப் பிறகு நடந்த உடல்கூராய்வுக்குப் பிறகு அவருடைய உடல், சொந்த ஊரான மீனாட்சி புரத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
ராம்குமார், சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டதிலிருந்து அவர் இந்த வழக்கில் காவல்துறையால் சிக்கவைக்கப்பட்டிருக்கிறார் என சொல்லிவருபவர் திலீபன் மகேந்திரன். இந்த வழக்குத் தொடர்பாக பல்வேறு விவரங்களைத் திரட்டி ராம்குமாரின் வழக்கறிஞருக்கு இவர் அளித்தார். ராம்குமார் மரணமடைந்த நிலையில் அவருடைய இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட திலீபன் பகிர்ந்துள்ள உருக்கமான பதிவு இங்கே:
“தோழர் ராம்குமார்.

இது வரைக்கும் நா கையிலெடுத்த எந்த விஷயத்துல தோத்தது இல்ல.. இந்த
ராம்குமார் விஷயத்திலேயும் அப்படிதான் வெற்றிக்கு ரொம்ப பக்கம் போனோம்.. 90
நாள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால ராம்குமார ஜாமின்ல வெளிய
விட்டுதான் ஆகனும் வேறவழி இல்ல.. அதுக்குள்ள கொன்னுட்டாங்க..
அவன உலகமே கொலையாளின்னு சொல்லும்போது அவன கைது பன்ன முதல் நாள்ல இருந்து, நிரபராதினு நிருபிச்சி எப்டியாவது வெளிய கூப்டு வந்து அவங்கூட கெத்தா நின்னு செல்பி போடனும்னு ரொம்ப ஆசப்பட்டேன் ஜெயில்லையே கொன்னுட்டாங்க..

ராம்குமார் கடைசியா கோர்ட்டுக்கு வரும்போது நாங்க அவன உயிரோட பாத்தோம்.
நானும் முரளியும் “ராம்குமார், ராம்குமாருன்னு” கத்துனோம் நூற்றுக்கணக்கான
போலிசையும், மீடியாவையும் தாண்டி எங்க குரல் அவன் காதுல கேக்கல..
கடைசியில ஆயிரக்கணக்கானோர் சவ ஊர்வலத்துல அவன் சவப்பெட்டிய என் தோள்ல சுமக்கதான் முடிஞ்சிது…
போஸ்ட்மார்டத்துல இருந்து, அவன சவக்குழியில பொதைக்குற வர அவன்கூடதான் இருந்தேன்.
அவுங்கப்பா அவ்ளோ துக்கத்திலையும் அவுங்க சொந்தங்காரங்கள்ட என்ன அறிமுக படுத்தும்போது இவன்தான் இப்ப எங்க “ராம்குமார்”, என் மவன்” எங்களுக்காக அவ்ளோ மெனக்கெட்டான்..னு சொன்னாரு.. நா என்ன பதில் சொல்றதுன்னு தெரியல.
என் அப்பாவுக்கே நா இதுவர ஒன்னும் செஞ்சது இல்ல.
ராம்குமாரோட ரெண்டு தங்கச்சியும் ” அண்ணன், அண்ணன்னு” சொல்றாங்க.
அவுங்க அம்மாவுக்கு என்னால ஆறுதல் சொல்ல முடியல. எந்நேரமும் அழுதுட்டே இருக்காங்க.. என்னால பேச முடியல..
என்னய்ய ராம்குமாரோட சாவு சடங்கு வரைக்கும் இங்கையே தங்க வச்சிட்டாங்க.. ராம்குமார் தூங்குன அதே இடம், ராம்குமாரோட சட்ட, கைலி அதுதான் இப்ப எனக்கு…
என்னால முடிஞ்சவர முயற்சி பன்னேன். தோழர் ராம்ராஜுக்கு வழக்குல உதவி செஞ்சேன், நா ஜெயிலுக்கு போறதுக்கு முன்னாடி வரைக்கும் (Aug 25) தோழர் தமிழச்சி மூலமா சேதிய பரப்புனேன். மூன்று முறை தோழர் கு.ரா வை கோயம்புத்தூர்ல பார்த்து விஷயத்த சொன்னேன்..
தனியா செயல்பட்டா உதவாதுன்னுதான் இப்டி செஞ்சேன்.. அதுக்குள்ள என்ன கைது செஞ்சி மொபைல புடிங்கி 13 நாள் ஜெயில்ல அடைச்சி ராம்குமார் பத்தி விஷயத்த சேகரிக்கிறத மந்தம் பன்னிட்டாங்க..
3 நாளைக்கு பிறகு அவனுக்கு காரியம் வச்சிருக்காங்க முடிஞ்சவங்க உதவுங்க… அவுங்க ஏற்கனவே தன் மகன் உட்பட அனைத்தையும் இழந்துட்டாங்க..
ராம்குமார் அம்மாவோட அக்கவுண்ட்.
Name:p.pushpam
W/o Parama sivan. R
bank name:Canara bank.
a/c no:1116108041549 branch:Shengottai ifsc:cnrb0001116”

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக