வெள்ளி, 22 ஜூன், 2012

நேற்று ஐரோப்பிய பங்குச் சந்தையில், இடியோசை கேட்ட நாகங்கள்!

Viruvirupu
ஐரோப்பிய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள ‘எதிர் காற்று’, அமெரிக்க பொருளாதாரத்தின் நிச்சயமின்மை, மற்றும் சீனாவில் பொருளாதாரமும் சறுக்கத் துவங்குவது ஆகியவை, உலக அளவில் முதலீட்டாளர்களை நேற்று திகிலடைய வைத்தன. 
நேற்று (வியாழக்கிழமை) Dow Jones industrial average, 250 புள்ளிகளில் வந்து முடிந்தது. இது ஒரே நாளில் சுமார் 2% வீழ்ச்சி!
அது மட்டுமல்ல, ஐரோப்பிய பங்குச் சந்தையில் பல முக்கிய பங்குகள், தினசரி சராசரியைவிட அதிகம் கீழே இறங்கின.
ஐரோப்பிய பங்குச் சந்தையின் தடுமாற்றத்துக்கு காரணம், ஸ்பெயின் பற்றி நேற்று வெளியான
யூரோ முதலீடுகளில் உள்ளீர்களா? .. அதி ஜாக்கிரதையாக இருங்கள்!
ஒரு அறிவிப்புதான். ஸ்பெயினில் தற்போது ஏற்பட்டுள்ள பேங்க் திவால் நிலைகளை தடுப்பதற்கு, 78.7 பில்லியன் யூரோ பணம் தேவை என்பதே அந்த அறிவிப்பு. அவ்வளவு பணத்தை ஸ்பெயினில் முதலீடு செய்ய யாரும் முன்வரப் போவதில்லை.

ஐரோப்பிய நிறுவனங்கள் பல, தாம் ஏற்கனவே ஸ்பெயினில் செய்த முதலீடுகளுக்கு என்ன ஆகுமோ என்ற கலக்கத்தில் உள்ளதால், நேற்றைய அறிவிப்பு வெளியானவுடன், ஸ்பெயினுடன் தொடர்புடைய ஐரோப்பிய நிறுவனங்களின் பங்குகள் முதலில் குப்புற வீழ்ந்தன. தொடர்ந்து ஒரு செயின் ரியாக்ஷனாக, மற்றைய ஐரோப்பிய பங்குகளும் நாள் முழுவதும் ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் தள்ளாடின.
சர்வதேச ரேட்டிங் ஏஜென்சி மூடி (Moody’s) இன்று (வெள்ளிக்கிழமை) உலகின் பிரபல பேங்குகள் பலவற்றின் ரேட்டிங்குகளை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்டனின் Barclays, ஜேர்மனியின் Deutsche Bank ஆகியவற்றின் ரேட்டிங்குகள் இன்று குறைக்கப்படும் என்று ஐரோப்பிய முதலீட்டாளர்களிடையே பேச்சு அடிபடுகிறது. அத்துடன், அமெரிக்க வங்கி ஜாம்பவான்களான Citigroup-ன் ரேட்டிங்கும் குறையலாம் என ஊகிக்கப்படுகிறது.
இந்த இழுபறிகளால், நேற்று ஐரோப்பிய முதலீட்டாளர்களிடையே ஏற்பட்ட பதட்ட நிலை இன்றும் தொடர வாய்ப்புண்டு.

கருத்துகள் இல்லை: