sudha :சென்னை: ஆளுநர் மாளிகை இன்று வெளியிட்ட அறிக்கையில் முதல்வர்
ஜெயலலிதாவுக்கு உரிய வகையில் மரியாதை தரப்படாதது அதிமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. என்று மட்டுமே அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வழக்கமாக இடம் பெறும் Honourable என்ற அடைமொழி இல்லை. அதாவது மாண்புமிகு இல்லை. முதல்வர் ஜெயலலிதாவின் பெயரும் கூட அதில் இடம் பெறவில்லை. மாறாக வெறும் "முதல்வர்" என்று கூறி விட்டு நிறுத்தி விட்டனர். அதுவும் கூட ஒரே ஒரு இடத்தில் மட்டுமே முதல்வர் என்ற வார்த்தை வருகிறது. இந்த அறிக்கையைப் பார்த்தால் ஆளுநர் வசம் தமிழக ஆட்சி மாற்றப்பட்டு விட்டதோ என்ற தோற்றம் வருவதைத் தவிர்க்க முடியவில்ல. அதிகாரப்பூர்வமில்லாத வகையில் ஆளுநர் வசம் தமிழக ஆட்சி போய் விட்டதாகவே தோன்றுகிறது.
அதை விட முக்கியமாக தமிழகத்தில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று சுப்பிரமணியன் சாமி உள்துறை அமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறார். அடுத்த சில மணி நேரங்களில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அப்பல்லோ வருகிறார். அடுத்த சில மணி நேரங்களில் இந்த சந்திப்பு நடக்கிறது. எல்லாவற்றையும் கோர்த்துப் பார்த்தால் சம்திங் சம்திங் புரியும்.
இன்று வெளியிடப்பட்ட ஆளுநர் மாளிகை அறிக்கை இதுதான்:
மாண்புமிகு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பின் பேரில் தமிழக சட்டசபையின் முன்னவரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ராஜ்பவனுக்குச் சென்று ஆளுநரை சந்தித்தனர். அவர்களுடன் தலைமைச் செயலாளர் ராம் மோகன ராவும் உடன் இருந்தார். முதல்வரின் உடல் நிலை குறித்து பொறுப்பு ஆளுநர், அமைச்சர்களிடம் கேட்டறிந்தார். எதிர் வரும் காவிரி உயர் மட்ட தொழில்நுட்பக் குழுவின் தமிழக வருகை குறித்து அமைச்சர்களிடம் ஆளுநர் கேட்டறிந்தார், விவாதித்தார். அவர்களது வருகை தொடர்பான ஏற்பாடுகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார். தமிழக விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில், கமிட்டியிடம் வைக்கப்பட வேண்டிய விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார். மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் இதுதொடர்பான விவரங்களை விரிவாக எடுத்துரைத்தார்.
இதுதவிர தமிழக அரசின் பொது நிர்வாகம் குறித்தும் ஆளுநர் கேட்டறிந்தார். நிர்வாக விவகாரங்கள் குறித்தும், தினசரி நிர்வாக செயல்பாடுகள் குறித்தும் ஆளுநரிடம் தலைமைச் செயலாளர் விரித்துரைத்தார் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
ஆளுநர் வசம் ஆட்சி போய் விட்டதா என்பதை மத்திய அரசோ அல்லது ராஜ்பவனோதான் விளக்க வேண்டும். அல்லது தமிழக அரசின் தலைமைச் செயலாளர் விளக்க வேண்டும். அல்லது தமிழகத்தின் மூத்த அமைச்சரான ஓ.பன்னீர் செல்வம் விளக்க வேண்டும். ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லை என்பதையும் நாம் மறுக்க முடியாது. tamiloneindia.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக