ஞாயிறு, 17 ஜூன், 2012

தி.மு.க.,வில் கல(க்)கக்குரல் முடிவை மாத்தியிருக்கலாமே..

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் கணிசமான ஓட்டுகளைப் பெற்று தே.மு.தி.க., டெபாசிட் பெற்றுள்ளது தி.மு.க.,வில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 thangairaja - Dammam,சவுதி அரேபியா
2012-06-17 01:02:13 IST Report Abuse
என்னை பொறுத்தவரை அன்று எழுதியதை இப்போதும் கூறுகிறேன்.தேர்தல் புறக்கனிப்பெல்லாம் திமுகவுக்கு ஒத்து வராது. அதிமுக வை போல திமுகவுக்கு அதிகாரவர்க்கத்தின் பக்க பலம் கிடையாது. தொண்டர் பலமே பெரிது என்பதால் நின்று பார்த்திருக்க வேண்டும். இனியும் இது போன்ற தவறுகளைi செய்வது நல்லது அல்ல.
 
இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தியதைக் கேட்காமல், கட்சித் தலைமை எடுத்த முடிவால், கட்சிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கலக்கக் குரல் எழுந்துள்ளது.
புறக்கணிப்புக்கு காரணம்: புதுக்கோட்டை இடைத்தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே வேட்பாளரை அறிவித்து, அ.தி.மு.க., களமிறங்கிய நிலையில், தேர்தல் களத்தை சந்திப்பதில் தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டது. ஏற்கனவே சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், கருணாநிதி உருக்கமான வேண்டுகோள் விடுத்தும் அதற்கு பலன் கிடைக்காமல், டெபாசிட் பறிபோன நிலையில், புதுக்கோட்டையிலும் சரிவைச் சந்திக்க வேண்டுமா என்பதுதான் குழப்பத்திற்கு காரணம்.
தி.மு.க.,வின் அதிகார மையங்களாக உள்ளவர்களிடம், இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து மாறுபட்ட கருத்துகள் கிடைத்துள்ளதால் குழப்பம் அதிகரித்தது. "ஒற்றுமையாக தேர்தல் பணியாற்றினால், ஆளுங்கட்சிக்கு கடும் சவாலைக் கொடுக்க முடியும்' என்று ஒரு பிரிவும், "போட்டியிட வேண்டாம்' என்று மறு பிரிவும் வலியுறுத்தின. குறிப்பாக, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாலும், புதுக்கோட்டை தொகுதியில் பழைய ஓட்டுக் கணக்கை மனதில் வைத்தும் தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவை தி.மு.க., தலைமை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் கூறுகின்றனர் தி.மு.க., முன்னணியினர். இறுதியாக, தேர்தல் கமிஷன் மீது, குற்றம்சாட்டி தேர்தலைப் புறக்கணிப்பதாக கருணாநிதி அறிவித்தார். இடைத்தேர்தல் களத்தில் தி.மு.க., பின்வாங்கிய நிலையில், தே.மு.தி.க., தனது "திராணி'யைக் காட்ட களமிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அதிகரித்த ஓட்டுகள்: ஆளுங்கட்சி சார்பில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாநில நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் என பெரும் பட்டாளம் தேர்தல் களத்தை சந்தித்தன. தே.மு.தி.க., டெபாசிட் வாங்கக் கூடாது என்பதில், அ.தி.மு.க., கங்கணம் கட்டிக் கொண்டு தேர்தல் பணியில் ஈடுபட்டது. ஆனால், தேர்தல் முடிவு அதற்கு மாறாக அமைந்தது. தே.மு.தி.க., 30 ஆயிரத்து 500 ஓட்டுகள் பெற்று, டொபாசிட்டை தக்கவைத்துள்ளது. அதோடு, கடந்த 2006ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் பெற்ற ஓட்டுகளை விட, இடைத்தேர்தலில் தே.மு.தி.க., கூடுதலாக 15 சதவீதம் ஓட்டுகளை பெற்றுள்ளது. தே.மு.தி.க., பெற்ற ஓட்டுகள் ஆளுங்கட்சிக்கு மட்டுமல்லாது, தி.மு.க., விற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாரிசுகள் அதிர்ச்சி: தே.மு.தி.க.,வின் இந்த வளர்ச்சி, தங்களது எதிர்காலத்திற்கு சிக்கலை ஏற்படுத்தும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. தி.மு.க.,வில் நாளைய தலைவராக துடிக்கும் மூன்று வாரிசுகளுக்கும், தங்களது எதிர்காலத்தை விஜயகாந்தின் வளர்ச்சி பாதிக்குமோ? என்ற கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. "ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்' என்றும், "தேர்தலில் போட்டியிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் டெபாசிட் பறிபோக வேண்டும்' என்றும் முதல்வர் ஜெயலலிதா விடுத்த வேண்டுகோளும் தேர்தல் முடிவுகளில் நிறைவேறாதது தி.மு.க.,விற்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், தே.மு.தி.க.,வின் வளர்ச்சி, அவர்களுக்கு அதிர்ச்சியையே கொடுத்துள்ளது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

- நமது நிருபர்

கருத்துகள் இல்லை: