சென்னை: வேண்டும் என்றே திமுகவினர் மீது பொய்
வழக்குப் போடும் ஒரு அதிகாரியையும் விடாமல் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் திமுக செயற்குழுக் கூட்டம் பெரும் பரபரப்புக்கு, எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்து வருகிறது.இந்தக் கூட்டத்தில் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள், அதிமுக அரசு கட்சியினருக்கு எதிராக போட்டு வரும் பொய் வழக்குகளை முறியடிக்க என்ன செய்யலாம் என்பது குறித்து கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இந்தக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாக அங்கிருந்து கிடைத்த தகவல் வருமாறு...
திமுகவினர் மீது அடுக்கடுக்காக அதிமுக அரசு பொய் வழக்குகளைப் போட்டு வருகிறது. இதை சட்ட ரீதியாக, போராட்டங்கள் மூலமாக நாம் சந்திப்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.
ஆனால் ஒருவரை விடுவித்தவுடன் மீண்டும் காவல்துறை அதிகாரிகள் அவர்களைக் கைது செய்கின்றன். பொய்யான புகார் என்று தெரிந்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள், வழக்குப் போடுகிறார்கள். அதாவது தெரிந்தே பொய் வழக்குப் போடுகின்றனர்.
அதிமுக ஆட்சியையும், அவர்களின் பொய் வழக்குகளையும் நாம் ஜனநாயக ரீதியாக, சட்டரீதியாக சந்திக்கும் அதே நேரத்தில் பொய்யான வழக்குகளை, வேண்டும் என்றே திமுகவினர் மீது போடும் அதிகாரிகளையும் நாம் சும்மா விடக்கூடாது. அவர்கள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், அவர்கள் மீதும் வழக்குத் தொடர வேண்டும் என்று ஆவேசமாக பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக