26 kids killed by snake bite' ... in government run tribal welfare residential schools in Telangana sinceமின்னம்பலம்,காம் :தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தெலங்கானா மாநில அரசை, பழங்குடியினர் நல விடுதியில் தொடர்ந்து ஏற்படும் இறப்புகள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
தெலங்கானாவில், 2014ஆம் ஆண்டு முதல் பழங்குடியினர் நல விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களின் இறப்பு அதிகமாகிக்கொண்டே செல்வதை சுட்டிக்காட்டி, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம், தெலங்கானா மாநிலத்தின் தலைமை செயலாளர் ராஜீவ் சர்மாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், உடனடியாக அந்த விடுதியின் கட்டமைப்பு மாற்றி அமைக்க வேண்டும் எனவும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருக்கிறது.
இதுகுறித்து தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் ஸ்டுடி கேகர் கூறியதாவது: ஆகஸ்ட் மாதத்தில் கம்மம் மாவட்டத்தில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையக் குழு மற்றும் தெலங்கானாவின் குழந்தைகள் பாதுகாப்பு குழுவும் இணைந்து இரண்டு நாள் ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில், பழங்குடியினர் நல விடுதியில் கடந்த இரண்டு வருடத்தில் மட்டும் பாம்பு தீண்டியும், தேள் கடித்தும் 26 மாணவர்கள் இறந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனால் தெலுங்கானா மாநிலத்தின் தலைமை செயலாளரை உடனடியாக அந்த விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களைப் பாதுகாப்பான, பெரிய இடத்தில் தங்க வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம். மேலும், அந்த குழந்தைகளுக்கு சத்தான உணவு அளிப்பதை உறுதிசெய்ய வேண்டும். கம்மம் மாவட்டத்திலுள்ள அனைத்து பழங்குடி குடியிருப்பு பள்ளிகளில் மருத்துவரை நியமிக்க வேண்டும். 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் சேவை இருக்க வேண்டும் என கூறினார்.
இதற்கிடையில், மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம், தெலுங்கானா அரசு, பாம்பு மற்றும் தேள் கடியால் இறந்த 26 குழந்தைகளின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் எட்டு லட்சம் இழப்பீடாக அளிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.
தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் ஆகஸ்ட் மாதத்தில் 26 குழந்தைகள் பாம்பு மற்றும் தேள் கடியால் உயிரிழந்ததையடுத்து கம்மம் மாவட்டத்திலுள்ள மூன்று விடுதிகளைப் பார்வையிட்டனர். அப்போது விடுதிகளின் சுகாதாரம் மிக மோசமான நிலையில் இருப்பதை கண்டறிந்தனர். வனங்கள் சூழ்ந்த பகுதியில் கட்டப்பட்டிருக்கும் விடுதியில் குழந்தைகள் தரையில் தூங்கவேண்டிய நிலைமை உள்ளது. மேலும் அங்கு கழிவறைகள் இல்லை என்கிற பல விஷயங்களை இந்த ஆய்வின் மூலம் ஆணையம் கணடறிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இறந்த 26 குழந்தைகளில் எட்டுபேர் பெண் குழந்தைகள் என்பது மிகவும் வருத்தத்துக்குரியது. விடுதியில் தரையில் படுத்திருக்கும்போது, பாம்பு கடித்து இறந்துள்ளது தெரிய வந்தது.
தமிழ்கம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் தாழ்த்தப்பட்டோர் நல விடுதிகளிலும் பழங்குடியினரின் நல விடுதிகளிலும் அடிப்படை வசதிகளை செய்து தருவதில்லை. இதனால், கல்வி கற்க ஆர்வத்துடன் வரும் குழந்தைகள் தங்களுடைய இருப்பிடத்துக்கே திரும்பி விடுகின்றனர். இதனால் அவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. இது, மீண்டும் அவர்களை ஏழ்மையிலேயே அவர்களை வைத்திருக்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக