வெள்ளி, 7 அக்டோபர், 2016

தற்காலிக முதல்வரை அறிவிக்க வேண்டிய அழுத்தத்தில் ,.......

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி மும்பையிலிருந்து 1-ந் தேதி மாலை
சென்னை திரும்பிய கவர்னர் வித்யாசாகர் ராவ், அப்பல்லோ சென்று மருத்துவர்களை சந்தித்துவிட்டு ராஜ்பவனுக்குத் திரும்பினார். அடுத்த சில நிமிடங்களில், ""முதல்வர் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்'' என்கிற அறிக்கை கவர்னர் சார்பில் வெளியானது. அறிக்கையின் எந்த ஒரு இடத்திலும் ஜெயலலிதாவை பார்த்துப் பேசியதாக சின்ன குறிப்புகூட இல்லை. கவர்னரின் அப்பல்லோ விசிட் குறித்து விபரமறிந்த உயரதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது, ""அப்பல்லோ வந்த கவர்னரை தலைமைச் செயலாளர் ராமமோகனராவும் மருத்துவமனையின் உரிமையாளர் டாக்டர் பிரதாப் ரெட்டியும் வரவேற்றனர். கவர்னரை தனது சேம்பருக்கு அழைத்துச்சென்றார் ரெட்டி. ஜெயலலிதாவின் உடல்நலம் சார்ந்த பிரச்சினைகள், அதற்காக அவருக்கு கொடுக்கப்பட்டு வரும் சிகிச்சைகள், லண்டன் டாக்டர் கொடுத்த சிகிச்சைகள் என அனைத்தையும் கவர்னரிடம் பிரதாப் ரெட்டி விவரித்திருக்கிறார். சில மெடிக்கல் ரீதியான வார்த்தைகளின் அர்த்தத்தை திரும்பக் கேட்டு புரிந்துகொண்டார் கவர்னர். "முதல்வரை பார்க்க முடியுமா?' என கவர்னர் கேட்டிருக்கிறார். அதற்கு, மருத்துவமனையின் நடைமுறைகளைச் சொல்லியிருக்கிறார் ரெட்டி. அதனை புரிந்து கொண்ட கவர்னர், "அப்படியானால் வேண்டாம்' என தெரிவித்திருக்கிறார்.


அதன்பிறகு, முதல்வர் இருக்கும் வார்டுவரை கவர்னரை அழைத்துச்சென்றார் ரெட்டி. அங்கு ஜெ.வுக்கு சிகிச்சை அளிக்கும் மற்ற டாக்டர்களை கவர்னருக்கு ரெட்டி அறிமுகப்படுத்த அவர்களிட மும் சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார். அப்பல்லோவிலிருந்து கிளம்பும்போது, "முதல்வரின் உடல்நிலை குறித்து மத்திய அரசு உன்னிப்பாக கவனிக்கிறது. அவருக்கு கொடுக்கப்படும் சிகிச்சைகளை வெளிப்படையாக தெளிவு படுத்திவிடுங்கள். கால தாமதம் வேண்டாம். மத்திய அரசு இதனை எதிர்பார்க்கிறது' என சொல்லிவிட்டு ராஜ்பவனுக்கு திரும்பிவிட்டார்.

இதனையடுத்துதான் காய்ச்சல் என்று மட்டுமே சொல்லிவந்ததற்கு மாறாக, முதல்முறையாக ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கூடுதல் தக வல்களுடன் 2-ந் தேதியும் இன்னும் கூடுதல் தகவல்களு டன் 3-ந் தேதியும் ப்ரஸ் ரிலீஸ் செய் தது அப்பல்லோ நிர்வாகம்'' என் கிறார்கள்.

அப்பல்லோவிலிருந்து கவர்னர் கிளம்பியதும் ரெட்டியை சந்தித்து விபரமறிந்தார் சசிகலா. முதல்வரின் உடல் நிலையில் மத்திய அரசு நேரடியாக தலையிடுகிறது என்கிற யதார்த்த நிலையை உணர்ந்த அவர் தனது ராஜ ஆலோசனை வட்டாரத்தில் ஆலோசித்தார். அதன்பிறகு, "கவர்னரின் அறிவுறுத்தலின்படி செயல்படுங்கள்' என ரெட்டியிடம் தெரிவித்திருக்கிறார் சசிகலா. ராஜ்பவனை கவர்னர் அடைந்த அடுத்த ஐந்தாவது நிமிடம், "முதல்வ ருக்கு கொடுக்கப்படும் சிகிச்சைகள் குறித்து அடுத்தடுத்து தெளிவுபடுத்தப்படும்' என்கிற உறுதியை அப்பல்லோ நிர்வாகம் ராஜ்பவனுக்கு தெரிவித்திருக்கிறது'' என்கிறார்கள் அரசு அதிகாரிகள்.

"இந்த உறுதிமொழியை மருத்துவமனை நிர்வாகம் தந்ததனால்தான் சர்ச்சைகளை ஏற்படுத்தாத வகையில் கவனமான அறிக்கை ராஜ்பவனிலிருந்து வெளியிடப்பட் டது. இல்லையெனில், ஜெ.வின் உடல் நலம் குறித்து அப்பல்லோ மருத்துவர்கள் சொன்ன தகவல்களின் அடிப் படையில் விரிவான ஒரு அறிக்கையை கவர்னரே கொடுத் திருப்பார் என்கிறது ராஜ்பவன் வட்டாரம்.

ராஜ்பவன் திரும்பிய கவர்னர் வித்யாசாகர்ராவ், அப்பல்லோ விசிட் குறித்த முழுமையான ரிப்போர்ட்டை அன்று இரவே பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அதில் நிறைய தகவல்கள் சொல்லப்பட்டிருக்கிறதாம். இதற்கிடையே, டெல்லியிலுள்ள மத்திய உள் துறையின் உயரதிகாரிகள் ஜெயலலிதாவின் உடல் நலம் சார்ந்த உண்மையான -முழுமையான ரிப்போர்ட்டுகளை மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டுப் பெற்றிருக்கிறார் கள். அந்த ரிப்போர்ட்டும் பிரதமர் அலுவலகத்தில் இருக்கிறது.

அதில், ""முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் உயரிய சிகிச்சை பலன் தரக்கூடியது. உடல் நலம் குணமடைந்து அவர் வீடு திரும்பிய பிறகும் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருக்கவேண் டும் என்பதே டாக்டர்களின் அட்வைஸாக இருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில், முதல்வர் பொறுப்பில் அவர் முழுகவனம் செலுத்துவது கடினம்'' என்கிற ரீதியில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாக டெல்லி அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தில் மத்திய அரசின் நிலை உள்ளிட்ட முக்கிய ஆலோசனையில் இருந்த பிரதமர் மோடியிடம் 3-ந் தேதிதான் தமிழக பொறுப்பு கவர்னரின் அறிக்கையைக் கொண்டுபோயிருக் கிறார்கள் அவரது செயலாளர்கள். அதன் பிறகு ஒரு நீண்ட ஆலோசனை நடந்திருக் கிறது. அதனைத்தொடர்ந்து தமிழக கவர்ன ருக்கு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.

இதனையறிந்து கோட்டை அதிகாரிகளி டம் நாம் விசாரித்தபோது, ""மத்திய உள்துறை மற்றும் கவர்னரின் ரிப்போர்ட்டுகளைத் தொடர்ந்து கவர்னரிடம் பேசிய பிரதமர் அலு வலகம், "தற்போதைய நிலையில் முதல்வரின் உடல்நிலை மிக முக்கியமானது. அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது. அவரால் ஆக்டிவ் வாக செயல்பட முடியாத சூழல் இருப்பதால் ஆக்டிங் சி.எம். ஒருவரை விரைவில் நியமிக்க அறிவுறுத்துங்கள்' என சொல்லியிருக்கிறது. இதனை அரசு தரப்புக்கு தெரிவித்திருக்கிறார் கவர்னர்'' என்கிறார்கள்

அதிகாரிகள். இதனை நோக்கி டெல்லியிலும் சென் னையிலும் ஆலோசனைகள் வலுப்பெற்று வருகின்றன. பொறுப்பு முதல்வரை நியமிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தமிழக அரசு ஆளாகியிருப்பதால், யாருக்கு அந்த அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது என்கிற பெட்டிங் அ.தி.மு.க.வின் மேல் மட்டத்தில் விறுவிறுப்பாகியிருக்கிறது.

முக்கிய தலைகள் பலரும் இதற்கான காய்களை நகர்த்தி வந்தாலும் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவருக்கே வாய்ப்பு கிடைக்கலாம் என்கிறார்கள். இதற்கிடையே, தமிழகத்தில் தங்களுக்கு தோதான ஒரு அரசை அமைக்கும் பலே திட்டத்தில் இருக்கிறது மத்திய அரசு. -இரா.இளையசெல்வன்  நக்கீரன்,இன்

கருத்துகள் இல்லை: