புதுடில்லி: ஜனாதிபதி தேர்தலில் தானும் போட்டியிட போவதாக பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி தெரிவித்துள்ளார்.
நாட்டின் 13வது ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல் அரசியல்
கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஒரு வழியாக
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக மத்திய நிதியமைச்சர் பிரணாப்
முகர்ஜி அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தங்களது வேட்பாளரை தேர்வு
செய்யும் பணியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஈடுபட்டுள்ளது.இந்நிலையில், திடீர் திருப்பமாக ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப்போவதாக பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜி தனது நண்பர். எனினும் அவரது தேர்வை தான் எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் கறுப்பு பணத்தை பதுக்கியுள்ளவர்களின் பெயர்களை அவர் வெளியிடவில்லை. இந்த தேர்தலில் தான் தோல்வியை தழுவலாம். எனினும் தான் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளதாகவும், உண்மையை வெளிக்கொண்டுவரப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்சமயம் ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ள ராம்ஜெத்மலானி, பா.ஜ., ஆதரவுடன் ராஜஸ்தானில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக